24 special

அதிமுகவை சல்லி சல்லியாக உடைத்த எடப்பாடி... லெட்டர் பேட் கட்சிகளை நம்பி ஒன்னும் இல்லை..!

Edapaadi palanisamy
Edapaadi palanisamy

கடந்த ஆண்டு இறுதியில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளிறியபோதே நம்பி வருபவர்களை எடப்பாடி துரோகம் செய்து விட்டார் என்று பேசப்பட்டது. வெளியில் வந்த அதிமுக இனி ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி இல்லையென்ற முடிவை நோக்கி பயணித்து வருகிறது. அதிலும், அதிமுக வெளியேறியதும் திமுக கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சிகள் தங்களது பக்கம் வருவார்கள் என்ற நினைப்புடன் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


 வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி என்பது பாஜகவுடன் இல்லை என்ற முடிவை எடுத்த எடப்பாடி பழனிச்சாமி. சிறுபான்மையின மக்களை கவர்ந்து வந்தார். தனித்து நிற்பதால் திமுகவில் உள்ள விசிக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களது பக்கம் இணைத்து நாடளுமன்ற தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்கலாம் என்று எண்ணிய எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போது அதற்கு மாறாக சூழ்நிலை நடைபெற தொடங்கியுள்ளது.

நாட்டில் அடுத்த மாதம் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறும் என்று அறிவித்த நிலையில் திமுக தனது கூதியில் உள்ள காங்கிரஸ், விசிக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுத்து வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் பாஜகவும் பாமக, மற்றும் அமமுக, ஓபிஎஸ் உள்ளிட்ட கட்சிகளை இணைந்து தேர்தலை சந்திக்க இருக்கிறது. பாஜக கூட்டணி தீவிரமாக தொகுதி பங்கீட்டில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கால் பாதிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவின் அடுத்த கட்ட நடவடிக்கை வேகமெடுத்துள்ளது. 

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கட்சி பக்கம் வெறும் லெட்டர் பேட் கட்சிகள் மட்டுமே இணைந்துள்ளதால் தனியாக நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்ட எட்டப்பாடி பழனிச்சாமி பாஜக தலைமையோ அதற்கு நேரம் ஒதுக்கவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வரை அதிமுக பக்கம் இருக்கும் ஒரே கட்சி தேமுதிக அதுவும் தொகுதி அதிகமாக கேட்பதால் அங்கும் இழுபறி நடப்பதாக கூறப்படுகிறது. இதனால் பாஜகவுடன் தேமுதிக இணைந்து செய்லபட வாய்ப்பு இருப்பதால் வரும் நாட்களில் என்னவேண்டுமானாலும் மாற்றம் ஏற்படலாம் என்ற நிலைமை உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் நம்பக்கூடிய சில தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி போட்ட மொத்த பிளானும் தற்போது உள்ள சூழ்நிலையில் சல்லி சல்லியாக உடைந்து விட்டதாக கூறப்படுகிறது. பேசாமல் இந்நேரம் பாஜக கூட்டணியில் இருந்திருந்தால் அதிமுக அதிக தொகுதியில் போட்டியிடும் வெற்றி வாய்ப்பும் அதிகமாக இருந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதிமுக தமிழகத்தில் எதிர்க்கட்சி என்ற நிலைப்பாடு இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி திணறி வருகிறார் என்ற நிலைக்கு சென்று விட்டது. இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக கட்சி என்னவாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.