24 special

தமிழ்நாட்டிற்கு தகுதி இல்லாத நபர் அப்பாவு....அண்ணாமலை பரபரப்பு பேச்சு!..எதனால் தெரியுமா?

Appavu, Annamalai
Appavu, Annamalai

சமீபத்தில் எனக்கு இடைத்தரகளாக சிலர் செயல்பட்டு வந்தனர் என சபாநாயகர் அப்பாவு கண்டனம் தெரிவித்தனர் என்னை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது என கூறினார். இந்நிலையில் சபாநாயகர் போன்று ஒரு இடைத்தரகர் தமிழ்நாட்டில் கிடையாது என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றசாட்டை முன் வைத்துள்ளார்.


தமிழகத்தில் அமைச்சர்கள், தனியார் பொது நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்த புகாரின் பேரில் தொடர்ச்சியாக வருமான வரித்துறை மேட்டரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இது தமிழக அரசியலில் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்ச ஒழிப்பு துறை சார்பாக அதிரடியாக கைது செய்தனர். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதற்கிடையில் அமலாக்கத்துறையை தமிழக அரசு சீண்டுவதாக குற்றமும் சாட்டப்பட்டது.

அப்போது சபாநாயகர் அப்பாவு ஒரு விமரர்சனத்து முன் வைத்தார். ""வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் மத்திய அரசின் மனநிலை தெரிந்து கொண்டு பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள், தொழில் அதிபர்களை குறிவைத்து அவர்களுக்கு முதலில் நூல் விடுவது, பிறகு இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டி பேசி குறிப்பிட்ட தொகையை வாங்குவது என இப்படித்தான் நடந்நு வருகிறது. என்னிடமும் கூட கடந்த மூன்று மாதமாக இடைத்தரகர்கள் பல பேர் பேசினார்கள். நான் சரியாக இருக்கிறேன் என்ன வந்தாலும் மேல இருக்கிறவர் பார்த்துக் கொள்ளுவார் என்றேன். மத்திய அரசு மூலம் உங்களிடம் பிரச்சனை செய்யச் சொல்லி இருக்கிறார்கள் என இடைத்தரகர்கள் என்னிடம் பேசினார்கள். ஊரை விட்டு எல்லாம் போகச் சொன்னார்கள். செல்போன் என்னை மாற்ற சொன்னார்கள். இப்படி எனக்கு கடந்த மூன்று மாத காலமாக அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது." என்று கூறினார்.

இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார், ""தமிழக சபாநாயகர் அப்பாவு போன்று ஒரு இடைத்தரகர் தமிழகத்தில் கிடையாது. தகுதியே இல்லாத ஒருவர் சபாநாயகராக உள்ளார் என்றால் அது அப்பாவு மட்டும்தான். அவர் எப்படி சபையை நடத்துகிறார் என்று நமக்கு தெரியும். பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் பேச முயன்றால், மைக்கை ஆஃப் செய்கிறார். இடைத்தரகர் என்ற வார்த்தையைச் சொல்ல தமிழ்நாட்டில் ஒருவருக்கு தகுதி இல்லை என்றால் அது சபாநாயகர் அப்பாவுதான்" என்றார்.

பாஜகவை சீண்டும் நபர்கள் மீது வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபர்வார்கள் இப்போது திமுக அமைச்சர்கள் மீது குறி வைக்கும் அதிகாரிகள் இப்போது சபாநாயகர் அப்பாவு ஆளும் கட்சியிடன் இருந்து கொண்டு இப்படி அம்பலமான செயல்களை அரங்கேறியுள்ளது கண்டிக்கத்தக்கது. விரைவில் விளைவுகளை நிச்சயம் சபாநாயகர் அப்பாவு சந்திப்பார் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.