24 special

அமைச்சர் மீது வழக்கு.... பதவியை ராஜினாமா செய்! வலுக்கும் குரல்! மொத்தமாக மாறிய களம்

MKSTALIN,SEKARBABU
MKSTALIN,SEKARBABU

தமிழக இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை பொதுமக்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவரின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் பொதுமக்கள்  முகம் சுளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அவரின் பேச்சு இவர் அமைச்சரா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக இந்து மக்களை அவர் நடத்தும் விதம் வேலை ஆட்களை  நடத்துவது போல் ஆகிவிட்டது. 


திருவிழாக்கள், மற்றும் வழக்கமாக வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களில் கூட்டம் அலைமோதும். அந்த வகையில், முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் வீடாக கருதப்படும் திருச்செந்தூர் முருகன் கோயிலிலும் இன்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் தரிசனத்திற்கு உடனே அனுமதிக்கப்படவில்லை என்று பக்தர்கள் குற்றம் சாட்டினர். சுமார் 6 மணி நேரமாக தரிசனத்திற்கு காத்திருந்ததாகவும், குழந்தைக்கு பால் வாங்க கூட அனுமதிக்கவில்லை என்றும் பக்தர்கள் குமுறினர்.

முதியோர்கள், இணைநோய் கொண்டவர்களும் தரிசன வரிசையில் காத்திருப்பதாகவும், ஆனால் தங்களுக்கு உரிய வசதி செய்துகொடுக்கவில்லை என்றும் பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அந்த நேரம் திருச்செந்தூர் கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டிருப்பதை பார்வையிட மாவட்ட ஆட்சியரும் வந்திருந்தார். ஆனால் பக்தர்களின் கோரிக்கைகளுக்கு ஆட்சியர் பதிலளிக்காமல் சென்றார். இதனையடுத்து உடனே பக்தர்கள் முழக்கமிட தொடங்கினர். இதனால் அந்த இடத்தில் லேசான சலசலப்பு ஏற்பட்டது.

சரியாக அந்த நேரம் பார்த்து அமைச்சர் சேகர்பாபு வந்திருந்தார்.  மாஇதற்கு, "கூட்டம் அதிகமாக இருந்தால் வரிசையில்தான் நிற்க வேண்டும். திருப்பதியில் மட்டும் 24 மணி நேரம் நிற்பான்"  இங்கு நிற்கு மாட்டானா என  ஒருமையில் பேசினார்.  இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வெளியாகி விவாதங்களை விவாதங்களை கிளப்பியது.

இந்தநிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டத்தில் பக்தர்கள் கோஷம் எழுப்பியதும், அதற்கு அருவருப்பான வகையில் அமைச்சர் சேகர் பாபு பேசியதும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. “பாரத் மாதாவுக்கு ஜே” என்பது பிரச்சினைக்குரிய கோஷமா? இந்திய திருநாட்டின் ஆலயத்தின் முன் “இந்தியா வாழ்க” என்று சொல்வது எப்போது தவறான செயலாக மாறியது? இந்தக் கேள்விகளுக்குத் தெளிவான பதில் எதுவும் இல்லை. ஆனால், அந்த இடத்தில் அமைச்சர் கோபப்பட வேண்டிய அவசியமே இல்லை என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

நாடு வாழ்க, பாரதத் தாய் வாழ்க” எனும் சூழலில், இந்திய குடிமகனும் அமைச்சருமான ஒருவர், அரசியல் மேடை பேச்சு போல் தரம் தாழ்ந்த வார்த்தைகளை கோவில் முன் பக்தர்களை நோக்கி பேசியது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாதது இதற்கு கடும் எதிர்ப்பு வந்த நிலையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி பதில் அளித்துள்ளார். 

பாரத் மாத்தா கி ஜே என்ற முழக்கத்தை கோயிலுக்கு வெளியே சொல்லட்டும்எங்களைப் பொறுத்தவரை தமிழ் வாழ்க, தமிழ்நாடு வாழ்க என்பதுதான் கொள்கை என கூறுகிறார். பாரத் மாத்தா கி ஜே இந்தியா வாழ்க என்று தானே அர்த்தம் அதை எங்கு சொன்னால் என்ன  தமிழ்நாடு இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம் தானே அதில் என்ன கொள்கை வேறுபாடு என்ற கேள்விகள் எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் இப்படி மக்கள் தரம் தாழ்த்தி பொது வெளியில் பேசியிருப்பது கடும் குற்றம் என கோருகிறார்கள். மேலும் அவர் மீது வழக்கு தொடர பக்த்ர்கள் முடிவெடுத்துள்ளார்கள் . இது ஒருமுறை இல்லை பலமுறை இதே போல் பேசிவிட்டு அதற்கு தமிழ் தமிழ் நாடு என்ற போரவைக்குள் ஒளிந்து கொளவ்து திமுக அரசின் வாடிக்கையாகி விட்டது.