24 special

உதயநிதி மேடையில் வைத்து ஆ.ராசாவ அசிங்கப்படுத்திட்டாங்கலாமே..? கோவையில் நடந்த வைரல் சம்பவம்....

Uthyanithistalin,R.raja
Uthyanithistalin,R.raja

திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் விரைவில் நடைபெற உள்ளது, இதனை முன்னிட்டு அமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். இந்த சூழலில் கோவை திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்துள்ளது, அந்த கூட்டத்தில் கோவை மண்டலத்தில் உள்ள முக்கிய திமுகவினர், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் முத்துசாமி, திமுக துணை பொது செயலாளர் எம்.பி  ஆ.ராசா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 


அப்பொழுது அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த திமுகவினர் குறிப்பாக இளைஞரணியை சேர்ந்தவர்கள் உதயநிதியை புகழ்ந்து அதிக அளவில் கூச்சல் போட்டுள்ளனர், 'எங்கள் சின்னவரே வருக', 'எங்கள் மாமன்னனே வருக' என அங்கிருந்தவர்கள் திமுகவின் போஸ்டர் மற்றும் திமுகவின் பேனர் மற்றும் திமுகவின் கையேடுகளை கிழித்து கிழித்து உதயநிதியின் வருகைக்காக அங்கிருந்த அவர்கள் மேல் எல்லாம் தூவி உள்ளனர். 

இது மட்டுமல்லாமல் உதயநிதி வரவிருந்த நிலையில் உதயநிதிக்காக ஒரு மாதிரியான நாற்காலி போடப்படும், மற்றவர்களுக்கு வேறு மாதிரியான நாற்காலிகள் போடப்படும் இருந்தது. இதுவே அங்கிருந்தவர்களுக்கு முகம் சுழிப்பதாக அமைந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன, இப்படி இருக்கும் பொழுது சிறிது நேரத்தில் உதயநிதி வருகை புரிந்தார். 

உதயநிதி வந்ததும் அங்கிருந்தவர்கள் தியேட்டரில் உதயநிதியை பார்த்தால் எப்படி செய்வார்களோ அதுபோன்று சத்தம்போட்டு கூச்சலிட ஆரம்பித்துவிட்டார்கள். விசில் எடுத்து கையில் இருந்த பேப்பரை எல்லாம் கிழித்து ரெடியாக வைத்திருந்தது எல்லாம் தூவ ஆரம்பித்து விட்டனர். உடனே அதை பார்த்து ஆ.ராசா முகம் வாடிப் போவிட்டதாம். 

என்னடா இப்படி நடந்து கொள்கிறார்களே என ஆ.ராசா யோசித்துக் கொண்டே பேசும்போது அந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார், அப்பொழுது ஆ.ராசா பேசும் பொழுது 'அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்ற பின்பற்றுவதுதான் அவசியம். நம் கடமை மாறிக்கொண்டே இருக்கிறது, கண்ணியமும் மாறுகிறது, ஒரு இயக்கத்துக்கு கட்டுப்பாடு மிகவும் முக்கியம் என்று பெரியார் திமுகவை பார்த்து சொன்னார்! நான் உங்கள் எல்லோரையும் போல மாணவரணியில் இருந்து வந்தவன்தான். காகிதத்தை கிழித்து போடுவது! கூச்சல் போடுவது நம் கலாச்சாரம் இல்லை. அறிவார்ந்த சமுதாய உருவாக அண்ணா பாடுபட்டார்' என ஆ.ராசா பேசும் பொழுது அங்கிருந்து அவர்கள் மேலும் கடுப்பாகி இன்னும் அதிகமாக சத்தம் போட துவங்கியுள்ளனர். 

வேறு வழி இல்லாமல் பேச்சை சிறிது நேரத்திலேயே முடித்துக் கொண்டு ஆ.ராசா அமர்ந்து விட்டாராம், அதனை தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி பேசும் பொழுது ஆ.ராசா கூறியது போல் கட்டுப்பாடு முக்கியம், உதயநிதி மேடையில் இருந்து அரங்கத்தின் கடைசி வரை நடைபாதை போட சொல்லி உள்ளார் அந்த நடுவில் உதயநிதி நடந்து வருவதற்காக வழிவிட்டு வையுங்கள் என கூறியபோதும் உதயநிதிக்காக வழி விடாமல் அந்த நடைபாதையிலேயே பேப்பர் கிழித்துப் போட்டு கூச்சலிட்டு கொண்டு நின்றார்களாம் உடன்பிறப்புகள். 

காவல்துறையினர் அங்கிருந்தவர்களை அமைதிப்படுத்த நீண்ட நேரம் போராட வேண்டியதாகிவிட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன, இதனை அடுத்து உதயநிதி பேச வந்தாராம்! உதயநிதி பேச வரும் பொழுது அதிக அளவு கிழித்த காகிதத்தையும், கழுத்தில் மாட்டியிருந்த அடையாள அட்டையும் கூட கிழித்து வீசி உள்ளார்களாம், கடுப்பான உதயநிதி இப்பதான் ஆ.ராசா அட்வைஸ் பண்ணாரு! அமைதியா இருங்க, தயவுசெய்து பேப்பர் கிழித்து போடாதீங்க என கெஞ்சாத குறையாக கேட்டுள்ளார். 

இப்படி உதயநிதி பேசிக் கொண்டிருக்கும் பொழுதே பாதி பேர் அங்கிருந்து வெளியேறத் துவங்கி விட்டனர், உடனே உதயநிதி தன் உரையை முடித்துவிட்டு இளைஞர்கள் நிர்வாகிகளை பார்க்க நடுவில் போடப்பட்டிருந்த சிவப்புக்கம்பளத்தில் நடக்க ஆரம்பித்த உடன் கூட்டம் சூழ்ந்து கொண்டதால் வேறு வழி இல்லாமல் உதயநிதி முழுவதும் நடக்காமல் பாதியிலேயே திரும்பி விட்டார். 

நான் சொல்கிறேன் அமைதியாக இருங்கள்' எனக் கூறியும் கேட்காமல் உதயநிதி செல்லும் பொழுது வேற காகிதங்களை கிழித்து வீசிதான் அனுப்பி உள்ளார்கள், அதுமட்டுமல்லாமல் கூட்டம் முடிந்த பிறகு நாற்காலிகளை கிடாசி விட்டு, காகிதங்களை கிழித்து வீசி அந்த இடமே குப்பை மேடாக இருக்கிறது எனவும் வேறு தகவல்கள் கிடைத்தன. இப்படி திமுகவின் உதயநிதி சொல்லியும், மூத்த தலைவராக இருக்கக்கூடிய ஆ.ராசாவை  அவமதித்த இளைஞர் அணி குறித்து தற்பொழுது திமுகவில் பேச்சு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.