
அமெரிக்கா இந்தியா மீது 50 சதவீதம் வரி உயர்த்திய உடனே, கடல் உணவு மற்றும் இறால் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்படும் என பல தரப்பில் கவலைகள் எழுந்து . மேலும் இந்தியா அவ்வளவுதான் தான் என எதிர்க்கட்சிகள் கூப்பாடு போட்டன அமெரிக்காவை பகைத்து கொள்ள கூடாது என வெளிநாட்டு உதவியுடன் இங்கே இந்தியாவுக்கு எதிராக வேலை செய்யும் ஆட்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை முறியடிப்பதுபோல், இந்தியாவின் கடல் உணவு துறை கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை குறிப்பிடத்தக்க வளர்ச்சி காட்டியுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு
சாதாரண நாடுகளுக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். ஆனால் இந்தியா இன்று சாதாரண நாடாக இல்லை.
முன்பு ‘பின்தங்கிய நாடு’ என்று சொன்ன இடத்தில், இன்று உலக சந்தையில் போட்டியை தீர்மானிக்கும் நாடு.
கடந்த 10 ஆண்டுகளில் உலக வணிக மேடைகளில் இந்தியா உருவாக்கிய தன்னம்பிக்கை,“ஒரு நாடு கதவை மூடினால், இந்தியாவைத் வரவேற்க பத்து நாடுகள் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது மோடி அரசு. அமெரிக்காவின் வரி உயர்வு வந்ததும் எதிர்பார்த்தது போல சந்தை சரியவில்லை;
அதற்கு நேர்மாறாக, இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி கடந்த ஏப்ரல்–அக்டோபர் காலத்தில் அதிகரித்துள்ளது.
இதன் குறித்து வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, நாட்டின் மொத்த கடல் உணவு ஏற்றுமதி 16.18 சதவீதம் உயர்ந்து 42,856 கோடி ரூபாயை எட்டியுள்ளது.உலகளவில் மொத்த மீன் மற்றும் கடல் உணவு உற்பத்தியில் 8 சதவீத பங்கைக் கொண்டுள்ள இந்தியா, தற்போது உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தியாளராக உள்ளது. இதில் இறால் ஏற்றுமதியே முக்கிய பங்குபற்றி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 23,232 கோடி ரூபாயாக இருந்த இறால் ஏற்றுமதி, இந்தாண்டு 27,280 கோடி ரூபாய் ஆக உயர்ந்து உள்ளது.
அமெரிக்கா வரி உயர்த்தியதால் அந்நாட்டுக்கான ஏற்றுமதி குறைந்திருந்தாலும், ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்தியா பக்கம் திரும்பியுள்ளன. குறிப்பாக, **ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்தியா ஏற்றுமதி 40 சதவீதமும், இறால் ஏற்றுமதி மட்டும் 57 சதவீதமும்** அதிகரித்துள்ளது. இந்திய கடல் உணவுப் பொருட்களின் தரம், சுத்தம், மற்றும் நியாயமான விலை அமைப்பு காரணமாக இந்த நாடுகள் இந்தியாவை முன்னுரிமையாகத் தேர்வுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ரஷ்யா 102 மீன்வள அலகுகளையும், அதில் 29 இந்திய அலகுகளையும் நேரடியாக இறக்குமதிக்கு தேர்வு செய்தது இந்திய ஏற்றுமதிக்கு கூடுதல் பலனாக அமைந்துள்ளது. சீனா, ரஷ்யா, வியட்நாம், பெல்ஜியம், ஜப்பான், கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி கணிசமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் வரி உயர்வுக்கு முன்னதாகவே, இந்தியா தென் அமெரிக்க நாடுகளான பெரு, சிலி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரேசிய பொருளாதார ஒன்றியத்துடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து மற்றும் EFTA நாடுகளுடன் கடல் உணவு ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சீனாவுடனான வர்த்தக உறவும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.
உலக சந்தை மாற்றங்களுக்குள் நிலைத்து நிற்கும் இந்தியாவின் மீன்வளத் துறையின் திறன், நேர்த்தி, தரநிலை ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உயர் வரி தடையைத் தாண்டியும், இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
