Cinema

சென்னை கார் பந்தய போட்டிற்கு மறுப்பு தெரிவித்த நடிகை...!

Nivetha Pethuraj, Udhayanithi satlin
Nivetha Pethuraj, Udhayanithi satlin

சென்னையில் கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் கார் ரேஸ் நடத்துவதாக இருந்தனர். அப்போது பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அந்த ரேஸ் நிறுத்தப்பட்டது. அப்போது இந்த ரேஸுக்கு காரணமே நடிகை நிவேதா பெத்துராஜ் என ஒரு விமர்சனம் வந்தது. தற்போது அதனை மீண்டும் கையில் எடுத்துள்ளது தமிழக அரசு. ஜூன் மாதத்திற்க்கு பிறகு நடத்தலாம் என நீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் மக்கள் பயன்படுத்தும் சாலையில் கார் ரேஸ் நடத்துவதில் மும்முரம் காட்டினார். அரசியல் விமர்சகர்களோ உதயநிதி கார் ரேஸ் நடத்துவதற்கு காரணம் அவர் பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடித்திருந்தார் அதில் நடிகையாக இருந்த நிவேதா பெத்துராஜ் கார் ரேஸில் ஆற்வம் உள்ளது அதன் காரணமாவகே உதயநிதி கார் பந்தயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார் என கூறப்பட்டது. மேலும், சினிமாவில் இருந்து அரசியல் வந்தவர் இன்னும் விளையாட்டு மோகத்தில் இருந்து வெளியே வரவில்லை என்றும் கூறப்பட்டது. 

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் மீண்டும் நடிக்கியா நிவேதா பெத்துராஜ் குறித்து விமர்சனம் வர தொடங்கியது. இதற்கு, அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: அண்மையில் எனக்காக பணம் செலவிடப்பட்டதாக தவறான செய்திகள் பரவி வருகின்றன. இப்படியான தகவல்களை பரப்பும் சிலர் மனிதாபிமானத்துடன் தகவலை பரப்புவதற்கு முன்னர் சரிபார்த்துவிடுவார்கள் என்று நினைத்துதான் நான் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தேன். கடந்த சில நாட்களாக பரவும் பொய் செய்தியால் நானும் எனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளோம். இது போன்ற தவறான செய்திகளை பரப்பும் முன்பு யோசித்து பாருங்கள். நான் கண்ணியமான குடும்பத்தை சேர்ந்தவர். எனது 16 வயது முதலேயே நான் பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திருக்காமல் இருந்து வருகிறேன்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக துபாயில் வாடகை வீட்டில் நான் எனது குடும்பத்தினருடன் இருந்து வருகிறேன். திரைப்படங்களில் கூட நான் இதுவரை எந்த தயாரிப்பாளர்களிடமோ இயக்குநர்களிடமோ கதாநாயகன்களிடமோ பட வாய்ப்பு கொடுங்கள் என கேட்டது கிடையாது. இதுவரை 20 படங்களில் நடித்திருக்கிறேன். அவை எல்லாமே என்னை தேடி வந்த வாய்ப்புகள்தான். நான் யாரையும் தேடி போகவில்லை. நான் ஒரு போதும் பணத்திற்காகவோ வேலைக்காகவோ பேராசையுடன் இருந்தது கிடையாது. 

2002ஆம் ஆண்டு முதல் துபாயில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். 2013 ஆம் ஆண்டு கார் பந்தயத்தில் விருப்பத்தின் பேரில் நான் ஈடுபட்டு வருகிறேன். அதிலும் சென்னையில் நடக்கும் போட்டிகள் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. நான் என்னை பற்றி பேசப்படும் செய்திகள் எதுவுமே உண்மையில்லை, வதந்தி என்பது அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிகைத் துறையில் மனிதம் மீதம் இருக்கிறது என நம்புகிறேன். பத்திரிகையாளர்கள் தங்களுக்கு வரும் செய்திகளை சரி பார்த்துவிட்டு பிரசுரம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். எங்கள் குடும்பத்தை மேலும் மனஉளைச்சலுக்குள்ளாகாதீர்கள். எனக்காக இதுவரை ஆதரவு தெரிவித்து கருத்துகளை பேசியவர்களுக்கு நன்றி. வாய்மை வெல்லும். இவ்வாறு நிவேதா பெத்துராஜ் விளக்கமளித்துள்ளார்.

இதற்கு சமூக ஆர்வலர்களோ ஏன் அந்த பத்திரிகையாளர் மீது வழக்கு தொடரவில்லை என் கேள்வி எழுப்ப நிவேதா வழக்கு தொடர்ந்தால் மீண்டும் அந்த பத்திரிகையாளர் உதவாது புது தகவலை வெளியிடுவார் அதன் காரணமாவே மீது வழக்கு தொடராமல்  இருக்கிறார் என தொடர்ந்து நிவேதா பெத்துராஜூக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.