24 special

2 வயது சிறுமி கொலை... மதிய உணவில் பல்லி... - திமுகவின் கவசமாக மாறிய ஊடகங்கள் மொத்தமாக சிக்கும் போராளிகள்

MKSTALIN,UDHAYANIDHISTALIN
MKSTALIN,UDHAYANIDHISTALIN

கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்த விவகாரத்தில் 44 மாணவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் துயரச் சம்பவம், தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேட்டையும், அலட்சியப் போக்கையும் அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டியுள்ளது.  200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் ஒரு பள்ளியில், மதிய உணவில் பல்லி கிடந்ததை கவனிக்காமல் மாணவர்களுக்குப் பரிமாறியது என்பது சமையல் கூடங்களில் நிலவும் சுகாதாரமின்மை மற்றும் அலட்சியத்தை காட்டுகிறது.


இது போன்ற விபத்துக்கள் தமிழகத்தில் முதல்முறை அல்ல; கடந்த காலங்களிலும் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்ததை அறியாமல் உண்ட 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கமடைந்தனர். அதேபோல, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பள்ளியில் உணவில் பல்லி இருந்ததைக் கண்டு மாணவர்கள் அலறியதும், அதற்குப் பின் அரசு அதிகாரிகள் பெயரளவில் ஆய்வு நடத்தியதும் ஊடகங்களில் பதிவாகியுள்ளன. சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஒரு தொடக்கப் பள்ளியில் உணவில் கரப்பான் பூச்சி கிடந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஒவ்வொரு முறை இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதும், "விசாரணை நடத்தப்படும்" மற்றும் "உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" என்று அரசு வாக்குறுதி அளிக்கிறதே தவிர, நிரந்தரத் தீர்வு எட்டப்படுவதில்லை. சமையல் கூடங்களை முறையாகப் பராமரிக்காதது, குடிநீர் தொட்டிகளைத் தூய்மைப்படுத்தாதது மற்றும் சமையலர்கள் மீது போதிய கண்காணிப்பு இல்லாதது போன்ற அடிப்படைப் பிரச்சினைகளே மீண்டும் மீண்டும் இத்தகைய விபத்துகளுக்குக் காரணமாகின்றன. விளம்பரத்தால் மட்டும் ஆட்சியை ஒட்டி வருகிறது இந்த திமுக அரசு 

மேலும், தமிழகத்தின் முக்கிய ஊடகங்கள் உதயநிதி மற்றும் ஸ்டாலின் அவர்களின் விளம்பரங்களுக்கு  கொடுக்கும் முக்கியத்துவத்தை, பச்சிளம் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த இந்த விவகாரத்திற்கு வழங்காதது மிகுந்த  ஊடகங்களின் முகத்திரையை கிழித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 2 வயது சிறுமி  திமுக நிர்வாகியால் சீரழிக்கப்பட்டு கொலை செய்த சம்பவத்திற்கு  வாயை மூடி மௌனம் காத்தது ஊடக தர்மம் வேதனைக்குரியது. சிறு சிறு விஷயங்களைக்கூட "Breaking News" ஆக மணிக்கணக்கில் விவாதிக்கும் ஊடகங்கள், இவ்வளவு பெரிய கொடூரத்தை ஒரு ஓரத்தில் சிறு செய்தியாகக் கடந்து செல்வது அவர்களின் தார்மீக வீழ்ச்சியைக் காட்டுகிறது. சமூகப் பொறுப்புத் துறப்பு: குற்றவாளிகளுக்குப் பயத்தை ஏற்படுத்த வேண்டிய ஊடகங்கள், அவர்களுக்குக் கவசமாகச் செயல்படுவது சமூகத்தைச் சீரழிக்கும் செயலாகும்.