24 special

பாஜக கூட்டணியில் இணைந்த பெரிய கட்சி... சிக்கி தவிக்கும் எடப்பாடி பழனிச்சாமி..!

Edapaadi Palanisamy, Bjp
Edapaadi Palanisamy, Bjp

லோக்சபா தேர்தல் தேதி அறிவித்த பின் தேர்தல் களம் பரபரப்பாக தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளை இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. ஒரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி மிகவும் கூட்டணி அமைப்பதில் சொதப்பி வருகிறது. அதிமுக கூட்டணி தொடர்பாக பாமக கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் பாமக உறுதியாக அதிமுக உடன் கூட்டணியை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இரவு அவசரமாக நடத்திய கூட்டத்தில் தேசிய கட்சியான பாஜகவுடன் கூட்டணியை உறுதிப்படுத்தினர் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ்.


நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணி கடந்த லோக்சபா தேர்தலை போல் இந்த முறையும் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிமுகம் செய்து வருகிறது. திமுக 21 இடத்திலும் கூட்டணி கட்சிகள் 19 இடங்களில் போட்டியிடவுள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 22ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார். தேர்தல் திருவிழா மும்முரம் காட்ட தொடங்கியுள்ளது திமுக கட்சி.

இன்னொரு பக்கம் தேசிய கட்சியான பாஜகவும் தனது பக்கம் முக்கியமான சில கட்சியை இழுத்து மேலும் வலு சேர்த்துள்ளது. பாமக - பாஜக கூட்டணியில் 10 இடங்களில் போட்டியிட கையெழுத்தாகியுள்ளது. தைலாபுரத்தில் நடந்தபேச்சுவார்த்தைக்கு பின் இது பாமக பாஜக கூட்டணி இறுதியாகியுள்ளது. இது அதிமுக கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், தினகரன் மற்றும் இதர பெரிய கட்சிகள் இணைந்து இந்த தேர்தலை சந்திக்கவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அதிமுக தமிழ்நாட்டில் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் அதிமுக கட்சி கூட்டணி பேச்சுவார்த்தைகளில் சொதப்பி வருகிறது. தேமுதிக உடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதிமுக அதுவும் இன்னும் சமரசம் ஏற்படவில்லை. இருப்பினும் கடைசி நேரத்தில் இணைந்து செயல்பட்டும் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதிமுக தனித்து போட்டியிடும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக விசிக மற்றும் காங்கிரஸ் கட்சி இழுக்கும் முயற்சியில் தோல்வியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி. 

இதனால் வேறு வழியின்றி மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி உடன் எல்லாம் எடப்பாடி பேச்சுவார்த்தை நடத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதிலும் கூட நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைப்பு விடுத்ததன் பேரிலேயே நான் அங்கு சென்றேன் என நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான் தெளிவுப்படுத்தினார். இந்நிலையில் மன்சூர் அலிகான் அதிமுக சீட் கொடுத்தால் இரட்டை இலை இல்லையென்றால் வாழை இலை போட்டு உட்கார்ந்து சாப்பிட வேண்டியது தான் என்று கூறியுள்ளார். இதனால் அதிமுக பக்கம் அரசியல் தலைவர்களும் ஆர்வம் காட்டவில்லை சினிமா நட்சத்திரங்களும் ஆர்வம் காட்டவில்லை தனித்து தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியலில் மும்முனை போட்டியின் மூலம் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லை என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.