24 special

போதை கடத்தலில் கூட்டு சேரும் திமுக விசிக! சிக்கப்போகும் மற்றுமொரு விசிக எம்எல்ஏ!

savukku shanker , jaffer sadiq
savukku shanker , jaffer sadiq

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை தேடும் பணியில் மத்திய போதையில் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஏனென்றால் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் கைது செய்யப்பட்ட ஒரு போதை கடத்தல் கும்பலுக்கும் இவருக்கும் உள்ள தொடர்பு தெரிய வந்ததை அடுத்தே அதிகாரிகள் இவரை தேடும் பணியை தொடங்கியது ஆனால் ஜாபர் இதுவரையிலும் தலைமறைவாகவே இருந்து வருகிறார். இருப்பினும் அவருக்கு எதிரான லுக் அவுட் நோட்டிஸையும் நேரில் ஆஜராகும் படியான சம்மனையும் டெல்லி போலீசார் விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி சென்னையில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகள் மூலம் ஜாபர் சாதிக்குடன் மற்ற சில பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் தொடர்பில் இருப்பதை கண்டறிந்துள்ளனர் இதனால் விரைவில் அவர்களின் பெயர்களை டெல்லி போலீசார் பட்டியலிட்டு அவர்களுடன் விசாரணையையும் அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.


இதனால் தமிழகம் முழுவதும் இந்த போதை கடத்தல் விவகாரம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் சிலருக்கு பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி,  தற்போது காவல்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ள சூடோபெட்ரின் வேதிப்பொருள் போதை பொருள் தயாரிப்பதற்கான முக்கிய வேதி பொருளாகும். இவர்கள் இதனை உணவுப் பொருள்கள் என்ற பெயரில் பார்சல் செய்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளனர். மேலும் 50 கிலோ எடையுள்ள வேதிப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர் இதன் மொத்த மதிப்பு 75 கோடி ரூபாய். அதோடு அதிகாரிகள் டெல்லியில் கைது செய்தவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக்கு அப்துல் ரகுமானின் அவரது சகோதரரான முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளனர்.

வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட போதைப் பொருட்கள் செய்வதற்கான மூலப்பொருட்களின் மதிப்பு 2000 கோடி ரூபாய் அதோடு இதனை இந்தியாவிலும் விற்பனைக்காக பயன்படுத்தி இருப்பார்கள் அதன் மதிப்பு 15000 கோடி ரூபாய் இருக்கும் என சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தல் குறித்த தகவல்களை சேகரித்து வரும் முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் மதன்குமார் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த தகவல்கள் அனைத்தும் தமிழக மக்களை பதைபதைக்க வைக்கின்ற நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், கடந்த 2019 ஆம் ஆண்டு, 38.687 கிலோ கேட்டமின் (போதைப் பொருள் பயன்பாட்டுக்காக) மலேசியாவிற்கு கடத்தியதற்காக ஜாபர் சாதிக், அவரது சகோதரர் முகமது சலீம் மற்றும் சிலர், போதைப் பொருள்கள் மற்றும் மனநோய் மருந்துகள் சட்டத்தின் (NDPS சட்டம்) கீழ் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் இடம்பெற்ற ஜூகோ ஓவர்சீஸ் என்ற நிறுவனத்தின் பெயரில், கடந்த 2021 ஆம் ஆண்டு, ஜாபர் சாதிக் மற்றும் ஒரு பிரபல நபர், தமிழகத்தில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஜாபர் சாதிக் தமிழகத்தை தங்கள் இருப்பிடமாக மாற்றி, தங்கள் போதை சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த திமுக தலைவர்களுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறார் என்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் மூத்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் போதை பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய தலைவராக உள்ள ஜாபர் சாதிக் திமுகவைச் சேர்ந்தவர் அவரது சகோதரர் சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் அதனாலே இருவரும் கூட்டாக உள்ளனர் என்றும், ஒருவேளை போதை பொருள் கடத்தில் குறித்து திருமாவளவன் கருத்தை முன் வைத்தால் திமுக மாட்டிக் கொள்ளும் திமுக முன்வைத்தால் விசிக்காவும் சிக்குவதற்கு வாய்ப்பு உள்ளது இதன் காரணமாகவே திருமாவளவனும் முதல்வரும் வாய் திறக்காமல் இருக்கிறார்கள் என்ற வகையில் கூறியதோடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மற்றுமொரு எம்எல்ஏ விற்கும் இந்த போதைப் பொருள் கடத்தலுக்கும் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். இது இணையங்களில் வைரலாகி வருகிறது.