24 special

மக்களவைத் தேர்தலுக்குள் இது நடக்கும்... கசிந்த டெல்லி மேலிட தகவல்கள்...

PMMODI
PMMODI

கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக பெரும்பான்மையாக வெற்றி பெற்று தனது ஆட்சியை அமைத்தது இவர்கள் ஆட்சி அந்த ஐந்து ஆண்டுகளில் முடிந்து விடவில்லை அடுத்த ஐந்து ஆண்டுகளிலும் தொடர்ந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தற்போது வரை நீடித்து வருகிறது. மேலும் இனிவரும் அடுத்த ஐந்து ஆண்டுகளும் இவர்களது ஆட்சியை இருக்கும் என்றும் பிரதமராக நரேந்திர மோடி அவர்களே பொறுப்பேற்பார்கள் என்பதும் அக்கட்சியின் நிலைப்பாடாக உள்ளது, அதுமட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களும் பத்திரிக்கை நிறுவனங்களும் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் அனைத்துமே பாஜகவிற்கு சாதகமாகவே வெளியானது. இதற்கிடையில் நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அந்த முயற்சிகள் எந்த விதத்திலும் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை பாதியிலேயே அந்த கூட்டணியும் பிளவு பெற்று தற்போது என்ன நிலையில் அந்த கூட்டணி இருக்கிறது என்பதே யாருக்கும் தெரியவில்லை!


இப்படி பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து சில நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பல ஆண்டுகளாக நிறைவேற்ற முடியாத பல சரித்திர நிகழ்வுகளை நிகழ்த்தி விட்டார். முதலில் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தால் அடைபட்டு கிடந்தது. அதனால் அதற்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களைப் போல ஜம்மு காஷ்மீரில் சுதந்திரமாக்கிவிட்டார். இதனால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் அங்கு சென்று வருகிறார்கள், அதிலும் குறிப்பாக எந்த வித தீவிரவாத அச்சுறுத்தலும் இன்றி சென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கடுத்ததாக நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்து வந்த அயோத்தி ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது, இந்த நிகழ்வை சாதாரணமாக ஒரு வரியில் கூறி விட முடியாது அதற்காக நம் நாடு பல சாமானியர்களை இழந்துள்ளது என்பது அதற்காக பல தரப்பினரும் பலவகையிலான போராட்டங்களை மேற்கொண்டனர் என்பதும் இந்த உலகம் அறிந்தது! அப்படிப்பட்ட வரலாற்று நிகழ்வை பிரதமர் மோடி தலைமையான பாஜக அரசு எந்தவித பிரச்சனையும் இன்றி நேர்த்தியாக நடத்தி முடித்தது.

இதற்கிடையிலே மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் மகளிர் காண 33 சதவிகித இட ஒதுக்கீட்டையும் வழங்கி அதற்கான மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி பொருளாதாரத்தின் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இப்படி பல சாதனைகளை இந்தியா கடந்த பத்து வருடங்களில் தொடர்ச்சியாக அடைந்து வருவதை உலக நாடுகள் அனைத்துமே தற்போது கண்காணித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் புதிய விதிகள் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அமல்படுத்தப்படும் என்றும் இந்த சட்டம் நாட்டிற்கானது இதனை யாரும் தடுத்து நிறுத்தவே முடியாது என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அரசியல் சாசன அவையின் திட்டத்தில் இருக்கக்கூடிய ஒன்றான பொது சிவில் சட்டத்தை மதத்தோடு தொடர்பு படுத்துவது துரதிஷ்டவசமானது என்று கூறி மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று 1950 இல் இருந்து கூறி வருகிறோம், ஒரு நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்றால் அதற்கான சட்டங்களும் மதசார்பற்றதாக இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார். இதுவரை பாஜக தலைமையிலான அரசு செய்த வரலாற்றுச் சாதனைகளை விட இனி அடுத்த செய்ய உள்ள இரண்டு விஷயங்களுமே மிக முக்கிய வரலாற்று நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.