Cinema

யார் இவர்?? என்று கேட்டு.. இவர் அவருல..!! அப்படினு வியந்துபோவீங்க!!

p jayachandran
p jayachandran

"Don't judge a book by its cover" என்பதை போலா யாரையும் அவர்களின் வெளி தோற்றத்தை பார்த்து இவர்கள் இப்படித்தான் என்று சொல்லிவிட முடியாது. சிலர் பார்ப்பதற்கு ஒரு வகையிலும்   ஆனால் நிஜ வாழ்க்கையில் வேறு ஒரு வகையிலும் இருப்பார்கள். எனவே யாரையும் அவர்களை பார்த்த உடன் எடை போடுவது  என்பது தற்காலத்தில் மிகவும் கடினமான ஒன்றாகவே உள்ளது.அதுபோலத்தான் தற்போது சோசியல் மீடியாக்களில் பரவி வரும் ஒரு புகைப்படம் மற்றும் வீடியோ அனைவரின் மத்தியிலும் இவர் யார் என்ற கேள்வியை எழுப்புகிறது!!இந்த புகைப்படத்தினை நெடிசன் என்ற ஒருவர் பதிவிட்டுள்ளார் அதில் ஒரு பாடி பில்டர் போல ஒருவர் இடம் பெற்றிருக்கிறார். அவரை பார்க்கும் பொழுது ஒரு திரைப்பட வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் போலவும், சண்டை காட்சிகளில் வரும் மாஸ்டர் போலவும் மற்றும் படங்களில் வரும் அடியாள் போலவும் இருக்கின்றார்.


ஆனால் உண்மையில் அவர் யாரென்றால்???கேரளாவைச் சேர்ந்த இந்தியப் பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் பாடலாசிரியர் ஜெயச்சந்திரன். அவர் பல்வேறு மொழிகளில் மொத்தம் 10000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். சில படங்களிலும் நடித்துள்ளார்.இவர் Body Builder ஓ actor ஓ கிடையாது. இவரை  பலருக்கு தெரிஞ்சு இருக்காது. ஆனா இவர் பாடின பாடல்களை சொன்னால் இவரா அதுனு யோசிப்பிங்க. அந்த அளவுக்கு தற்போது இவர் ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறிவிட்டார். இவர் பல 90's கிட்ஸ்களின் ஃபேவரட் பாடல்களை பாடியுள்ளார். மேலும் இவர் பாடிய பாடல்கள் சில இன்று கூட இளைஞர்கள் மத்தியில் நீங்காத இடம் பெற்றுதான் உள்ளது. சமீபத்தில் இவர் சிறந்த பாடகிக்கான மழவில் மாம்பழ இசை விருது - பொடிமீஷா விருதை பெற்றவர்... அதற்கு முன்பும் பல விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் 2020 ஆம் ஆண்டில், மலையாளத் திரையுலகில் அவர் செய்த சிறந்த பங்களிப்பிற்காக, மலையாள சினிமாவின் மிக உயரிய விருதான ஜே.சி.டேனியல் விருது அவருக்கு வழங்கப்பட்டது. தென்னிந்தியாவின் மிகச்சிறந்த வெளிப்பாடு பாடகர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார்.  2 தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் வென்றார்.இவர் பாடிய பாடல்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?? இதோ இவர் பாடிய தமிழ் பாடல்களில் இன்றும் ரசிகர்களைக் கொண்டுள்ள பாடல்கள் சில!!! வைதேகி காத்திருந்தால் படத்துல “ ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு ” பாட்ட பாடினது இவர் தான். அது மட்டுமின்றி காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி, கொடியிலே மல்லிகை பூ,  மயங்கினேன் சொல்ல தயங்கினேன், வெள்ளையாய் மனம் பிள்ளையாய்,  சொல்லாமலே யார் பாத்தது, ஒரு தெய்வம் தந்த பூவே! 

இந்தப் பாடல்கள் அனைத்தும்  இன்றும் கூட பல இடங்களில் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும், பார்த்தும் கேட்டும் உள்ளோம். இப்படிப்பட்ட காந்த குரல் ரசிகர்களின் மனதில் நீங்காமல் இடம்பெற்றிருக்கும் பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் அவர்களின் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. எனவே ஒருவரை பார்த்தவுடன் எடை போடுவது என்பது கூடாது. ஒருவரை பற்றி முழுதாக அறிந்தபின் அவரைப் பற்றியும், அவர் செய்த சாதனைகள் பற்றியும் பேச வேண்டும் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. அதுமட்டுமின்றி பல திரை உலகைச் சேர்ந்த பிரபலங்களுக்கு கூட இவரை அடையாளம் தெரியவில்லையாம் அந்த அளவிற்கு உடற்பயிற்சி மேற்கொண்டு தனது உடலை வலுவாக வைத்துள்ளார். ஆனால் அவர் குரலில் இருந்து வரும் பாடல்களோ நம் அனைவரையும் மெய் மறந்து நிற்க வைக்கிறது.