24 special

திமுக ஜாபர் சாதிக்கை போல TVK-வில் அரவிந்த் அதிரவைக்கும் மாஃபியா வேலை அடுத்த திருப்பம்

VIJAY,TAMILNADUPOLICE
VIJAY,TAMILNADUPOLICE

கடந்த திமுக ஆட்சியில் போதை பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் பிண்ணனி நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது போல் தற்போது தவெக ஆட்சியை பயன்படுத்தி அரவிந்த் என்பவர் செய்யும் வேலை மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.  “போதையில்லா தமிழகம்” என்ற இலக்கை முன்வைத்து தவெக அரசு செயல்பட்டு வரும் நிலையில், கோவை மற்றும் சென்னையில் போதைப்பொருள் தொடர்பாக அரவிந்த் என்பவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


‘கேஷ்பே’ என்ற போலி கிரிப்டோகரன்சி மூலம் ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக கூறப்படும் அரவிந்தை, கடந்த ஆண்டு புதுச்சேரி காவல்துறை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள அவர், மீண்டும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் புகார்கள் வந்துள்ளன.. அதாவது, கோவை மற்றும் சென்னையில் உள்ள பார், பப் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துவதாகவும், விற்பனை செய்வதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பெண்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்குதல், பிளாக்மெயில் உள்ளிட்ட கடுமையான புகார்களும் கூறப்படுகின்றன.

மேலும், கோவையில் கிரிக்கெட் சூதாட்டத்திலும் ஈடுபடுவதாகவும், தனக்கு ஆளும் கட்சி மற்றும் முக்கிய நபர்களின் ஆதரவு இருப்பதாக அவர் கூறி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன. “போதையில்லா தமிழகம்” என இலக்கு நிர்ணயித்துள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், அரவிந்துக்கு போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்பட்டதா? காவல்துறை ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. 

அவரை முழுமையாக விசாரித்தால், கோவை மற்றும் சென்னைக்கு போதைப்பொருட்கள் எப்படி வருகிறது, கிரிப்டோ மோசடி பணம் எங்கு சென்றது, சூதாட்டத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம் என கூறப்படுகிறது. பெண்கள் அமைப்பும் இதுதொடர்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தவெக அரசு மற்றும் தமிழக காவல்துறை இந்த குற்றச்சாட்டுகளை முறையாக விசாரித்து உண்மை நிலையை வெளிக்கொண்டு வருமா? என்பதே தற்போது பெரும் எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது. 

திமுக ஆட்சியில் ஜாபர் ஜாதிகே முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு வெளிநாடுகளுக்கு எப்படி போதை பொருள் கடத்தி சிக்கியது மக்கள் மத்தியில் திமுகவுக்கு செல்வாக்கு குறைத்தது அதுபோலவே தற்போது இந்த விவகாரம் பெரும் தவெக அரசு மீதான நம்பிக்கையை இழக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்படுக்கப்படுகிறது.