24 special

ஒரே உத்தரவு.. முழு பொருளாதாரம் ஸ்தம்பிப்பு! பிச்சை எடுக்கும் வங்கதேசம்!இதுதாண்டா இந்தியா.. இனி பேசுவ

PMMODI,SHEIKHHASINA
PMMODI,SHEIKHHASINA

இந்தியாவின் ட்ரான்ஷிப்மெண்ட் (Transshipment) வசதிகளை கட்டுப்படுத்திய முடிவால், வங்கதேசத்தின் ஏற்றுமதி–போக்குவரத்து அமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இந்திய சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை இலவச நெடுஞ்சாலையாக பயன்படுத்தி வந்த வங்கதேசம், தற்போது திசை தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட சந்தைகளுக்கு உடைகள், காலணிகள் போன்ற பொருட்களை அனுப்ப இந்தியாவின் கொல்கத்தா, டெல்லி, மும்பை துறைமுகங்களை வங்கதேசம் முக்கியமாக பயன்படுத்தி வந்தது. கூடுதல் வரி, கட்டணம் இன்றி குறைந்த நேரத்தில் சரக்குகள் சென்றதால், இது வங்கதேசத்திற்கு பெரும் ஆதரவாக இருந்தது. அவர்களின் சொந்த துறைமுகங்களான சிட்டகாங் உள்ளிட்டவை தேவையான வேகத்தையும் நம்பகத்தன்மையையும் வழங்காத நிலையில், இந்தியா முக்கிய போக்குவரத்து ஆதாரமாக செயல்பட்டு வந்தது.

இந்த பின்னணியில், இந்திய அரசு “நமது துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் நிரம்பியுள்ளன; வெளிநாட்டு சரக்குகள் இந்திய ஏற்றுமதியாளர்களை பாதிக்கின்றன” என்ற காரணத்தை முன்வைத்து ட்ரான்ஷிப்மெண்ட் வசதிகளில் கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் விளைவாக சாலைகள் மூடப்பட்டு, பல சரக்குப் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த முடிவால் வங்கதேசத்தின் ஆடைத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 83 சதவீதம் ஆடைத் துறையிலிருந்து கிடைக்கிறது. இந்திய வழியாக 10–12 நாட்களில் ஐரோப்பாவை சென்றடைந்த பொருட்கள், தற்போது வங்கதேசத்தின் சொந்த துறைமுகத்தை அடையவே 20–25 நாட்கள் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. நேரம் இரட்டிப்பாகி, செலவுகள் அதிகரிப்பதால் பல சர்வதேச வாங்குபவர்கள் ஆர்டர்களை ரத்து செய்யும் சூழல் உருவாகியுள்ளது.

2023–24 காலகட்டத்தில் மட்டும் இந்திய எல்லை வழியாக கோடிக்கணக்கான மதிப்புள்ள வங்கதேச பொருட்கள் உலக சந்தைகளுக்கு சென்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த போக்குவரத்தால் இந்திய சாலைகள், உள்கட்டமைப்பு மீது பெரும் சுமை ஏற்பட்டபோதும், இந்தியா இதுவரை அந்த வசதிகளை தொடர்ச்சியாக வழங்கி வந்தது.

அரசியல் ரீதியாகவும் இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது. சமீபத்தில் வங்கதேசத்தின் முக்கிய தலைவர் முகமது யூனுஸ், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வங்கதேசத்தை சார்ந்தே கடலை அணுக முடியும் எனவும், சீன முதலீடுகளை வரவேற்கும் வகையிலும் கருத்து தெரிவித்தது, இந்தியாவின் கவனத்தை ஈர்த்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் தான் இந்தியாவின் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

தற்போதைய சூழலில், வங்கதேசத்தின் ஏற்றுமதி, போக்குவரத்து மற்றும் பொருளாதார அமைப்புகள் கடும் அழுத்தத்தில் உள்ளன. இந்தியாவுடன் உள்ள உறவுகளை மீண்டும் சீர்படுத்துவதும், ராஜதந்திர ரீதியான தீர்வுகளை நாடுவதும் மட்டுமே உடனடி நிவாரணமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பூனை கண்களை மூடிக்கொண்டு பால் குடிப்பது போல வங்கதேசம் தன்னை யாரும் பார்க்க மாட்டார்கள் என்று எண்ணியது. ஆனால் புலி போன்ற பக்கத்து தேசமான இந்தியாவுடன் விளையாடினால் என்ன விளைவு வரும் என்பதை அது கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இதன் முடிவு என்னவென்றால் செய்ய முடியாத ஒன்றைசெய்ய முயன்று இலைகளை பிடித்து கொண்டு மூழ்கும் மனிதனை போல இன்று வங்கதேசம் தவித்துக் கொண்டிருக்கிறதுவங்கதேச தலைவர் முகமது யூனுஸ்,“இந்தியா” என்ற நெருப்பு கொழியில்கையை வைத்து எதையோ எரிக்க முயன்றது.ஒரு அடிக்குப் பிறகு இப்போது அந்த காயத்திற்கு மருந்து போட ஒரு அரசியல் மருத்துவரும் இல்லை.எரிந்த கையை காப்பாற்றலாமா?மீதமுள்ள மானத்தை காப்பாற்றலாமா? என்று தெரியாமல் இன்று வங்கதேசம் தலையை சொரிந்து கொண்டிருக்கிறது.