Tamilnadu

பரிதாப நிலையில் திமுக கூட்டணி கட்சியினர் நகராட்சி தேர்தலில் விரட்டி விட முடிவா? ஏன் ஒருமை பேச்சு!

Thirumavalan
Thirumavalan

திமுக கூட்டணி கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர், ஆட்சிக்கு முன்பு ஒரு பேச்சும் ஆட்சிக்கு பின்பு ஒரு பேச்சும் என கேள்வி பட்டு இருப்போம் ஆனால் இப்போது திமுகவினர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தோழரே. எப்படி இருக்கீங்கள் என கேட்டவர்கள் ஆட்சிக்கு வந்த பின்பு அவன் இவன் என ஒருமையில் பேசியது கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


நேற்று செய்தியாளர் ஒருவர் மதுரையில் செய்யவேண்டிய பணிகள் குறித்து அமைச்சர் கே என் நேருவிடம் கேள்வி எழுப்பினார் அதற்கு அமைச்சர் நேரு ஏன் என்கிட்ட கேட்குற வெங்கடேசன்னு ஒருத்தன் இருக்கான் அவன்கிட்ட கேளு என ஒருமையில் குறிப்பிட்டு பேசினார், வெங்கடேசன் திமுகவின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்.

பாஜகவிடம் அதிமுக அடிமையாக இருக்கிறது என பல விவாத மேடைகளில் பொங்கிய அருணனும், சுந்தரவள்ளியும், தங்கள் எம்பி யை அவன் இவன் என தரம் தாழ்ந்து பேசுவதை இதுவரை ஒரு வார்த்தை கண்டிக்கவில்லை, இது ஒருபுறம் இருக்க கரூர் ஜோதிமணி எம்பி க்கும் - அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையேயான பணி போர் உச்சம் அடைந்து உள்ளது.

காலெக்டர் அலுவலகத்தில் பெட்டி படுக்கையுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார் ஜோதிமணி, நான் போராடி மத்திய பாஜக அரசிடம் மாற்று திறனாளிகளுக்கு நிவாரணம் தேவையான பொருள்கள் வாங்க நிதி வாங்கி வந்தால் என்னை அழைக்கவே இல்லை மேலும் நான் இல்லாமல் திட்டத்தை செயல்படுத்த பார்க்கிறார்கள், கனிமொழி தூத்துக்குடியில் நிகழ்ச்சி நடத்தலாம் நான் நடத்த கூடாதா என கண்ணீர் விடாத குறையாக ஆளும் அரசாங்கத்தை நோக்கி மென்மையான முறையில் கேள்வி எழுப்புகிறார்.

இதுவே அதிமுக ஆட்சியிலோ பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் நடந்து இருந்தால் ராகுல் காந்தியை கூப்பிட்டு கல்லுப்பு, தயிர் கிச்சடி என பிரியாணி போட்டது போல் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு பாயசத்தை போட்டு இருப்பார் ஜோதிமணி. அந்த வகையில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது தொகுதியில் அரசு விழா கூட நடத்த முடியாத சூழல்தான் உள்ளது.

இது ஒருபுறம் என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் ஏற்கனவே இரண்டு மாதம் முன்பே ஐயோ அரசு அதிகாரிகள் குறிப்பாக காவல் துறையினர் திட்டமிட்டு எங்கள் கட்சியினரை கைது செய்கிறார்கள், திமுக ஆட்சியில் ஒரு கொடி கம்பம் கூட நட உரிமை இல்லையா இதை விடமாட்டோம் என ஆவேசமாக முதல்வரை சந்தித்து முறையிட்டார் திருமாவளவன், ஆனால் தற்போது வரை விசிக கொடிக்கம்பம் சர்ச்சையான பகுதியில் நடுவே இல்லை.

இப்படி ஒருமையில் பேசியும் கூட்டணி கட்சியினரை தொகுதிக்குள் நலத்திட்டம் கூட செய்யமுடியாமல் விரட்டும் திமுகவை நோக்கி யாருமே வாய் திறக்கவில்லை காரணம் எதிர்வருகின்ற நகராட்சி ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியை விட்டு திமுக அதன் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விசிக இன்னும் சில இதர கட்சிகளை விரட்டி விட்டால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது என்ற காரணத்தால் வாயை மூடி ஒருமையில் திட்டனாலும்.. "ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து"என்ற திருக்குறள்போல் என்ன திட்டினால் நமக்கு என்ன என காரியத்தில் கண்ணாக உள்ளனராம் திமுக கூட்டணிகட்சியினர்.

மிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.