Tamilnadu

அன்று "சுப்ரமணியசாமிக்கு" என்ன நடந்ததோ அதுவே "மாரிதாசிற்கு" நடக்கிறது தீர்வு இனி அதுதான் அடித்து சொல்லும் இணையவாசிகள்!

maridhas and Subramaniyasamy
maridhas and Subramaniyasamy

மாரிதாஸ்  தொடர்ச்சியாக புதிய வழக்குகளில் கைது செய்யும் நிலையில் இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கள் என்று பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் சமூகவலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர், இந்த சூழலில் சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்து பரவி வருகிறது. அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் சுப்பிரமணியசாமிக்கு என்ன நடந்ததோ அதுதான் தற்போது மாரிதாசிற்கு நடப்பதாக சக்திவேல் என்பவர் குறிப்பிட்டுள்ளார் இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :- 


இந்திய  அரசியலமைப்பு அனைவருக்கும் தனிமனித உரிமைகள் வழங்குகிறது.சுப்பிரமணியன்சாமி ஜெயலலிதாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்து, கவர்னரின் அனுமதியும்பெற, ஜெயலலிதா சுப்ரமணியன் சாமியை டார்கெட் செய்தார். ஒருவழக்கு தொடர்ந்து அவர் ஜாமின் பெற்று வெளியேவர,  நீதிமன்ற வாசலிலே அவரை மறுபடியும் கைதுசெய்ய அடுத்த வழக்குடன் போலிஸ் தயாராயிருக்க, சுப்ரமணிய சாமியின் ரெப்பரசென்டேஷனின் பேரில் அவரை எந்த வழக்கின் கீழூம் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் கைதுசெய்ய தடை வழங்கினார் நீதிபதி.நீதிமன்ற வாசலில் போலிஸ் அவரை கைதுசெய்ய நெருங்க.

இந்த உத்தரவை உடனிருந்தவர் கூற அது எங்களுக்கு வரவில்லை என்று சொல்லி அஸிஸ்ஸண்ட் கமிஷனர் சுப்பிரமணிய சாமியை நோக்கி நகர அவரைத் தொட்டால் நாளைக்கு யூனிபார்ம் இருக்காது என்று மூத்த வழக்கறிஞர் உறும..பின்வாங்கியது அந்த காவல்துறை. முடிச்சுகளை அவிழ்த்தால்,கோடுகளை இணைத்தால்,புள்ளிகளைசேர்த்தால் கண்ணுக்குத் தெரிவது என்ன தெரியுமா?தனிமனிதனுக்கு எதிராக அரசாங்கமே செயல்படுவது போல அரசியல் சாசனம் மீறப்படுவது போலத்தான் தெரிகிறது.

இன்று ராம்ஜெத்மாலினி இல்லை சுப்பிரமணியன்சாமி தலையிடாமல் இருக்கலாம் வேறோருவர் வரமாட்டாரா?உச்சநீதிமன்றத்தின் கதவுகள் தட்டப்படவேண்டிய நேரம் நெருங்கிவிட்டதாகவே தெரிகிறது மாரிதாசின் வழக்குகளில் என்று குறிப்பிட்டுள்ளார் சக்திவேல். மாரிதாஸ் புதிய வழக்குகளில் கைது செய்து அவரை மிரட்டும் சூழலில் தமிழக அரசு ஈடுபட்டு வரும் வேலையில் மாரிதாஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் களம் இறங்கி தமிழக அரசிற்கு கடும் நெருக்கடியை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.