24 special

விரைவில் போதை வழக்கில் சிக்கப்போகும் அரசியல் புள்ளிகள்...

udhayanithi, jaffer sadiq
udhayanithi, jaffer sadiq

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தமிழகத்தில் மிக முக்கிய குற்றவாளியாக தேடப்படுகின்ற ஜாபர் சாதிக் தலைமறைவாக இருப்பதால் அவரைத் தேடும் பணியில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் அமலாக்கத் துறையினரும் ஈடுபட்டுள்ளனர். அதாவது மேற்கு டெல்லியில் கைலாஷ் பார்க் பகுதியில் இருந்த குடோனில் டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட பொழுது அங்கு போதை பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள 50 கிலோ ரசாயன பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தல் விவகாரத்தில் சம்பவ இடத்திலே கைது செய்யப்பட்ட மூன்று பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களுக்கும் தமிழகத்தை சேர்ந்த திமுக நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் என்பவருக்கும் அவரது சகோதரர் சலிம் என்பவருக்கும் தொடர்பு இருப்பதை அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்து அவர்களை விசாரணைக்கு ஆஜராகும்படி கைது செய்யும் முற்படுவதற்குள் இருவரும் தலைமறைவாகினர்.


இதனை அடுத்து அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஜாபர் சாதிக்கின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை டெல்லி போலீசார் கைப்பற்றி யார் யார் சாதிக்கும் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர் என்பதையும் கண்டறிந்துள்ளனர். அதில் சினிமா பிரபலங்கள், நண்பர்கள் அரசியல் பிரமுகர்கள் அதிகாரிகள் தொழிலதிபர்கள் முகவரிகள் என பலர் ஜாபர் சாதிக் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதும் தெரியவந்துள்ளது. இதனால் அவர்களின் பட்டியலை டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தயாரித்து பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கும் ஜாபர் சாதிக்கும் உள்ள தொடர்பு மற்றும் உறவு குறித்த முழு விசாரிகளையும் மேற்கொண்டு விரைவில் அவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக உத்தரவிட உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இருப்பினும் ஜாபர் சாதி பிடிபட்டால் மட்டுமே அனைத்து உண்மைகளும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

இப்படி தமிழகம் போதைப்பொருள் கடத்தலின் மிக பரபரப்பான தகவல்களால் அதிர்ச்சியுற்று உள்ள நிலையில் தமிழகத்தின் முதல்வரான மு க ஸ்டாலின் இது குறித்து எந்த ஒரு கருத்தையும் இதுவரை தெரிவிக்காமல் இருக்கிறார்! அதேபோன்று அவரது கூட்டணியில் உள்ள கட்சிகளும் இது குறித்து வாய் திறக்காமல் இருப்பது எதிர்க்கட்சிகளுக்கு கடும் கோபத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. அதனால் திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் விமர்சனம் செய்து வருகின்றனர் மேலும் 2013 ஆம் ஆண்டில் தேடப்படும் குற்றவாளியாக இருந்த ஜாபர் சாதிக் எப்படி திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு சுதந்திரமாக வெளியில் நடமாட ஆரம்பித்தார் என்று கேள்வியையும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன் வைத்துள்ளார். 

அதோடு எப்படி அவரை விசாரிக்காமல் திமுக ஒரு முக்கிய பொறுப்பை அவருக்கு வழங்கியிருக்கும் என்றும் கிடுக்குபிடியான கேள்விகளை முன் வைத்துள்ளார்.  இதற்கிடையில் ஜாபர் சாதித்திருக்கும் தமிழ் திரை உலகின் இயக்குனராக உள்ள அமீருக்கும் தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது இந்த நிலையில் மற்றுமொரு பரபரப்பான தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது ஜாபர் சாதி திமுகவின் முக்கிய நிர்வாகியாக பொறுப்பேற்கப்பட்டத்திற்கு பின்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருப்பதாகவும் அவருக்கும் போதை கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவரது பெயரும் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் வசம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர் தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை இருப்பினும் இந்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறி உள்ளது.