அதிமுகவில் உண்டான பிளவிற்கு காரணமாக பார்க்கப்படுபவர் கேபி முனுசாமி முதலில் பன்னீர்செல்வம் உடன் சேர்ந்து துணை ஒருங்கிணைப்பாளர் பதவி, மாநிலங்களவை உறுப்பினர் பதவி, சட்டமன்ற தேர்தலில் சீட் என பெற்றுக்கொண்ட முனுசாமி இப்போது அதிமுகவில் பொருளாளர் பதவியை பெற்று அதிகாரம் செலுத்த எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் நேற்றைய தினம் முனுசாமி பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் அதிமுக திமுக இரண்டும் பங்காளிகள் நாங்கள்தான் மாறி மாறி ஆட்சிக்கு வருவோம், சில பேர் சொல்லி கொள்கிறார்களே நாங்கள் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று அது நடக்காது என பேசினார், கேபி முனுசாமி நேரடியாக பாஜகவை கூறவில்லை என்றாலும் அவர் குறிப்பிட்டது பாஜகவைத்தான் என அரசியல் தெரிந்த அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.
இதே போன்று சட்டமன்ற பொது தேர்தலின் போதும் ஒரு சிறிய சமூகம் கட்சியை நிர்வகிக்க முடியாது என பாஜகவை உரண்டு இழுத்தார், இந்த சூழலில்தான் சமீபத்திய எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பேச்சு, பாஜகவினரை கோவத்தில் ஆழ்த்தி இருக்கிறது, பாஜக ஓபிஎஸ் இபிஎஸ் விவகாரத்தில் தலையிட கூடாது என ஒதுங்கி இருந்த போதிலும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பேச்சு மூலம் கடும் அதிருப்தி அடைந்து இருக்கிறதாம்.
எங்கள் வழியை நாங்கள் பார்த்து சென்று கொண்டு இருக்கிறோம் தேவையில்லாமல் யாரும் எங்களை விமர்சனம் செய்யவேண்டிய அவசியம் இல்லை, பாஜக இல்லை என்றால் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை எப்போதோ திமுக கவிழ்த்து இருக்கும் ஏன் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக வந்து இருக்க மாட்டார்.
இவற்றையெல்லாம் மறந்துவிட்டு பாஜகவை வம்பு இழுப்பது போன்று முனு சாமி பேசுவதை நிறுத்தி கொள்ளவேண்டும் என்று பாஜக முக்கிய நிர்வாகி ஒருவர் TNNEWS24 குழுவிடம் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். ஏற்கனவே சட்ட சிக்கலில் சிக்கியுள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பை நேற்றைய ஒற்றை பேட்டி மூலம் மத்திய அரசை பகைத்துக்கொள்ளும் சூழலுக்கு உள்ளாக்கி இருக்கிறார் முனுசாமி.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஹைதராபாத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரை சந்தித்து பேச இருக்கிறார் அதற்காக அவர் தெலுங்கானா சென்றுள்ளார், இதில் அதிமுகவில் எடப்பாடி தரப்பின் சமீபத்திய பேச்சுக்களை சுட்டி காட்டலாம் எனவும் அதன் பிறகு பாஜக நேரடியாக எடப்பாடி தரப்பிற்கு எதிராக களத்தில் இறங்கினாலும் ஆச்சர்யம் இல்லை என்கின்றனர், தேர்தல் ஆணையம் வட்டாரங்கள்.