World

ஒரே அறிவிப்பு சுக்கு நூறாக நொறுக்கிய மோடி தரமான சம்பவம் !

Modi
Modi

இந்தியா சர்வதேச விவகாரங்களை தனக்கு சார்பாக திருப்பிகொள்வதில் இப்பொழுதெல்லாம் அடித்து ஆடுகின்றது, மோடியின் ஆட்சியில் அவ்வளவு அழகான வியூகங்கள் வகுக்கபடுகின்றன‌, இப்பொழுது ஜி20 மாநாட்டை அப்படி திருப்புகின்றார் மோடி.


ஜி20 மாநாடு ஆண்டுக்கொருமுறை நடக்கும் இம்முறை வரும் நவம்பரில் இந்தோனேஷியாவில் நடக்க இருக்கின்றது, அந்த மாநாட்டில் புட்டினும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியும் கலந்துகொள்ள வேண்டும் ஆனால் வருவார்களா என உலகம் பரபரப்புடன் எதிர்பார்க்கின்றது.

புட்டீனுக்கு மேலை உலகெல்லாம் தடைவிதிக்கபட்ட நிலையில், புட்டீன் வந்தால் நான் வரமாட்டேன் என செலன்ஸ்கி அறிவித்துவிட்ட நிலையில் நவம்பர் ஜி20 மாநாடு எதிர்பார்க்கபடுகின்றது, இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறும், இங்குதான் மோடி சிரிக்கின்றார்.

அடுத்த ஆண்டுக்கான ஜி20 மாநாடு இந்திய மாகாணம் காஷ்மீரில் நடைபெறும் என இந்திய அரசு அறிவித்திருப்பது உலகளவில் கவனம்பெறுகின்றது, யாரும் எதிபாரா விஷயம் இது, இந்திய காஷ்மீர் என்பது உலகளவில் 70 ஆண்டுகளாக அரசியல்செய்யபட்ட இடம், ஒரு பகுதி இந்தியாவுக்கும் மறுபகுதி பாகிஸ்தானுக்கும் சிறுபகுதி சீனாவுக்குமாக கைபற்றபட்டு சிக்கலானது.

பாகிஸ்தான் அது அபகரிக்கபட்ட பகுதி என்பதால் "சுதந்திர காஷ்மீர்" என சொல்லிகொள்ளும் ஆனால் கட்டுபாடு முழுக்க அவர்களுடையது,இந்தியா காஷ்மீரை முறையாக இணைத்தநாடு என்பதால் தன் நாட்டின் பகுதி என சொல்லும் ஆனால் சிறப்பு அந்தஸ்து கொடுத்து வைத்திருந்தது, இந்திய ஜனாதிபதி அங்கு செல்ல கூட அனுமதி வேண்டும்.

மோடி அரசு அந்த சட்டபிரிவினை ரத்துசெய்து காஷ்மீரை முழுக்க தன்னோடு இணைத்து இப்பொழுது வளர்ச்சிபணிகள் தீவிரமாகின்றன‌, எப்பொழுது காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யபட்டதோ அப்பொழுதே முழு காஷ்மீரும் இந்தியாவுக்கு சொந்தம் என பாகிஸ்தானுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது, இந்தியா பெரும் நடவடிக்கை எடுத்தால் தன் பக்க காஷ்மீரும் இந்தியாவுக்கே செல்லும் என்பது பாகிஸ்தானுக்குமட்டுமல்ல உலகுக்கே தெரியும்.

ஆனால் இந்தியா தான் மட்டும் அதுபற்றி பேசாமல் உலக நாடுகளையெல்லாம் பேசவைக்க முடிவு செய்தது, முதல்கட்டமாக பெரும் பொழுதுபோக்கு பூங்கா திட்டங்களுக்காக துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளை காஷ்மீரில் அனுமதித்தது, அரபு ஷேக்குகள் பல்லாயிரம் டாலரை கொட்டும் நிலையில் பாகிஸ்தானால் பேசமுடியவில்லை.

இந்நிலையில் ஜி20 நாடுகள் கூட்டம் காஷ்மீரில் நடக்கும் என அறிவித்தது இந்தியா எல்லா நாடுகளும் அதை வரவேற்றன அதாவது காஷ்மீர் இந்தியாவின் பகுதி என அவை முடிவுசெய்துவிட்டன‌.

மகாபாரத துரியோதனன் வீழ்ந்துகிடக்கும் பொழுது தான் சண்டையிடமுடியாமல் அஸ்வத்தாமனிடம் அழுததுபோல சீனாவிடம் அழுது புலம்பியது பாகிஸ்தான் காரணம் கால்நொடிந்து கிடக்கும் தேசமது, உடனே சீனா அலறியது, காஷ்மீர் இந்தியாவின் மாகாணமல்ல அங்கு இந்தியா கூட்டம் நடத்த கூடாது என அது சீறியது.

உலக நாடுகளோ "ஏனப்பா சீனா, உன்னை சுற்றியுள்ள நாடுகளின் எல்லையில் ஒரு நாட்டின் எல்லையிலாவது  தகறாறு செய்யாமல் இருக்கின்றாயா? நீ சொல்வதை நம்பமுடியுமா?" என நகர்ந்துவிட்டன‌

சில நாடுகளோ "சீனாவா.. ஓஓ.. நொ வொண்டர்" என சொல்லிவிட்டு இந்தியாவுக்கு பெரும் ஆதரவு தெரிவிக்கின்றன‌, மோடி மிக நேர்த்தியாக காஷ்மீர் இந்தியாவின் மாகாணம் என உலக நாடுகளை சொல்லவைப்பதில் பெரும் வெற்றி பெற்றுவிட்டார், மிக நேர்த்தியான ராஜதந்திரம் இதுதான்

காஷ்மீரை இந்தியாவோடு சேர்த்தபின் உலகில் கிடைக்கும் மிகபெரிய அங்கீகாரம் இது, முதன் முதலாக அந்த மண்னில் நடக்கும் உலக பெரும் மாநாடு இது, காரிருள் சூழ்ந்த மாகாணத்தின் விடிவெள்ளி காட்சி இது.

மோடியின் இந்த வெற்றிக்கு வாழ்த்து சொல்லவேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை, அதை நாம் செய்துகொண்டிருக்கின்றோம்

Credit -பிரம்ம ரிஷி