24 special

தத்தளிக்கும் மாநகரம்!....மக்களுக்கு உதவி கரம் நீட்டிய பாஜக!

Bjp, Chennai Rain
Bjp, Chennai Rain

வங்கக்கடலில் உருவாகியுள்ள, 'மிக்ஜாம்' புயல், இன்று சென்னை வழியே ஆந்திராவுக்கு செல்கிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுவர் மாவட்டத்திற்கு இன்று பொதுவிடுமுறையை அறிவித்துள்ளது. நேற்று மாலை முதலே சென்னையின் பல்வேறு இடத்தில் மழை விடாமல் பொழிந்து வருகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பான முறையில் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


சென்னையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ள புயல் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சுரைக்காற்றுடன் காற்று வீசி வருகிறது. இந்நிலையில் மிகுந்த வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், அத்தியாவசிய தேவைகளின்றி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 2015-ம் ஆண்டு 33 செ.மீ மழைப்பொழிவு பதிவான நிலையில் இந்தாண்டு தற்போது வரை 34 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது மேலும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மோசமான நிலைமையை விவரிக்க வார்த்தைகள் இல்லை' புயல் மேகங்களின் மெதுவான நகர்தலால் இன்று மாலை அல்லது இரவு வரை சென்னையில் பெரிய அளவில் மழை பெய்யும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் மக்கள் அத்யாவசிய பொருட்களை வாங்கமுடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர் 

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருசக்கர வாகனங்கள், கார்கள் மழைநீர் அடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது வெளியேற்ற  கஷ்டப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக சமூக தளத்தில் வீடியோக்கள் வெளியாகி மக்களை அச்சுறுத்தும் செயல்களிலும் அந்த 4000 ஆயிரம் கோடி என்னானது. 90 சதவீதம் மழை நீர் வடிகால் வாரியம் பணி எண்ணாதது, தமிழக அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்பது போல் கடுமையாக தமிழக அரசை விமர்சித்து வருகின்றனர். மக்கள் இந்த அள்வு வெள்ளத்தை இதுவரை கண்டதில்லை என வருத்தத்தை தெரிவிக்கின்றனர்.

மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை முற்றிலும் முடக்கியுள்ளது. இந்நிலையில் பாஜக சார்பாக ஆங்காகே முகாம்கள் அமைக்கப்பட்டு, உணவாயு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாஜக நிர்வாகிகள் முன்களப் பணியாளர்களுடன் இணைந்து குழுவாக செயல்ப்பட்டு பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் பாஜக சார்பாக பேரிடம் மீட்பு உதவிக்கான தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.