Tamilnadu

என்ன நடந்தது மோடி அழுத்தி சொன்ன விஷயம். ... மீண்டும் கனவிலும் வராது இளம் எழுத்தாளர் அதிரடி!

modi
modi

இளம் எழுத்தாளரும் தேசிய சிந்தனையாளருமான சுந்தரராஜ சோழன் கடந்த மூன்று நாட்களில் நடைபெற்ற சம்பவம் குறித்து பேசிய கருத்துக்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன அதில், முப்படையின் DGMO க்கள் பேட்டி மிகச்சிறப்பாக இருந்தது.என்ன நடந்தது என்பதை, எவ்வளவு துல்லியமாக, அளவு மாறாமல் விளக்க முடியுமோ விளக்கினார்கள்.அதை தொடர்ந்து நாட்டு மக்களிடம் பிரதமர் நேற்றிரவு பேசிய உரையானது இந்திய வரலாற்றில் மைல்கல்..



நம்முடைய ராணுவ நடவடிக்கை, ராஜ தந்திர செயல்பாடுகள், இலக்குகள் என்னவென்பதை எல்லாம் மிகத்தெளிவாக பேசினார்.இது போரின் யுகம் எப்படி இல்லையோ, அதே போல தீவிரவாதத்தின் யுகமுமல்ல.ஒரு நாடே தீவிரவாத செயல்களை ஊக்குவிப்பதும், ராணுவமே தீவிரவாதிகளை ஆதரிப்பதையும் பாகிஸ்தான் வழியாக பார்க்கிறோம்.உலகத்தில் நடந்த மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் எல்லாவற்றிற்கும் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த தீவிரவாத முகாம்களுக்கு தொடர்பிருந்தது அவற்றை வேரோடு ஒழித்துள்ளோம் என்று பிரதமர் கூறியிருக்கிறார்.


பிரதமர் பேசும் போது ஒன்று தெளிவாகப் புரிகிறது.நம் தாய்மார்களின் குங்குமத்தை அழித்தவர்களின் இதயத்தை பிளந்திருக்கிறோம்.இனி அப்படி நினைக்கிற எந்த ஒவ்வொருவனின் நெஞ்சத்திலும் அச்சத்தை விளைவித்திருக்கிறோம் என்று பிரதமர் கூறியிருக்கிறார்.ஒரு பஹல்காமுக்கான பதிலடி அல்ல இது.நூற்றாண்டுகளின் வலிக்கான பதிலடிகளின் துவக்கம் என்றே தெரிகிறது.


ஆப்ரேஷன் சிந்தூர் என்பது வெறுமனே ஒரு ராணுவ நடவடிக்கை அல்ல.இது நமது கலாச்சார பாதுகாப்பின் முதல் கேடயம்.நம் மீது பல நூற்றாண்டுகளாக நிகழ்த்தப்பட்ட ஆக்ரமிப்புகளை இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்கிற பண்பாட்டு வெடிப்பு.


ஜெய்ஸ்-இ-முகமது போன்ற இயக்கங்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு இயங்குகிறது.அவர்களின் இயங்கு விசையே பாரதத்தை சிதைக்க வேண்டும் என்கிற நோக்கம் மட்டுமே.கிட்டத்தட்ட சுதந்திரம் அடைந்து தனிநாடாக பிரிந்ததில் இருந்து பாகிஸ்தானின் எண்ணமும் இதைத் தவிர வேறில்லை.பாகிஸ்தானுக்கு இந்தியா மீதுள்ள வெறுப்பின் கள்ளக் குழந்தைகள்தான் இந்த தீவிரவாத இயக்கங்கள்.


தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், அதிகாரிகள், அதிகார வட்டம், ராணுவம், தீவிரவாதிகள் என எல்லோரும் ஒரே நேர்க்கோட்டு சந்தியில் வந்து நிற்பது இந்தியாவை அழிக்க வேண்டுமென்று.இந்த சிந்தனையில் இருக்குமொரு நாட்டை சர்வதேச சமூகங்கள் அங்கீகரிப்பதே தவறு.பாகிஸ்தானை ஆதரிக்கும் எல்லோரும் இந்தியா அழிய வேண்டுமென நினைப்பவர்களாகத்தான் இனி நாம் கருத முடியும்.இவ்வளவு வெட்ட வெளிச்சமான பின்பும் அவர்களை ஆதரிப்பவர்கள் நம்மை அழிக்க ஆயுதம் தருபவர்களாகத்தான் இந்தியா கருதும்..


பிரதமர் மோடி தெளிவாக கூறியுள்ளார்.தீவிரவாத கூடாரங்களை வேரோடு அழித்திருக்கிறோம்.தீவிரவாதிகளை, அதன் தளபதிகளை கொத்து கொத்தாக அழித்திருக்கிறோம்.தீவிரவாதத்திற்காக பரிந்து கொண்டு நம் மீது தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் ராணுவத்தை அடித்து நொறுக்கியுள்ளோம்.


இப்போது இது முதல்கட்ட நவடிக்கைதான், இந்த யுத்தம் இன்னும் முடியவில்லை.பாகிஸ்தானோடு அமர்ந்து பேச நமக்கு இரண்டு விஷயம்தான் உள்ளது.ஒன்று தீவிரவாத அச்சுறுத்தல், இன்னொன்று POK-வை மீட்பது குறித்தானது.எனவே, இதை நோக்கிதான் நாம் நகருகிறோம்.இந்த தற்காலிக போர் நிறுத்தமானது, பாகிஸ்தானை தீவிரமாக கண்காணிக்கும் கால அவகாசம்.அவர்கள் சிறுபிழை செய்தாலும் பூண்டோடு அழிக்கப்படுவார்கள்.அணு ஆயுத மிரட்டலுக்கு எல்லாம் இந்தியா அஞ்சாது.அப்படிப்பட்ட மிரட்டல்களின் முதுகெலும்பை உடைப்போம் என பிரதமர் கூறியிருக்கிறார்.

1998 பிறகுள்ள உலக சூழல் வேறு, 1971 ல் உலக சூழல் வேறு.பாகிஸ்தான் இன்று இந்தியாவிற்கு நிகராக பொருளாதாரத்திலோ, ராணுவத்திலோ அல்லது எதிலுமோ இல்லை.ஆனால், இந்தியாவை சீரழிக்க நினைக்கும் எல்லா எண்ணம் கொண்டவர்களின் அணுக்கத்திலும் அது உள்ளது..

ஆசியா 5 அணு ஆயுத நாடுகளை தன்னகத்தே வைத்துள்ளது.இதன் அமைதியின்மை நிச்சயம் 1971 யுத்தம் போல இருக்காது என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்..ஆனாலும், நாம் அணு ஆயுத மிரட்டல்களை எல்லாம் பொருட்படுத்தாது, பாகிஸ்தானின் எல்லா தலைமை நகரங்களிலும் உள்ளே புகுந்து தாக்கியிருக்கிறோம் என்பது எளிமையாக கடக்கும் விஷயமல்ல.அணு ஆயுத நாட்டின் இருதய பகுதிகளில் ராணுவ தாக்குதல் நடத்திய ஒரே நாடு இந்தியா என்றுதான் வரலாறு பதிவு செய்யும்.. என குறிப்பிட்டுள்ளார்