24 special

ஈரானில் வேலையை காட்டிய சீனா தயாரிப்பு ... நாடே நாசமா போச்சு! இஸ்ரேல் அடித்த அடியில்!பொம்மையாக நின்ற வான்பாதுகாப்பு அமைப்பு

PMMODI,XIJINPING
PMMODI,XIJINPING

விளம்பரத்துல மட்டும் தான் டெக்னாலஜி ‘ஹை குவாலிட்டி’... ஆனா நிஜமான போர்க்களத்துல அது வெறும் சின்ன புள்ளைங்க விளையாடும் பொம்மை துப்பாக்கி என்பதை சீனா மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. "சைனா செட் எப்பவுமே ஓடாது" என்கிற கசப்பான உண்மையை அவர்களின் சொந்த HQ வான் பாதுகாப்பு அமைப்புகளே உலகிற்கு உரக்கச் சொல்லிவிட்டன., "சீனாக்காரன் வேலையை காட்டிட்டான்" என்ற விமர்சனத்தை உண்மையாக்கி வருகின்றன. இதற்கு சாட்சி  HQ தொடர் வான் பாதுகாப்பு அமைப்பு.  . ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் போது, அங்கு வைக்கப்பட்டிருந்த சீனாவின்   HQ தொடர்  வான் பாதுகாப்பு  அமைப்புக்கள்  ஒரு சிறிய எதிர்ப்பைக் கூட காட்டாமல் போனது அந்த நாட்டையே தற்போது அழித்துள்ளது.. 


ஈரானில்  HQ-9 போன்ற பல அடுக்கு பாதுகாப்பு இருந்தும் இஸ்ரேலிய போர் விமானங்கள் தடையின்றி ஊடுருவியது நவீன மின்னணுப் போரில் சீன ரேடார்கள் எவ்வளவு பலவீனமானவை என்பதைக் காட்டுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் மேம்பட்ட ஜாமர்கள் சீனத் தொழில்நுட்பத்தைச் செயலற்றதாக்கி விடுகின்றன. ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு எதிரியின் இலக்கை அடையாளம் காணத் தவறினால், அந்த ஏவுகணைகள் எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்தாலும் அவை வெறும் காட்சிப் பொருளாகவே எஞ்சும். 

சீனாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கி ஏமாந்த ஈரான் போன்ற நாடுகளின் நிலை,யை யோசித்தால் சற்று பரிதாபமாக தான் உள்ளது. இதற்கு நேர்மாறாக, இந்தியாவின் அணுகுமுறை மிகவும் முதிர்ச்சியானது. இந்தியா S-400 போன்ற வெளிநாட்டு அமைப்புகளை வாங்கினாலும், அதன் மூளையாகச் செயல்படும் 'ஆகாஷ் தீர்' போன்ற ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு மற்றும் கட்டளை மையங்களை உள்நாட்டிலேயே உருவாக்குகிறது. இதன் மூலம் ஒரு வெளிநாட்டுத் தயாரிப்பில் இருக்கும் தொழில்நுட்ப ஓட்டைகளை எதிரிகள் கண்டறிய முடியாதபடி இந்தியா தனது வான் எல்லையைக் காக்கிறது.

ஆனால், சீனாவின் சிஸ்டத்தை அப்படியே நம்பி வாங்கிய பாகிஸ்தான் போன்ற நாடுகள் இன்று தாலிபான்கள் போன்ற சிறிய குழுக்களின் வான்வழித் தாக்குதல்களைக் கூடத் தடுக்க முடியாமல் திணறுகின்றன. கடந்த 40 ஆண்டுகளாக எந்த ஒரு நேரடிப் போரிலும் ஈடுபடாத சீன ராணுவத்தின் தயாரிப்புகள், கட்டுப்படுத்தப்பட்ட சோதனைச் சாலைகளில் மட்டுமே வீரத்தைக் காட்டுகின்றன; நிஜமான போரில் அவைபொம்மையாக  நிற்கின்றன. கச்சா எண்ணெய்க்குப் பதிலாகத் தரம் குறைந்த உபகரணங்களை வழங்கும் சீனாவின் வர்த்தக முறையும் இந்தத் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம். தரத்தை விடக் கிடைப்பதே பெரியது என்ற நிலையில் ஆயுதங்களை வாங்கும் நாடுகள் இன்று தங்கள் பாதுகாப்பை இழந்து நிற்கின்றன. இந்தத் தொழில்நுட்ப வீழ்ச்சி தைவான் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு கனவுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

மேற்கத்திய நாடுகளின் மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் மின்னணு போர் முறைகளுக்கு முன்னால் தனது சொந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் செல்லுபடியாகாது என்பதைச் சீனா இப்போது உணரத் தொடங்கியிருக்கலாம்.. சீனாவின் HQ தொடர் அமைப்புகள் இன்று ஊதிப் பெருக்கப்பட்ட ஒரு பலூன் போலத்தான் காட்சியளிக்கின்றன; ஒரு சிறு மின்னணு ஊசி பட்டாலே அது உடைந்து சிதறிவிடும் என்பதே இன்றைய எதார்த்தம். இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்துார்' முதல் தற்போது ஈரான் மற்றும் பாகிஸ்தானில் நடக்கும் நிகழ்வுகள் வரை அனைத்தும் உணர்த்துவது ஒன்றே: தேசப் பாதுகாப்பை சீனாவின் பித்தலாட்டங்களை நம்பி ஒப்படைப்பது தற்கொலைக்குச் சமம். இனிவரும் காலங்களில் உலக நாடுகள் சீன ஆயுதங்களைத் தவிர்த்துவிட்டு, இந்தியாவின் தற்சார்பு பாதுகாப்பு முறையைப் பின்பற்றத் தொடங்குவது தவிர்க்க முடியாததாகிவிடும்.