
2026 சட்டமன்றத் தேர்தலை நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கூட்டணி அரசியலில் பெரிய மாற்றங்கள் உருவாகும் சூழல் உள்ளது. குறிப்பாக திமுகவை இந்த முறை வீட்டுக்கு அனுப்புவத்தில் பாஜக மும்முரம் காட்டி வருகிறது. திமுக மீதான அதிருப்தி ஓட்டுகளை முழுவதுமாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வர தேசிய பாஜக முழுமையான திட்டமிடலை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தேர்தல் தோல்வியை எதிர்கொள்ள தயாராக இருங்கள்.. 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது மேற்கு வங்கத்திலும், தமிழ்நாட்டிலும் திரிணாமுல் காங்கிரஸும் திமுகவும் வீழ்த்தப்படுவது உறுதி. என அமித் ஷா கூறியது தமிழக அரசியல் மேல் மட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது, இந்த ஆட்சியில் ஊழலுக்கு பஞ்சமில்லை என்பது போல் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என திமுக அரசு நடந்து வருகிறது. இந்த நிலையில் அமித் ஷா கூறியுள்ளது பெரும் பதட்டத்தை உருவாக்கி உள்ளது.
திமுகவுக்கு எதிராக மிக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என நினைக்கிறார் அமித்ஷா. அதிமுக அணிகள் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு கட்சிகளையும் இணைத்து மெகா கூட்டணியை உருவாக்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அமித்ஷா ஓபிஎஸ்ஐ சந்தித்ததால் எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதை சமாளிக்கும் வகையில் தமிழக வருகையின் போது அமித்ஷா பல்வேறு முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என்கின்றனர் பாஜகவினர்.தற்போது அதிமுகவுக்கு கிடைக்கக்கூடிய வாக்குகள் பல காரணங்களால் சிதறக்கூடிய சூழ்நிலை இருப்பதாக பாஜக மதிப்பீடு செய்து வருகிறது.
இதை தடுக்கும் வகையில் முக்கிய பிரிவு மற்றும் சிறு கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சிகள் நடப்பதாகவும் வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கிடையில், ஓபிஎஸ்ஸை அமித் ஷா சந்தித்தது பாஜக-அதிமுக உறவில் சிக்கலையும், எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்து தான் நடைபெற்றுள்ளது. அமித் ஷா ஓபிஎஸ்ஸை தனியாக சந்தித்தது குறித்து பழனிசாமி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை . இந்த சூழ்நிலை, ஓபிஎஸ்-பழனிசாமி பிரச்சினைக்கு முடிவுகட்டும் திட்டத்தை அமித் ஷா வகுத்துள்ளார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
ஓரிரு வாரங்களில் அமித் ஷா தமிழகம் வருவார் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அமித் ஷாவின் இந்த வருகை மிக முக்கியமானதாக இருக்கப்போகிறது. அவர் தமிழகம் வரும் போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், ஏ.சி. சண்முகம் உள்ளிட்ட பலரை சந்திக்கும் திட்டமும் உள்ளது. இவர்களை ஒருங்கிணைத்து திமுகவுக்கு எதிரான வாக்குகளை ஒரே கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே பாஜக நோக்கமாக உள்ளது.
2026ல் திமுகவுக்கு 'டஃப்' கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியிருப்பதாக பாஜக கருதுகிறது. விஜயின் தமிழக வெற்றி கழகமும், அதிமுக பிரிவுகளும், காங்கிரஸ்-திமுக உறவுகளில் தோன்றும் புதிய மாற்றங்களும் தமிழக அரசியலை அதிக போட்டியைக் கொண்டதாக மாற்றியுள்ளன. இதனால் 2026 தேர்தல் கூட்டணிக் கணக்குகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. அமித் ஷா தமிழகம் வரும்போது, அனைத்து கூட்டணி பேச்சுவார்த்தைகளையும் முடித்து, திமுகக்கு எதிரான பெரிய கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தினர் அதற்கு முன்னர் எத்தனை அமைச்சர்கள் மாமியார் வீட்டுக்கு செல்ல போகிறார்களோ என்பது தெரியவில்லை...
