Cinema

நீண்ட நாள் ரகசியத்தை போட்டு உடைத்த வணிபோஜன்....

ACTOR VANIPOJAN
ACTOR VANIPOJAN

வாணி போஜன் ஒரு தமிழ் மாடல் மற்றும் சின்னத்திரை நடிகையாகவும் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார். தொடக்கத்தில் இவர் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஒரு பணிப்பெண்ணாக பணிபுரிந்தார். அதனுடன் சேர்த்து மாடலிங் மற்றும் பல விளம்பரங்களிலும் நடித்து வந்தார். பின் இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். மேலும் அதை தொடர்ந்து மற்றும் ஓர் தனியார் டிவியில் மாயா என்ற சீரியலில் நடித்தார். அதன்பின் அவருக்கு ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து தெய்வமகள் என்ற சீரியலில் நடிகையாக நடித்தார். இதுதான் அவரின் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக அமைந்த சீரியல்! தெய்வமகள் என்னும் சீரியலில் இவர் ஒரு குடும்பப் பெண் போன்றும் மேலும் அந்தக் கதையின் கதாநாயகியாகவும் நடித்தார்.


இந்த சீரியல் மூலம் மக்கள் மனதில் பெரிதும் இடம் பிடித்தார். மேலும் அவரின் நடிப்பு திறமையை காட்டுவதற்கு இது  சரியான இடமாகவும் அமைந்திருந்தது. மேலும் இந்த சீரியலின் மூலம் அதிக ரசிகர்களை இவர் பெற்றார். வீட்டில் உள்ள பெரியவர் முதல் சிறியவர் வரை இந்த சீரியலில் வரும் இவரின் கதாபாத்திரத்திற்கு மிகவும் ரசிகர்களாகவே மாறிவிட்டனர். அது முதல் இவர் தெய்வமகள் சத்தியா என்று பலரால் அறியப்பட்டார்.  சத்தியா என்பது அந்த சீரியலில் வரும் இவரின் கதாபாத்திரத்தின் பெயராகும். இன்றும் கூட இவரின் உண்மையான பெயர் தெரியாமல் தெய்வமகள் சத்தியா என்று குறிப்பிடும் பலர் உள்ளனர். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நீங்காத இடம் பெற்று வந்துள்ளார். மேலும் இவர் பார்ப்பதற்கு நயன்தாரா போல இருப்பதால் இவரை அனைவரும் "சின்னத்திரை நயன்தாரா" என்றும் அழைத்தனர். தற்போது வாணி போஜன் சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு முழுவதும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தியுள்ளார்.

அதன் முதல் படியாக 2020ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படம் இவருக்கு வெற்றிகரமாக அமைந்திருந்தது. இவர் நடித்த லவ் என்ற படமும் சமீபத்தில்  வெளிவந்தது. மேலும் பல படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். இவ்வாறு பல நல்ல படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வந்த வாணி போஜன் சமீபத்தில் தனியார் youtube சேனலுக்கு அளித்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி கொண்டுள்ளது. அதைத்தொடர்ந்து அந்த youtube சேனலில்  நடந்த பேட்டியில் அவரிடம் நீங்கள் என்ன கார் வைத்துள்ளீர்கள் என்று கேட்டனர். அதற்கு வாணி போஜனம் நான் அந்த விஷயத்தில் மிகவும் கஞ்சம்!! நான் இதுபோன்ற செலவுகளை மிகவும் தவிர்த்து விடுவேன். எது முக்கியம் என்று பார்த்து பார்த்து தான் செலவு செய்வேன். என்னுடைய காரினை நான் தெய்வமகள் சீரியல் நடிக்கும் பொழுது வாங்கினேன். இப்போது வரை அந்த காரை தான் நான் பயன்படுத்தி வருகிறேன்.

அந்தக் காரை எனக்கு மாற்றவும் தோணவில்லை. காரணம் அந்த கார் எனக்கு மிகவும் லக்கியான கார்  என்று தோன்றியது!! ஏனெனில் இதுவரை அந்த காரில் எந்த ஒரு  விபத்தும் நடந்தது இல்லை.எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போய்க் கொண்டுள்ளது அதனால் இந்த கார் எனக்கு லக்கி என்றும் தோன்றுகிறது. எனவே இப்போது வரை எனக்கு கார் மாற்ற வேண்டும் என்றால் என்னும் தோன்றவில்லை!! என்று கூறினார்.இன்றைய காலகட்டங்களில் சிறிய பட வாய்ப்பு கிடைத்ததும் பலர் ஆடம்பர செலவுகளை செய்து கொண்டுள்ளனர் அதற்கு மத்தியில் வாணி போஜன் பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்தும் அவர் இன்றும் சாதாரணமாக உள்ளார். தெய்வமகள் சீரியலில் நடிக்கும் பொழுது வாங்கின காரையே இன்றும் பயன்படுத்தி வருவதை பார்க்கும் பொழுது மிகவும் வியப்பாக உள்ளது என்று வாணி போஜனின் பேட்டியை பார்க்கும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.