24 special

பெண்களுக்கு உள்ள தோஷங்களை விளக்கும் கோவில்!!! ஆச்சரியப்படுத்தும் சிவனின் செயல்!!!

sivan temple
sivan temple

திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு பழமையான கோவில் ஆகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 39வது தலம் ஆகும்.இந்த ஆலயத்தில் அருள் பாலிக்கும் சிவபெருமான்! அருணாச்சலேஸ்வரர், செஞ்சடையப்பர், தாளவரேஸ்வரர் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இங்கு இருக்கின்ற அம்பிகை பெரியநாயகி, தாலவரேஸ்வரி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். இந்தக் கோவிலில் கொடுக்கப்படும் தீர்த்தமானது பிரம்ம தீர்த்தம், ஐராவத தீர்த்தம், தாடகை தீர்த்தம், நாக கன்னிகை தீர்த்தம் போன்ற பல வகையான தீர்த்தங்கள் என்று சொல்லப்படுகிறது. இக்கோவிலானது  பிரம்மன், திருமால், இந்திரன், ஐராவதம், அகத்தியர், சூரியன், சந்திரன், ஆதிஷேசன், நாககன்னிகை போன்றோர் வழிபட்ட தலம் என்று வரலாற்று புராணங்கள் கூறுகின்றது. 


இந்தக் கோவிலின் பனை மரத்திற்கு கீழே ஈசன் எழுந்தருளி இருப்பதனாலும், கோவிலின் தலை விருட்சமாக பனைமரம் இருப்பதினாலும் இந்த ஊர் திருப்பனந்தாள் என்று பெயர் பெற்றது. ஆனால் புராணங்களில் கோவிலை தாடகைஸ்வரம் என்றும் கூறுகின்றனர். தாடகை என்னும் பெண் சிவபெருமானை பூஜித்ததால் இந்த பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது யார் அந்த தாடகை???தாடகை என்னும் பெண் புத்திர பாக்கியம் வேண்டி பிரம்மனிடம் வேண்டுகிறாள். அதற்கு பிரம்மனும் இங்குள்ள சிவனை தினமும் தரிசனம் செய்து வா!! சிவபெருமான் கண்டிப்பாக உனக்கு குழந்தை பாக்கியத்தை கொடுப்பார் என்று பிரம்மன் கூறினார்.  இதைத்தொடர்ந்து தாடகை என்னும் மங்கை குழந்தை வரம் வேண்டி நாள் தோரும் மாலை கட்டி ஈசனுக்கு அணிவித்தாள். ஒரு நாள் மாலையை அணிவிக்க சிரமம் ஏற்பட்டபோது இறைவனே குணிந்து மாலையை ஏற்றுள்ளாராம்!! அன்று முதல் தலைசாய்ந்த நிலையிலேயே இங்கு சிவபெருமான் காட்சியளிப்பதாக கூறுகிறார்கள்.

அதோடு இந்த நிகழ்விற்கு பிறகு தடாகைக்கு 16 கைகள் தோன்றியதாகவும், அதை கண்டவுடன் மெய்சிலிர்த்து சிவபெருமானை தடாகை வணங்கியதாகவும் கூறப்படுகிறது, மேலும் தடாகைக்கு குழந்தை பாக்கியத்தையும் கொடுக்கின்றார் சிவபெருமான். இதைத்தொடர்ந்து சிவபெருமான் சாய்ந்த நிலையில் இருப்பதால் நிமிர்த்த வேண்டும் என்று அப்போதய மன்னன் மணிமுடி சோழன் எனப்படும் நாயன்மார்களில் ஒருவரான மங்கையர்க்கரசியின் தந்தை, யானை, குதிரை கொண்டு கட்டி இழுத்தும் பலன் தரவில்லை. சிவபெருமானின் சாய்ந்த தலைவணையை நேராக்க எடுக்கப்பட்ட எல்லாம் முயற்சியும் வீணாகி விட்டது. அந்த நிலையில் திருக்கடையூர் குங்கிலியக்கலய நாயனாரி இவ்வாலயம் வந்தபோது ஈசனின் தலையை நிமிர்த்த எண்ணி ஒரு கயிற்றை தன் கழுத்தில் சுருக்கிட்டு மறுமுனையை ஈசன் கழுத்தில் கட்டி ஒன்று உன் தலை நிமிர வேண்டும் இல்லையேல் நான் இங்கேயே உயிர் விடல் வேண்டும் என இழுத்தார். பின் அவரின் அன்பிற்கும், பக்திக்கும் கட்டுப்பட்டு மிக எளிதாக தலை நிமிர்ந்தது என்று திருவிளையாடல் புராணத்தில் இவ்வாலயத்தின் அருணஜடேஸ்வரனின் அற்புதம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த கோவில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், பின் மாலை 5 30 மணி முதல்  9.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.கோவிலுக்கு சர்ப தோஷம், நாக தோஷம், மற்றும் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் சென்று வழிபட்டால் அவர்களின் தோஷங்கள் அனைத்தும் சரியாகி வாழ்வில் இன்பமாக இருப்பர். குறிப்பாக பெண்களுக்கு தோஷ நிவர்த்தி தளமாக இத்தலம் திகழ்கிறது. திருமணம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை என்று பல மருத்துவமனைகள் பல கோயில்கள் செல்பவர்களும் இக்கோவிலுக்கு ஒரு முறை சென்று வந்தால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும், விரைவில் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பதும் இக்கோவிலின் தனிச்சிறப்பாக  உள்ளது. இத்தளத்தில் இறைவன் சுயம்புலிங்க வடிவத்தில் காட்சியளிக்கின்றார். தற்போது இக்கோவில் பற்றிய விவரங்கள் மகாசிவராத்திரியை முன்னிட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது!!