Cinema

தமிழ் நடிகர்கள் காணவில்லை! தமிழக நடன மாஸ்டர் சிவஷங்கருக்கு வட இந்திய நடிகர் சோனுசூட் உதவி!

Sonu sood
Sonu sood

மிகவும் புகழ் பெற்ற நடன மாஸ்டரான சிவசங்கர் மாஸ்டர் தற்போது ஆந்திராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு பண உதவி தேவைப்படுவதால் உதவி செய்ய முன்வந்துள்ளார் பாலிவுட் நடிகர் சோனு சூட். தமிழ் சினிமாவை பொருத்தவரை மிக பிரபலமான நடன கலைஞர்கள் என்றால் அதில் சிவசங்கர் மாஸ்டரும் ஒருவர்.


தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் தன் திறமையை வெளிக் காட்டியவர். இதுவரையிலும் கிட்டத்தட்ட 800 க்கும் அதிகமான படங்களுக்கு நடனம் அமைத்துக் கொடுத்தவர் இவர். வரலாறு படத்தில் நடிகர் அஜித்தை மிக சிறப்பாக ஆட வைத்தவர் இவர்தான். இந்திய அளவில் மிகவும் பிரபலமாக பாடலாக கருதப்பட்ட திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மதராசா பாடலுக்கு நடனம் அமைத்து கொடுத்தவரும் இவரே. தீரா தீரா என்ற பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக தேசிய விருதையும் பெற்றிருக்கிறார் இவர். 

தற்போது இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருடைய உடல்நிலை பலவீனம் அடைந்து உள்ளது. இந்நிலையில் சிகிச்சைக்காக அதிக பணம் செலவாகுவதால், மற்றவர்களின் உதவிக்காக நாடி உள்ளனர் குடும்பத்தினர். இது குறித்து ட்விட்டரில் பதிவிட அதனைத்தொடர்ந்து மாஸ்டருக்கு உதவுவதாக பாலிவுட் நடிகர் சோனுசூட் தனது ட்விட்டர் பதிவின் மூலம் தெரிவித்திருக்கிறார். அதில் ஏற்கனவே குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். தமிழக திரை உலகில் சாதி அரசியல் தலைதூக்கி நிற்கும் நிலையில், உயிருக்கு போராடும் சினி துறையை சேர்ந்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டருக்கு பாலிவுட் நடிகர் ஓடோடி வந்து உதவ முன்வந்துள்ளார். இவர் தான் உண்மையான ஹீரோ என சோனு  சூட்டை அனைவரும் புகழ்கின்றனர். யார் எங்கிருந்து உதவி கேட்டாலும் உதவி செய்யும் மனம் கொண்டவர் சோனு. இதற்கு முன்னதாக,கொரோனா உச்சத்தில் இருந்த வேளையில் பொதுமக்களுக்கு அதிகம் உதவி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.