World

ஆம் உண்மையில் பாகிஸ்தான் தூக்கம் கெட்டது என்பது நிஜம்..! ஆளில்லா இடத்தில் விழுந்தது என்பதும் நிஜம்..?

Indian missile
Indian missile

பாகிஸ்தானில் இந்திய ஏவுகனை விழுந்தது என்பது சில நாட்களாக வலம் வரும் விஷயம், அது யுத்த தலை அதாவது வார் ஹெட் எனும் வெடிபொருள் இல்லாத ஏவுகனை


ராணுவ பரிபாஷைகள் எப்பொழுதும் அவர்கள் இருவருமே புரிந்துகொள்ள கூடியது, இப்பொழுது பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாம்பாத்தில் இருந்து சுமார் 300 கிமீ தொலைவில் உள்ள மியான் சுனு எனும் வடமேற்கு நகரின அருகே ஆளில்லா இந்திய ஏவுகனை விழுந்திருக்கின்றது.

மார்ச் 9ம் தேதி மாலை 6 மணிக்கு இந்தியாவின் எல்லையில் இருந்து சுமார் 140 கிமீ தாண்டி வந்து இந்த ஏவுகனை விழுந்ததாக பாகிஸ்தான் அறிவித்தது, இதுபற்றி இந்தியாவிடம் கடும் கண்டனம் தெரிவித்தது, இந்திய தரப்பு "வழிதவறி வந்திருக்கலாம்" என்பதோடு நிறுத்தி கொண்டது

இந்த "வழி தவறி" என்பது வல்லரசுகள் சொல்லும் வார்த்தை விளையாட்டு, செல்லாவற்றையும் காரணத்தோடு செய்துவிட்டு "வழி தவறி" "கட்டுபாட்டை இழந்து" எனும் சொல்பதத்தை பயன்படுத்துவார்கள், வழிதவறிய ஏவுகனை எப்படி ஆளில்லா பகுதியில் விழுந்தது என கண்ணை கசக்கும் பாகிஸ்தான் இந்தியாவிடம் பெரும் விளக்கம் கேட்க இந்தியா அமைதி காக்கின்றது அல்லது புன்னகைக்கின்றது.

இந்தியா தன் எஸ் 400 வான் பாதுகாப்பு சாதனத்தை பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தியிருப்பதும் அதை தொடர்ந்து பாகிஸ்தானும் சீன தடுப்பு காயலான் கடை சரக்கு ஒன்றை வாங்கி தன் எல்லையில் நிறுத்தியிருப்பதும் உலகறிந்தது, சீனாவே தன் சொந்த ஹை.கியு 9 சிஸ்டத்தில் நம்பிக்கை இல்லாமல் ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 வாங்கிய நிலையில் பாகிஸ்தான் ஏதோ பெரிய ஆயுதம் போல் வாங்கி சில வாரங்களாக பந்தா காட்டியது.

இந்நிலையில்தான் இந்தியாவின் ஏவுகனை வழிதவறி சென்றுவிட்டது, ஆனால் வழிதவறிய இந்திய ஏவுகனையினை பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு சிஸ்டம் தடுக்கவில்லை, ஆக என்ன நடந்திருக்கின்றது என்பதை யூகிக்கலாம்.

பழைய பாகிஸ்தான் என்றால் இந்நேரம் தங்கள் பாபர், ஷாகீன் ஏவுகனைகள் மற்றும் அமெரிக்க எப் 16 விமானங்களுடன் எல்லைக்கு வந்திருக்கும், ஆனால் உடலெல்லாம் அடிபட்டு குறிப்பாக இரு காலும் முழுக்க வீங்கியிருக்கும் நிலையில் "அய்யா கொஞ்சம் ஏவுகனைய பார்த்துவிடபுடாதா" என சொல்லிவிட்டு சென்றுவிட்டது

பாகிஸ்தானின் நிலையினை எதற்கோ யாரோ நாடி பிடித்து பார்த்திருக்கின்றார்கள், அந்நாடோ, "போங்கடா எங்க நாட்டுகுள்ள பின்லேடன கொல்றாங்க, யார் யாரையோ கொல்றாங்க என்ன நடக்குண்ணே தெரியல, இதுல இந்தியாவா? வாங்கடா வந்து அடிங்க, அடிச்சி எங்கள கொல்லுங்க" என்பது போல் விரக்தியாக இருப்பது தெரிகின்றது.

இந்தியாவின் எஸ் 400 சிஸ்டம் அவசரமாக சோதிக்கபட்டிருக்கலாம் என்பதில் தொடங்கி இன்னும் பல தியரிகள் ஓடினாலும் அந்த "வழி தவறிய" ஏவுகனை சரியான வழியில் ஆளில்லா இடத்தில் விழுந்திருகின்றது என்பது நிஜம் அது பாகிஸ்தான் தூக்கத்தை கெடுத்துவிட்டது என்பதும் நிஜம் என குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.