Tamilnadu

அடுத்தடுத்து "தொடர்" போராட்டம் நீங்கள் செய்யவேண்டியது என்ன? பாஜகவினருக்கு அண்ணாமலை குறியீடு !

Annamalai
Annamalai

பெட்ரோல் டீசல் விலையை மாநில அரசு குறைக்க கோரி தமிழக பாஜக அடுத்தடுத்து தொடர் போராட்டம் நடத்த முடிவு எடுத்து இருப்பதாகவும் தொடர்ந்து திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது போன்று பெட்ரோல் டீசல், கேஸ் விலையை குறைக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.


இந்த சூழலில் அண்ணாமலை அக்கட்சி தொண்டர்களுக்கு நேற்று இரவு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் அதில், பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே..... அனைவருக்கும் வணக்கம். 

ஒதுங்கக்கூட இடமின்றி ஓயாமல் பெய்யும் மழை ஒரு புறம், வடியாத மழை நீரும், பொங்கிவரும் கழிவு நீரும் மக்கள் வாழ்வை சொல்லொணா துயரத்தில் ஆழ்த்தும் போது, ஆதரவு காட்ட வேண்டிய மாநில அரசு, மிக மந்தமான செயல்பாட்டால் தீர்வுகளுக்கு பதிலாக, பிரச்சனைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.

  இதற்கிடையே, அல்லல் படும் மக்களுக்கு கூடுதல் இன்னலாக பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மத்திய அரசின் வரி விகிதம் அதிகரிக்கவில்லை. மாறாக திபாவளி அன்று குறைக்கப்பட்டது. 

ஆனாலும் விலையில் மாற்றம் வரக்காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு முந்தைய காங்கிரஸ் அரசு கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோல் விலையை மாற்றவும், அதுபோல 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டீசல் விலையை மாற்றிக் கொள்ளவும் அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இன்று பெட்ரோல் விலையை தினமும் அதிகப்படுத்துவதைக் குறைகூறும் திரு.ப.சிதம்பரம் அவர்கள் திமுக காங்கிரஸ் கூட்டணியில், மத்திய அமைச்சராக இருந்தபோது எடுத்த முடிவுகளே இந்த விலை உயர்வுகளுக்குக் காரணம்

இது ஒருபுறம் இருக்க, மக்களின் எண்ணத்தைப் புரிந்து நடந்து கொள்ளும் மத்திய பாஜக அரசு, கடந்த தீபாவளிப் பரிசாக, தன் வரியை பெட்ரோல் டீசலில் பெருமளவு குறைத்தது. தேர்தலில் எந்த வாக்குறுதியும் தரவில்லை, விலை குறைப்பு பற்றிய எந்த உத்திரவாதமும் தரவில்லை, ஆனாலும் மத்திய அரசு டீசலுக்கு ரூ.10-ம், பெட்ரோலுக்கு ரூ.5-ம் குறைத்து மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை குறைத்தது.

ஆனால் இதற்கெல்லாம் நேர் மாறாக, தமிழக திமுக அரசு, தன்னுடைய  தேர்தல் அறிக்கையில், பெட்ரோலுக்கு ரூபாய் 5/-ம் டீசலுக்கு ரூ.10/-குறைப்பதாக மக்களுக்கு வாக்களித்தது. இது சாத்தியமா? என்று கேட்ட போது, மற்ற நிதி ஆதாரங்களைப் பெருக்குவதன் மூலம் இது செயல் படுத்தக் கூடய சாதாரண விஷயம் என்பது போல திமுக அரசு அலட்சியம் காட்டியது. அனால் ஆட்சிக்கு வந்தவுடன், பொருளாதரம் பேசி,  முக்கியமாகத் கடந்த தேர்தலில் தெரிவித்தபடி பெட்ரோல்-டீசல் விலையை  மாநில அரசு குறைக்கவில்லை.

மத்திய அரசு தன் செஸ் வரியைக் குறைத்த, அதே சமயம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், அதிலும் குறிப்பாக NDA  கூட்டணி / பாஜக ஆட்சி  நடைபெறாத பல மாநிலங்களில் கூட அவர்களது மாநில அளவிலான வாட் வரியை குறைத்து, பெட்ரோல்-டீசல் விலையை தங்கள் பங்கிற்கு அந்தந்த மாநில அரசு, வெகுவாகக் குறைத்துள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், தமிழகத்திற்குள்ளாக அமைந்துள்ள புதுச்சேரி மாநிலத்தில் தமிழகத்தை விட மிகக் குறைவான விலையில் பெட்ரோல் கிடைக்கிறது. காரணம், பாரதப் பிரதமர் வேண்டுகோளை ஏற்று, அவர்கள் உடனே மாநில வாட் வரியை குறைத்தார்கள்.

தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் பெட்ரோல்-டீசல் விலை குறைவாக இருந்து வருகிறது. எனவே தமிழக அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க கோரியும், கேஸ் சிலிண்டர் விலையை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி சிலிண்டருக்கு ரூ.100 குறைக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்று அறிவித்திருந்தேன்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நம் பாஜகவினர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலை மீதான மாநில அரசின் வாட் வரியை குறைக்காத திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் என நம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும் அதைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் மாநில திமுக அரசைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாடு பாஜக இன்று (22ஆம் தேதி) முதல் தொடர்ந்து 8 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்களை நடத்தும் என்று நான் அறிவித்திருக்கிறேன்.

இன்று மாநிலம் முழுவதும் நம் பாஜகவினர், மக்களுக்காக குரல் கொடுத்து போராட்டம் நடத்தியுள்ளனர். அனைத்து அணி, பிரிவு அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் அடுத்து வரும் நாட்களில் மாநில அரசைக் கண்டித்து இந்தப் பெட்ரோல் / டீசல் வாட்வரி குறைப்புப் போராட்டத்தைச் சிறப்பாக முன்னெடுக்க வேண்டுகிறேன் எனவும் இப்படிக்கு உங்கள் "அண்ணா" எனவும் குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.