Tamilnadu

வருங்கால முதல்வர் டெல்லிக்கு அதிரடி விசிட்! அண்ணாமலைக்கு அடுத்த அசைன்மென்ட் இதுதானாம்!?

Annamalai
Annamalai

தமிழகம் திராவிட நாடு;  இங்கு பாஜக காலூன்றுவது கனவிலும் நினைத்து பார்க்க முடியாத விஷயம் என சொல்லிக் கொண்டிருந்த காலம் சென்று தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 4 எம்எல்ஏக்கள்-களை கொண்டு கெத்தாக வலம் வருகிறது பாஜக.


இப்படியான ஒரு சமயத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு அவருடைய அதிரடி கருத்துக்களும் செய்தியாளர்கள் சந்திப்பின்பது அதிரடி கேள்விகளும் தமிழகத்தில் பெரும் பேசும் பொருளாக மாறியிருக்கின்றது. அரசியல் கட்சித் தலைவர்களையும் கதிகலங்க வைத்து இருக்கின்றது. அதற்கெல்லாம் காரணம் ஒரு துண்டு சீட்டு இல்லாமலும் தன்னுடைய நினைவிலேயே அனைத்து புள்ளி விவரங்களையும் வைத்து, டப்பு டப்பு என அடுத்த நொடியே பதிலடி கொடுக்கும் விதம் என அண்ணாமலை பற்றி பல நல்ல விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

அரசியலைப் பொறுத்தவரையில் அனுபவம் மிகமிக முக்கியம். ஆனால் அண்ணாமலையை பொருத்தவரையில் அப்படி ஒரு அனுபவம் இருக்கிறதா என்ற கேள்விக்கு இடையில் சமீபத்தில் நடக்கும் செய்தியாளர்களின் சந்திப்பில் மீடியாக்களை கையாளும் விதம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு இருக்கின்றது. இதற்கெல்லாம் காரணம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பதவியில் இருந்த மூத்த அரசியல் தலைவர்கள் கூட கேட்காதே கேள்வி எல்லாம் நேரடியாக செய்தியாளர்களை கேள்வி கேட்கிறார். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், "கோபாலபுரம் சொன்னால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? என ஒரே ஒரு ஒற்றை கேள்வியால் எப்படி மீடியா செயல்படுகிறது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார். 

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க நேற்று நான்கு மாவட்டங்களில் பாஜக அலுவலகம் தேசிய தலைவர் ஜெ .பி .நட்டா முன்னிலையில் திறக்கப்பட்டது. குறிப்பாக திருப்பூரில் நடைபெற்ற பாஜக அலுவலக திறப்பு விழாவில் பேசிய அண்ணாமலை 2026 - இல் 150க்கும் அதிகமான எம் எல் ஏ - களை பெற்று பாஜக தமிழகத்தில் ஆட்சி பிடிக்கும், கோட்டைக்கு செல்லும் என ஆணித்தரமாக பேசினார். தற்போது தமிழகத்தில் எதிர்க்கட்சி என்ற போர்வையில் அதிமுக 65 சீட்டுகள் பெற்று இருந்தாலும் கூட இரட்டை தலைமையால் ஒன்றும் எடுபடாமல் இருக்கின்றது. இதற்கு நடுவில் சசிகலா அவ்வப்போது தலைகாட்டும் போக்கும் இருக்கின்றது.

ஆக மொத்தத்தில் அதிமுகவுக்கு சரியான தலைமை இல்லை. எப்படி தமிழகத்தில் அதிமுகவுக்கு சரியான தலைமை இல்லையோ, அதே போன்று தேசிய அளவில் காங்கிரசுக்கு சரியான தலைமை இல்லாத நிலையில் இந்தியா முழுக்க பாஜக மிகவும் ஸ்ட்ராங்கா இருக்கின்றது என்பதை உணர வைக்கின்றது. அதுவும் குறிப்பாக தமிழகம் திராவிட நாடு என வாய்மொழி சொன்னதெல்லாம் தவிடுபொடியாக்கி மெல்ல மெல்ல பாஜக தமிழகத்தில் உறுதியாக காலூன்றி வருகின்றது. அதற்கு உதாரணமாக தான் அண்ணாமலை நேரடியாகவே சொல்கிறார் திமுகவுக்கு எதிர்கட்சி பாஜகதான் என்று, தற்போது அதையெல்லாம் தாண்டி அடுத்த ஆட்சி பாஜகதான் என்றும் குறிப்பிட்டு பேசுகிறார் .

இந்த நேரத்தில் உதாரணத்திற்கு, மேற்குவங்கம் டெல்லி மாநிலங்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இங்கு மிக அதிக செல்வாக்கை பெற்றிருந்த காங்கிரஸ் நிலை தற்போது என்ன என்று சிந்தித்து பாருங்கள். 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கட்சி இப்போ எங்கே இருக்கிறது என்று கூட தெரியவில்லை. இப்படியான நிலையில்தான் அதிமுகவின் பலவீனத்தை அறிந்து கொண்ட பாஜக தற்போது படுபயங்கரமாக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. 

நேற்று ஒரே நாளில் 4 பாஜக அலுவலகங்கள் திறக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்டமாக வரும் பொங்கலன்று 6 கட்டிடங்களும், அதனை அடுத்து மார்ச் மாதம் மேலும் 6 கட்டிடங்களும் தமிழகத்தில் திறக்கப்பட இருக்கிறது. இதற்கிடையில் நேற்று அலுவலகம் திறந்த உடனே இன்று டெல்லியில் இருந்து அண்ணாமலைக்கு அழைப்பு வர டெல்லி விரைந்துள்ளார் அவர். குறிப்பாக மாவட்டம் மற்றும் மாநில அளவிலான பட்டியலை தயார் செய்து சில மாற்றம் கொண்டுவர வேண்டும் என டெல்லி மேலிடத்திற்கு ரிப்போர்ட் சென்று உள்ளதாம். இதன் காரணமாக பல புதிய திட்டத்தோடு அண்ணாமலை திருப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தற்போதைக்கு ,அடுத்த அசைன்மென்ட் அண்ணாமலைக்கு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அனைவர் மத்தியிலும் எழுந்து இருக்கின்றது. நேற்று அண்ணாமலையின் பேச்சும் செயல்பாடும், இன்று டெல்லிக்கு அவரை அழைத்து இருப்பதையும் வைத்து பார்க்கும்போது, விரைவில் பாஜக மிகப்பெரிய பலமாக தமிழகத்தில் வேரூன்றும் என்ற பயம் எதிர்க்கட்சிகளுக்கு இப்போதே உருவாகி இருக்கிறது. அதனால்தான் படு சூடாக பல்வேறு விவாதங்கள் ஊடகங்களில் பேசி வருகின்றனர். ஒவ்வொரு கட்சி சார்பாக என்னதான் ஆதரவாக பேசினாலும் ரியாலிட்டி என வரும் போது தமிழகத்தில் பாஜக வளர்க்கிறது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது என்கின்றனர் உண்மையை பேசும் அரசியல் நிபுணர்கள்.

மிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.