Tamilnadu

"போட்டு" தாக்கிய அண்ணாமலை ஊடக தலைமையிடம் புலம்பிய பத்திரிகையாளர்கள் அடுத்தது என்ன?

Annamalai
Annamalai

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகர்கோவிலில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணையும் விழா கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட அண்ணாமலை பேசியதாவது :-


முன்னதாக குமரி மாவட்ட சிறுபான்மையின இளைஞர்கள் பா.ஜனதாவில் இணையும் கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:- ராகுல்காந்தி கன்னியாகுமரி, கேரளா வந்தால் கிறிஸ்தவராகி விடுவார். உத்தரபிரதேசம், ராஜஸ்தான் சென்றால் இந்துத்துவா பற்றி பேசுவார். ஆனால் பா.ஜ.க. மத சார்பற்ற அரசு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கம் கொண்ட கட்சி. ராகுல்காந்தி சொந்த தொகுதியான அமேதியில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.

இத்தனை காலமாக மதத்தை வைத்து அரசியல் செய்யும் காங்கிரசுக்கு சிறுபான்மையினர் ஓட்டு போடவில்லை. சிறுபான்மையின மக்களுக்கு எதிரானவர் என பொய்யான கருத்துகளை பா.ஜனதா கட்சி மீது சிலர் அரசியல் ஆதாயங்களுக்காக பரப்புகின்றனர். போப் பிரான்சிசை சந்தித்த பிரதமர் மோடி 60 நிமிடம் பேசி இருக்கிறார். இத்தகைய 60 நிமிட சந்திப்பு எந்த நாட்டு தலைவருக்கும் இதுவரை ஒதுக்கப்படவில்லை. தேசிய குடியுரிமை சட்டம் சிறுபான்மையின மக்களுக்கு நல்ல ஒரு சட்டம். இதுபற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. 

நான்கு வழிச்சாலை திட்டம் 5 ஆண்டுகள் பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்தபோது பா.ஜனதா ஆட்சியில் ரூ.40 ஆயிரம் கோடி வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தார். அவர் காலத்தில் கொண்டு வந்த நான்கு வழிச் சாலை திட்டம், தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. மண் இல்லை என்ற காரணத்துக்காக கிடப்பில் போடும் நிலை உருவாகி உள்ளது. மீன்வளத்துறைக்கு என தனி அமைச்சகம் முதன் முதலில் கொண்டு வந்தது பா.ஜனதா அரசு. சிறுபான்மையினர் மற்றும் மீனவ மக்களுக்கு எப்போதும் பா.ஜனதா அரசு அரணாக இருந்து வருகிறது.   இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் எம்.எல். ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, நயினார் நாகேந்திரன், மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன், துணை தலைவர் தேவ், நகரசபை முன்னாள் தலைவி மீனாதேவ், வேலூர் இப்ராகிம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சகாயம் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர் அதற்கு முறையாக அண்ணாமலை பதில் அளித்தார் மேலும் மீனவர்கள் கைது சம்பவம் குறித்து தனியார் ஊடகத்தை சேர்ந்த ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை காரசாரமாக பதில் அளித்தார்.

நீங்கள் குறிப்பிட்டு கேள்வி கேட்டால் நான் குறிப்பிட்டுதான் பதில் தருவேன் பேட்டியை போடுவதும் போடாததும் உங்கள் விருப்பம் எனது பதில் இப்படித்தான் இருக்கும் என வெளுத்து எடுத்தார் அண்ணாமலை இந்த சூழலில் குறிப்பிட்ட தனியார் ஊடகத்தின் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் நபரை  பத்திரிகையாளர் நிருபர்கள் தொடர்புகொண்டு அண்ணா அண்ணா என சொல்லி மொத்தமாக அந்த ஆளு நம்ம சேனலை மக்கள் மத்தியில் கட்சி சேனல் என அடையாள படுத்துகிறார். இது குறித்து பல முறை சொல்லியும் கேட்பதாக இல்லை, நாம் ஒளிபரப்பு செய்யவில்லை என்றால் வேறு சேனல்கள் அவரது பேட்டியை ஒளிபரப்பு செய்கின்றனர், அதனை முடக்க வேண்டும் என வரிந்து கட்டிக்கொண்டு அழுகாத குறையாக பேசி இருக்கிறார்கள்.

நாம் மட்டும் இந்த விவாகரத்தை சரி செய்யமுடியாது உடனடியாக தலைமை மூலம் அனைத்து சேனல் எடிட்டர்கள் உடன் பேசி விரைவில் ஒரு நல்ல முடிவு சொல்கிறேன் என கதறிய நிருபர்களை சமாதானம் படுத்தியிருக்கிறார் அந்த நபர். ஒட்டுமொத்த தமிழக ஊடகங்களை மட்டுமல்லாமல்,தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து டெல்லிக்கு தகவல் கொடுக்கும் பத்திரிகையாளர்கள் எவ்வாறு போலி வேஷம் போடுகிறார்கள் என்பதனையும் வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்  அண்ணாமலை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.