Cinema

வைரலாகும் ரியாலிட்டி ஷோவின் டவல் டான்ஸ்!!

REALITY DANCE SHOW
REALITY DANCE SHOW

இன்றைய காலங்களில் மனிதர்கள் தங்களின் திறமைகளை வெளிக்காட்ட பல்வகையான முறைகளில் முயற்சி செய்கின்றனர். அதிலும் சிலர் தாங்கள் வைத்திருக்கும் செல்போன்கள் மூலம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றினை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அதன் மூலம் தங்களின் திறமைகளை சுற்றியுள்ளவர்களுக்கு தெரியப்படுத்துகின்றனர். சிலர் instagram ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ரில்ஸ் போன்றவற்றை பதிவிட்டு அதன் மூலம் தங்களின் வருமானத்தையும் ஈட்டி வருகின்றனர். இவ்வாறு சமூக வலைத்தளங்களில் மட்டும் தங்களது திறமையை காட்டி வரும் நபர்கள் படிப்படியாக உயர்ந்து ரியாலிட்டி ஷோ போன்ற வாய்ப்புகளை தேடுகின்றனர். ரியாலிட்டி ஷோக்கு சென்றால் தங்களின் திறமையை காட்டுவதை காட்டிலும் தங்களின் முகத்தினை மக்களிடையே பதிவு செய்வது, பிரபலமாகுவது போன்ற பல ஆசைகளினால் அதற்கு முயற்சிகளை செய்கின்றனர். மேலும் இவ்வாறு ரியாலிட்டி ஷோகளில் அவர்கள் மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டால் பிறகு அவர்களுக்கு வாழ்வுதான் என்றே கூறலாம்!! 


ஏனெனில் இன்றைய காலங்களில்  ரியாலிட்டி ஷோக்களில்  இருந்து தற்போது பெரிய நிலையில் உள்ள நடிகர்கள் வரை அனைவரும் இவ்வாறே தங்களின் திரையுலக வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். எடுத்துக்காட்டாக சிவகார்த்திகேயன், கவின் போன்ற முன்னணி நடிகர்கள் கூட தனியார் தொலைக்காட்சியில் நடனம் ஆடுவது போன்ற ரியாலிட்டி சொற்களில் பங்கேற்று அதன் பின் பெரும் புகழும் அடைந்து இன்று முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டுள்ளனர்!! எனவே ரியாலிட்டி ஷோ என்பது திறமையை வெளிக்காட்டுவதோடு அவர்களை வாழ்வில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல ஒரு ஊன்றுகோலாகவும் அமைந்து வருகிறது. இப்படிப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் வெளிநாடுகளில் இன்னும்  சிறந்த வகையில் நடத்தப்பட்டு வருகிறது. சாதாரண நடுத்தர மக்கள் கூட  எளிதில் பங்கு கொள்ளும் வகையில் வந்து கலந்து கொண்டே தங்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் மேடைகளாக அமைந்து வருகிறது. 

அதேபோன்றுதான் தற்போது நம் நாட்டிலும் இதனை பார்க்க முடிகிறது. அதோடு நிறைய தொலைக்காட்சிகளில் இதுபோன்ற ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்படுகிறது. முன்பெல்லாம் நாடகங்களை பார்ப்பவர்கள் தான் அதிகம் இருந்தனர். ஆனால் இன்றைய காலங்களில் ரியாலிட்டி ஷோ என்றாலே அனைவரும் விரும்புகின்றனர். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி ஒன்றாக பார்க்கும் வகையில் இந்த ரியாலிட்டி ஷோகள் அமைந்திருப்பதால் மக்கள் அனைவராலும் பெரிதும் வரவேற்கப்படுகிறது. தற்போது இது போன்ற ஒரு ரியாலிட்டி ஷோவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!!! இந்த வீடியோவில் இரண்டு ஆண்கள் நகைச்சுவையாக நடனம் ஆடுகின்றனர். அதுவும் அவர்கள் எந்த உடையும் இல்லாமல், வெறும் துண்டினை பயன்படுத்தி ஆடுவது போன்று நகைச்சுவையாக நடனம் ஆடுகின்றனர். ஒருவர் செய்யும் செயலினை பார்த்து மற்றொருவர் அதே போன்று செய்து பார்ப்பவர்களை சிரிக்க வைத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் நடனமாடும் போது துண்டு கீழே விழுவது போன்ற செயல்களை செய்கின்றனர் ஆனால் துண்டு கீழே விழுந்து விடாமல் அதற்கு ஏற்றார் போல் நடனம் ஆடுகின்றனர். 

இதனை நேரடியாக பார்ப்பவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.  மேலும் இந்த நிகழ்ச்சியை நேரில் பார்ப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பார்க்கும் நமக்கும் சிரிப்பை அடக்க முடியாமல் நம்மை மறந்து சிரிக்கும் அளவிற்கு இவர்களின் நடனம் அமைந்துள்ளது. ஏதாவது கவலையில் உள்ளவர்கள் கூட இந்த வீடியோவினை பார்த்தால் அவர்களின் கவலைகளை மறந்து சிரித்து விடுவார்கள்!! பெரிய காமெடிகளை பார்த்து கூட எந்த ரியாக்ஷனும் காட்டாதவர்கள் கூட இதனை பார்த்து சிரித்து விடுகின்றார்கள்!! அந்த அளவிற்கு இவர்களின் நடனம் மிகவும் நகைச்சுவையாக உள்ளது!!