
ஒரு அமைச்சர் அவர் பேர் காந்தின்னு சொன்னாங்க, சத்தியமா அவர் பெயரை நேற்றுதான் கேள்விப்பட்டேன். காந்தி என்று சொல்லிவிட்டு வாந்தி எடுக்கிறார். 1994 ஆம் ஆண்டு கள்ளச்சாராயம் காய்ச்சி அப்போதைய அதிமுக ஆட்சியில்,
ஜெயலலிதா அவர்களால் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறைக்குப் போன ஒரு மனிதர், மக்கள் பிரதிநிதியாக வந்து என்னைப் பற்றி குறை சொல்லுகிறார். அதாவது ஒரு அரசியல்வாதிக்கு மற்றொருவரை பற்றி குறை சொல்ல வேண்டுமென்றால் தகுதி வேண்டும் என திமுக அமைச்சர் காந்தியை வெளுத்து வாங்கி இருக்கிறார் அண்ணாமலை.
மேலும், அமைச்சர் காந்தி கள்ள சாராயம் காய்ச்சி குண்டர் சட்டத்தில் உள்ளே சென்றாரா.? இல்லையா.? என நீங்களே அவரிடம் கேள்வி கேளுங்கள், அவருக்கு எல்லாம் என்ன தகுதி இருக்கு என வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு வந்து காந்தி என பெயர் வைத்துக் கொண்டு வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார் என அமைச்சர் காந்தியின் இழிவான பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
அமைச்சர் காந்தி அண்ணாமலை குறித்து ஒருமையில் பேசிய நிகழ்வு நேற்று வைரலான நிலையில் தற்போது அமைச்சர் காந்தியின் கடந்த கால வாழ்க்கை வரலாறு குறித்து அண்ணாமலை பொதுவெளியில் பேசிய சம்பவம் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. ஆமாம் அண்ணாமலை கூறியதுபோல் கள்ளச்சாராயம் காய்ச்சியா காந்தி சிறைக்கு சென்றார் என்ற கேள்வி அதிகரித்து காணப்படுகிறது.
அமைதியாக இருந்த அண்ணாமலையை சீண்டி தற்போது வாண்டடாக வந்து சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் காந்தியை பூந்தி போட்டுள்ளார் அண்ணாமலை என்று அவரது கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.