
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் மண்ணில் கால் பதித்த அந்தத் தருணம், உலக அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. வழக்கமாக ஒரு நாட்டின் தலைவரை வரவேற்க அந்த நாட்டுத் தலைவர் வருவது மரபு. ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மனைவி சாரா நெதன்யாகுவுடன் நேராக விமான நிலையத்திற்கே வந்து நின்றது, இந்தியாவுக்கு அவர்கள் கொடுத்த உச்சகட்ட மரியாதையைக் காட்டியது. அந்த வரவேற்பு நிகழ்வில் அனைவரையும் உற்று நோக்க வைத்தது சாரா நெதன்யாகு அணிந்திருந்த அந்த 'காவி' நிற உடைதான். உலகமே உற்றுப் பார்க்கும் ஒரு நாட்டின் பிரதமர் மனைவி, திட்டமிட்டு இந்த நிறத்தைத் தேர்ந்தெடுத்ததன் பின்னணியில் ஒரு மாபெரும் ராஜதந்திர ரகசியம் ஒளிந்திருக்கிறது.
விமான நிலையத்தில் மோடியைக் கட்டித் தழுவி வரவேற்ற நெதன்யாகு, ஒரு கட்டத்தில் சிரித்தபடி ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டினார். பிரதமர் மோடியின் கையில் இருந்த காவி நிறத்தையும், தன் மனைவி சாரா அணிந்திருந்த காவி நிற உடையையும் காட்டி, "பாருங்கள்... இருவருமே ஒரே நிறம் (Same Color)!" என்று உற்சாகமாகக் குறிப்பிட்டார். இந்தியப் பாரம்பரியப்படித் தன் மனைவி அவரை வரவேற்பதாக அவர் கூறிய அந்தத் தருணம், அங்கிருந்த ராஜதந்திரிகளையும் உலக ஊடகங்களையும் வியப்பில் ஆழ்த்தியது. சாரா நெதன்யாகு வெறும் பிரதமர் மனைவி மட்டுமல்ல; அவர் ஒரு முன்னாள் ராணுவ வீராங்கனை. இப்போதும் ராணுவ வீரர்களுக்குத் துணிச்சலை ஊட்டும் மனநல ஆலோசகராக இருப்பவர். அப்படிப்பட்ட ஒரு வீராங்கனை, இந்தியப் பிரதமரை வரவேற்க காவி நிறத்தைத் தேர்ந்தெடுத்தது தற்செயலானது அல்ல.
இஸ்ரேல் ராணுவத்தில் பெண்கள் இருந்தாலும், அவர்கள் பெரும்பாலும் எல்லைப் பாதுகாப்பு மற்றும் தற்காப்புப் பணிகளிலேயே ஈடுபடுத்தப்படுவார்கள். ஆனால், இந்தியாவோ தனது பெண் சிங்கங்களை 'ஆபரேஷன் சிந்தூர்' போன்ற மிக ஆபத்தான மற்றும் சவாலான தாக்குதல் களங்களுக்கு அனுப்பி வெற்றி கண்டது. இந்தியப் பெண்களின் குங்குமம் (சிந்தூர்) பறிக்கப்பட்ட அந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு, இந்தியப் பெண்களையே வைத்துப் பதிலடி கொடுத்த இந்தியாவின் வீரத்தை இஸ்ரேல் வியந்து பார்த்தது. அந்த வீரத்திற்குத் தலைவணங்கும் விதமாகவும், "இந்திய வீராங்கனைகளே, உங்களுக்குப் பின்னால் இஸ்ரேல் ஒரு சகோதரனாக நிற்கும்" என்று உலகிற்குப் பகிரங்கமாக அறிவிக்கும் ஒரு குறியீடாகவே சாரா நெதன்யாகு காவி உடையை அணிந்து வந்திருந்தார்.
அதுமட்டுமின்றி, பிரதமர் மோடியின் ஆன்மீக ஈடுபாட்டையும், இந்தியாவின் அடையாளமாகத் திகழும் காவி நிறத்தின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து, இந்தியப் பிரதமரின் மனதிற்கு நெருக்கமான ஒரு வரவேற்பை அளிக்க அவர்கள் முடிவு செய்திருந்தனர். ஒரு நாட்டின் நுணுக்கமான ராஜதந்திரம் என்பது வெறும் பேச்சில் மட்டும் இருப்பதில்லை; அது உடுத்தும் உடையில் கூட இருக்கும் என்பதை இஸ்ரேல் நிரூபித்தது. இந்த ஒரு காவி நிற ஆடை மற்றும் நெதன்யாகுவின் அந்த "ஒரே நிறம்" என்ற நெகிழ்ச்சியான ஒப்பீடு, இந்தியா - இஸ்ரேல் இடையிலான உறவு வெறும் நட்பு மட்டுமல்ல, அது ஒரு ஆழமான ஆன்மீக மற்றும் ராணுவப் பிணைப்பு என்பதை உரக்கச் சொன்னது
