24 special

6 லட்சம் கோடி கொள்ளை ஆட்டம் காணும் தமிழகத்தின் அஸ்திவாரம்! இடியை இறக்கிய செய்தி

PMMODI,MKSTALIN
PMMODI,MKSTALIN

கடந்த பதினொரு ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்காக சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் நிதியையும், ஏறத்தாழ 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களையும் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பிரம்மாண்டமான தொகையையும் திட்டங்களையும் மாநில அரசு சரியான முறையில் நிர்வாகம் செய்து, மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தியிருந்தால் இன்று தமிழகத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாய் என்ற அபாயகரமான நிலையை எட்டியிருக்காது. மத்திய அரசு வழங்கும் நிதியை உருப்படியான திட்டங்களுக்குச் செலவிடாமல், முறைகேடுகளில் ஈடுபடுவதிலேயே கவனம் செலுத்தினால் கடன் சுமை அதிகரிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது.


இதற்கு வலுசேர்க்கும் விதமாக, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற தொடக்க காலத்தில் அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த உதயநிதி மற்றும் சபரீசன் ஆகியோர் குறுகிய காலத்திலேயே சுமார் 30,000 கோடி ரூபாயை முறையற்ற வகையில் சேர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகின. அதேபோல் தற்போது பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸும், கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாகக் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இத்தகைய அரசியல் சூழலில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் மத்திய அரசோடு இணைந்து செயல்படும் 'இரட்டை இன்ஜின் ஆட்சி' அமைய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் 'டப்பா இன்ஜின்' தமிழகத்தில் எடுபடாது என்று விமர்சித்தார். அதே சமயம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.வின் ஆட்சியை 'ஓடாத ஓட்டை இன்ஜின் ஆட்சி' என்று சாடியுள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 39 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தி.மு.க. கூட்டணி, மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்குத் தேவையான உரிமைகளையும் நிதியையும் போராடிப் பெறுவதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் விளைவிப்பதையும் வெளிநடப்பு செய்வதையுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இவர்களால் தமிழக மக்களுக்கு எந்தவிதமான ஆக்கப்பூர்வமான பயனும் கிடைக்கவில்லை என்பது நிதர்சனம். ஒருபுறம் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பின்மை, மறுபுறம் மின்கட்டண உயர்வு மற்றும் பத்திரப்பதிவு கட்டண உயர்வு என மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். ரவுடியிசம் தலைதூக்கியுள்ள நிலையில், அரசு நிர்வாகம் மக்களின் துயரங்களைத் தீர்க்காமல் வெறும் விளம்பர அரசியல் செய்வதிலேயே குறியாக இருக்கிறது.

எனவே, வளர்ச்சிப் பாதையில் செல்லாத இத்தகைய ஆட்சியை மீண்டும் தேர்ந்தெடுப்பதால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் விளையப்போவதில்லை. மாறாக, ஆந்திரா, பீகார் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் மத்திய அரசுடன் இணக்கமான 'இரட்டை இன்ஜின் ஆட்சி' அமைந்தால் மட்டுமே, மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களைச் சென்றடையும் மற்றும் தமிழக மக்கள் உண்மையான முன்னேற்றத்தைப் பெறுவார்கள். திமுக ஆட்சியின் மீது பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்கக்கூடும் என்றும்இது  தொடர்பாக விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்றும் கூறியது பரபரப்பை கிளப்பியுள்ளது.