Tamilnadu

முதல்வர் படமே இல்லாமல் அரசு விழா? கெத்தாக மேடை ஏறிய வானதி! பரவிய செய்தி உண்மை தானா?

Stallin and vaanathi
Stallin and vaanathi

தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை மாவட்டத்திற்கு அரசு விழாவில் பங்கேற்க இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார், இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலினின் முதல் நாள் பயணமே கடும் அதிவலைகளை உண்டாக்கியுள்ளது, அதில் முக்கியமானவை, கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் குறிப்பிட்ட கருத்து.


அடுத்தது தமிழக அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் முதல்வர் படம் நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட கட் அவுட்டில் இடம்பெறவில்லை, இது குறித்து பல்வேறு செய்திகள் பரவிய நிலையில் சில தகவல்கள் மட்டுமே உறுதி படுத்தப்பட்டு இருக்கின்றனர், கோவை மாவட்டதொகுதிகளில் திமுகவால் எங்குமே வெற்றி பெற முடியவில்லை. மாநிலம் முழுவதும் திமுக வெற்றி பெற்றாலும் அந்த கட்சியின் வெற்றி கொங்கு நாட்டில் பலிக்கவில்லை.

இந்த சூழலில் தான் அமைச்சர் செந்தில்பாலாஜியை கொங்கு மண்டல அதாவது கோவை மாவட்ட பொறுப்பாளராக போட்டுள்ளார் ஸ்டாலின், அவர் ஏற்பாட்டின் பெயரில்தான் கோவையில் அரசு விழா நடைபெற்றது, வழக்கமாக அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது தந்தை புகைப்படங்கள் மஞ்சள் நிற பேனரில் அச்சிடபட்டு வைக்கப்பட்டு இருக்கும் ஆனால் கோவை மாநாட்டில் அவ்வாறு வைக்கப்படவில்லை.

இதற்கு என்ன காரணம் என கேட்டால் கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோவையில் திமுகவிற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால்  புதுமையாக முறையில், தாமாக முன்வந்து தனது படத்தை போடவேண்டாம் அடுத்த தேர்தலில்(நகர்ப்புற உள்ளாட்சி ) வெற்றி பெற்று அதன் பிறகு விழாவில் புகைப்படத்துடன் சிறப்பாக கொண்டாட்டலாம் என ஸ்டாலின் அறிவுறுத்தியதன் பெயரில் அவரது புகைப்படம் தவிர்க்க பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தொகுதிக்கு சம்பந்தமில்லாத திமுக MP கள் வேறு பகுதி MLA கள் ஆகியோருக்கு மேடையில் இடம் ஒதுக்கிய நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள், நிகழ்ச்சி நடக்கும்  வ.உ.சி மைதானம் பகுதி வானதி ஸ்ரீனிவாசனின் கோவை தெற்கு பகுதியில் உள்ள நிலையில் அவருக்கு மேடையில் இடம் ஒதுக்க படவில்லை.

இருப்பினும் தங்கள் தொகுதி வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு முதல்வர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  சுருக்கமாக  எங்களது கோவை தெற்கு தொகுதிக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் முதல்வர் வழங்குவார் என்ற நம்புகிறேன் என  நன்றி என முடித்து கொண்டார் வானதி. அவரது பேச்சு வைரலான நிலையில் சில ஊடகங்கள் மேடைக்கு அழைத்து வானதி சீனிவாசனுக்கு பேச வாய்ப்பு அளித்தார் முதல்வர் என செய்திகளை வெளியிட்ட நிலையில்.,

அதெல்லாம் ஒன்றும் இல்லை நிகழ்ச்சி நடைபெற்ற தொகுதியே வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்ற பாஜகவின் தொகுதி அவரது தொகுதியில் உள்ள வஉசி மைதானத்தில்தான் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியே நடைபெற்றது அப்படி இருக்கையில் மேடையில் சீட் ஒதுக்கீடு செய்யாததே தவறு, இதில் மேடைக்கு அழைத்தார் பேச வைத்தார் என ஊடகங்கள் முதல்வரின் புகழ் பாடுவது எல்லாம் அவர்கள் ஆளும்கட்சிக்கு காட்டும் விஷ்வாசமே தவிர வேற ஒன்றும் இல்லை என்கின்றன கோவை மாவட்ட பாஜகவினர்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.