World

யாரை நம்பி யார் இருக்கிறார்கள் போட்டு தாக்கு தாக்கிய இந்தியா?


யாரை நம்பி யார் வாழ்கிறார்கள்? இந்த ஒரு வாரமாக இந்தியா அரபு நாடுகளை பகைத்து கொண்டது. இந்தியா வாழவே முடியாது என்றெல்லாம் சில கைக்கூலி பத்திரிக்கைகளும் எதோ ஒரு விதத்தில் இந்தியா வீழ்த்தப்பட்டேனும் இப்பொழுதுள்ள அரசை நீக்க வேண்டும் என்ற அபிலாஷை உள்ள நண்பர்களும் கூச்சலிடுவதை பார்க்க முடிகிறது. அவர்களுக்கெல்லாம் இந்த தரவுகள் பேரிடியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. தரவுகளுக்கு செல்லலாம். 


கத்தார்  1. ஏறக்குறைய 6000 இந்திய நிறுவனங்கள் கத்தாரில் இருந்து செயல்பட்டு கத்தாரின் IT மற்றும் Energy மற்றும் Infrastructure துறைகளை முழுமையாக நிர்வகித்து வருகின்றன. அந்த நிறுவனங்கள் இல்லாமல் கத்தார் ஒருநாள் கூட செயல்பட முடியாது.

2. மொத்த கத்தார் மக்கள் தொகையான 27 லட்சத்தில் 7 லட்சம் பேர் இந்தியர்கள். கத்தாரின் பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. 

3. FIFA உலகக்கோப்பைக்கான கட்டுமானத்தை இந்திய நிறுவனமே கத்தாரில் செய்து வருகிறது 

4. கத்தார் தனது தேவையில் 50% கோதுமை (1Lakh metric ton ), பாசுமதி அரிசி (1.2 1Lakh metric ton) மற்றும் 25000 metric ton காய்கறிகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது

குவைத் 1. குவைத் மக்கள் தொகையான 47 லட்சத்தில் 10 லட்சம் பேர் இந்தியர்கள். அதில் 5.5 லட்சம் இந்தியர்கள் ஆடிட்டர், இன்ஜினியர், டாக்டர், நர்ஸ் போன்ற பதவிகளில் வேலை செய்கிறார்கள்.

2. இருபத்தி எட்டு ஆயிரம் இந்தியர்கள் குவைத் அரசாங்கத்தின் நிதி, மருத்துவம், மென்பொருள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் பங்களித்து கொண்டிருக்கிறார்கள்.

3. குவைத் அரசாங்கமானது 1.5 லட்சம் மெட்ரிக் டன் பாசுமதி அரிசி மற்றும் 17 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறிகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. பெருமளவிலான கோதுமை, கறி மற்றும் பால் பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது.

சவுதி அரேபியா 1. சவுதி அரேபியாவில் இருந்து 745 இந்திய நிறுவனங்கள் வேலை செய்து அதில் 22 லட்சம் இந்தியர்கள் சவுதி அரேபியா தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கட்டுமானங்களில் உலக நாடுகளுடன் போட்டி போடுவதற்கு உறுதுணையாக உள்ளார்கள் 

2. 6.7 லட்சம் மெட்ரிக் டன் பாசுமதி அரிசியை இறக்குமதி செய்து செய்கிறார்கள் இந்தியாவிலிருந்து. இது அவர்கள் தேவையில் 50 சதவீதமாகும். மேலும் 16 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறிகளையும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். அது மட்டுமல்லாது பழங்கள், பால் பொருட்கள் தனியாக இறக்குமதி செய்கிறார்கள்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 1. 34 லட்சம் இந்தியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை செய்து அந்நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய அளவில் பங்கேற்கிறார்கள். 2. 85 பில்லியன் டாலர்கள் இந்திய கம்பெனிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் முதலீடு செய்துள்ளார்கள்.

3. டெக்ஸ்டைல், சிமெண்ட், பொறியியல் பொருட்கள்,  தகவல் தொழில்நுட்பம் மற்றும் அனைத்து சேவைகளிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவையே நம்பியுள்ளது

4. அவர்களின் தேவையில் 30 சதவீத கோதுமை அதாவது 4.7 லட்சம் மெட்ரிக் டன் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது அதேபோல் அவர்களின் தேவையில் 40 சதவீதமான பாசுமதி அரிசியும், 82 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறிகளும், 91 ஆயிரம் மெட்ரிக் டன் பழங்கள் மற்றும் பால் பொருட்களும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள்.

அனைத்து அரபு நாடுகளுக்கும் இதே நிலைமைதான். ஈரான் கூட 10 லட்சம் மெட்ரிக் டன் பாசுமதி அரிசி மற்றும் 1.7 லட்சம் மெட்ரிக் டன் பழங்களையும் இந்தியாவில் இருந்துதான் இறக்குமதி செய்கிறார்கள்.

இப்பொழுது கூறுங்கள் யார் யாரை நம்பி வாழ்கிறார்கள் என்று??அவர்களது என்ன நமக்கு  எண்ணெய் மட்டும் தானே கொடுக்கமாட்டேன் என்று கூறுவார்கள்? இப்பொழுதே எண்பத்தி எட்டு மில்லியன் பேரல் எண்ணெய் ரஷ்யாவிலிருந்து வாங்க தொடங்கிவிட்டோம். இந்தியாவின் தேவையில் 30% ரஷ்யா பூர்த்தி செய்யத் தொடங்கிவிட்டது.

இந்தியா யாரை நம்பியும் இல்லை என்பதுதான் உண்மை. இந்தியாவை நம்பித்தான் உலக நாடுகள் உள்ளன என்ற நிலை வந்துவிட்டது. 

இந்தியாவை நம்பர் 1 நம்பர் 2 நிலையில் உள்ள நாடுகளே பகைத்துக்கொள்ள முடியாது என்னும் போது ஒன்றுமே இல்லாத நாடுகள் பகைத்துக் கொள்வதால் ஏதோ இந்தியாவை மூழ்கிவிடும் போல் மனப்பால் குடித்துக் கொண்டிருப்பவர்களே உங்கள் மனக் கோட்டை வெறும் மண் கோட்டை தான்.

இந்தியாவை யாரும் எதுவும் செய்ய முடியாது!இப்பொழுது ஆண்டு கொண்டிருப்பது என்ன அடிமை அரசாங்கம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?? உண்மையான இந்திய அரசாங்கம் இது.

எவ்வளவு வன்மம்?? இந்தியாவை ஒரு இந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக ஆட்சி செய்கிறான் என்பதற்காக நீங்கள் செய்யும் செயல்களும் பேசும் பேச்சுக்களும் கேலிக்கூத்தாக உள்ளது.

ஆனால் இந்த வன்மத்தின் மூலம் நீங்கள் செய்யும் செயல்களுக்கு நன்றி! ஏனென்றால் இப்பொழுதுதான் இந்துக்கள் மதரீதியாக ஒன்றிணைய ஆரம்பித்துள்ளார்கள்!

மீண்டும் ஒருமுறை கூறுகிறேன் இதேபோன்று செய்து கொண்டே இருங்கள். இந்தியாவிற்கு நல்லது!இந்திய பேரரசிலிருந்து ஒரு பெருமைமிகு இந்தியக் குடிமகன்!

பதிவு : periyasamy thangavel 

Source;https://www.linkedin.com/posts/siddharth-dey-7969a175_today-i-will-respond-to-the-washington-post-activity-6940871134724648960-G5Yqce: