24 special

கோவை ஒரு பழனி... நீங்க இன்னும் இந்த கோவிலுக்கு போகவில்லையா???

murugan temple
murugan temple

பழனி முருகன் கோவில்  முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இதன் சிறப்பு நாம் அனைவர்க்கும் தெரிந்தது தான். மிகவும் சிறப்பு வாயிந்த கோவில் ஆகும். மேலும் பழனி முருகன் கோவில் முருகனின் அறுபடை விடுகளில் ஒன்றானது என்பது நம் அனைவரும் அறிந்ததே!! இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.  முருகனின் சிலை நவபாசாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. இங்கு நடக்கும் குறிப்பிடத்தக்க திருவிழாக்கள் தைப்பூசம்,பங்குனி உத்திரம்,சூரசம்ஹாரம் போன்றவைகளுக்கு நாமும் சென்றுருப்போம். ஆனால் கோவை பழனி பற்றி கேள்விப்பட்டது உண்டா??தமிழ்நாட்டில் இரண்டாவது பழனி என்று அழைக்கப்படும் கோவில் பற்றி உங்களுக்கு தெரியுமா???


     அதுதான் இந்த குட்டி பழனி என்று அழைக்கப்படும் கண்ணம்பாளையம் பழனியாண்டவர் கோயில், இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் சூளுரை தாண்டி வரும் கண்ணம்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ளது இந்த முருகன் கோயில்!!  இக்கோவிலின் மூலவர் பழனியாண்டவர் ஆவார். இக்கோயில் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பர். இக்கோயிலில் ஒரு 5 ராஜகோபுரகள் உள்ளது. இந்தக் கோவிலின் சிறப்பு 12 சித்தர்களின் உருவ சிலைகள் செதுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுவும் பழனி போன்ற மிகவும் சக்தி வாயிந்த கோவில் ஆகும்!!.  இந்த கோவிலின் அமைப்பு மக்களின் ஒற்றுமையையும், பக்தியையும்உணர்த்துகிறது. இந்தக் கோவிலில் உள்ள முருகனின் தோற்றமானது மிகவும் அழகானதாகவும், தெய்வீக தன்மையுடனும், சக்தி வந்ததாகவும் இருக்கும்.இங்கு நடக்கும் ஒருகாலப் பூசை மிகவும் சிறப்புமைக்கதாகும். 

மேலும் வைகாசி மாதம் நடக்கும் வைகாசி விசாகம் முக்கிய திருவிழாவாகவும் மற்றும் மக்கள் பெருமளவில் திருவிழாவாகவும் இந்த நாள் விளங்குகிறது. இங்கு அம்மாவாசை, பவுர்ணமி, சஷ்டி போன்ற நாள்களில் மிகவும் விசேஷமாக இருக்கும். இங்கு உள்ளது முருகன் சிலை மிகவும் சிறப்புடையதகும். மேலும் கோவைப்பழனி  சூரசம்காரத்திருவிழாவில் சூரபதுமன் கோட்டைக்கு பொங்கல் வைத்து முருகப் பெருமானை வழிபடுவர். இப்படி வழிபடுவதால் அவர்களின் வேண்டுதல்களுக்கு முருகன் நடத்தி வைப்பார் என்று நம்புகின்றனர்.  அதோடு இந்தக் கோவிலின் நுழைவாயில் மருதமலை முருகன் கோவிலின் நுழைவாயில் போல அமைந்திருப்பது தனி சிறப்பு ஆகும். இருப்பினும் இது சிறிய பழனி என்று அழைக்கப்படுகிறது.  இக்கோவில் சன்னதி காலை 6 மணி முதல் 12:10 மணி வரையும், மேலும் மாலையில் 5 மணி முதல் 8:15 வரையும் திறந்திருக்கும். விழா நாட்களில் மிகவும் சிறப்பானதாக இக்கோவில் காணப்படும்.

இந்த கோவிலின் சிறப்பு என்று பார்த்தால் இங்கு சென்று வரும் மக்களின் வாழ்வில் நல்ல முன்னேற்றமும், மனநிம்மதியும் ஏற்படும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது. மேலும் முருகனை தரிசனம் செய்துவந்தால் உடலில் உள்ள நோய்கள் தீரும் என்றும் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட முருகன் கோவிலுக்கு சென்று நாமும் நமது வழிபாடுகளை செய்து வந்தால் நம் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் தீரும்.  எனவே இதுவரை இந்த கோவிலுக்கு செல்லாதவர்கள் இக்கோயிலுக்கு சென்று வழிபட்டு வாழ்வில் இன்பமாக வாழவும், ஏற்கனவே இந்த கோவிலுக்கு சென்றவர்கள் மேலும் வாழ்வில் நன்மைகள் பல நடக்க  சென்று வாருங்கள். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில் முருகனை வழிபட்டு நல்ல வேலை, ஆரோக்கியமும் பெற்று முன்னேற்றம் காணுங்கள். ஓம் சரவணபவ!!!! இந்த நிலையில் தற்போது இக்கோவிலின் தகவல்களை இணையத்தில் அதிகம் தேடி வருகின்றனர்.