
தமிழக அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது குறிப்பாக திமுக பாஜக அரசியல் மோதல்கள் தீவிரமாகி உள்ளது. பாஜக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பற்றி பேசாத நாளே கிடையாது திமுக.முதல்வர் ஸ்டாலின் முதல் உடன்பிறப்புகள், அதன் கூட்டணி கட்சியினர் பாஜகவை விமர்சிக்காத நாளே கிடையாது. அ தற்போதைய நிலையில் திமுக அதிமுக போட்டி என்ற நிலை மாறி பாஜக திமுக என்ற நிலை உருவாகி உள்ளது. தினமும் செய்திகளில் பாஜக மற்றும் திமுக குறித்த செய்திகள் தான் அதிகம் வலம் வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்து தவறான எண்ணங்களை உருவாக்கி வருகிறார்கள் திமுக மற்றும் லெட்டர் பேட் கட்சிகள்.
இந்த சூழலில் பாஜக மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதரன் செய்த உதவி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கும் மேலே சொன்ன சொன்ன ஆர்.எஸ்.எஸ் க்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம் ஆனால் இருக்கிறது. இன்று ஆர்.எஸ்.எஸ் 100 ஆண்டுகளை கடந்த இயக்கமாக வலம் வருகிறது. இந்த இயக்கத்தில் 40 வருடங்களாக பயணித்து வருபவர் தான் இந்த டால்பின் ஸ்ரீதரன். தேர்தல் காலங்களில் உதவி செய்யும் இந்த காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்து வேளச்சேரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார் பெரிதளவில் விளம்பரபடுத்தவில்லை
தற்போது தான் டிஜிட்டல் யுகமாக மாறிவிட்டதே. .. நம் என்ன செய்தாலும் மூன்றாவது கண் நம்மை கண்காணித்து வருகிறது. வேளேச்சேரியில் டால்பின் ஸ்ரீதர் தூய்மை பணியாளர்களுக்கு உதவிகள் வழங்கி வந்த நிலையில் அவர் செய்த ஒரு காரியம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
வேளேச்சேரியில் அவர் வீடு இருப்பதாலும் அவர் 2016 ஆண்டு தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டதாலும் அந்த பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மழைக்காலம் சமயத்தில் தூய்மை பணியாளர்கள், சாலையோர வியாபாரிகள், ஏழை மாணவர்களுக்கு குடை மற்றும் ரெயின்கோட் போன்றவற்றை வழங்குவது வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த வருடமும் தூய்மை பணியாளர்களுக்கு குடை ரெயின்கோட் உதவிகள் வழங்கப்பட்டது. அப்போது டால்பின் ஸ்ரீதர் ஒரு அம்மாவிடம் பிரதமர் மோடி அடிக்கடி ஒரு விஷயம் சொல்வார் தூய்மை பணியாளர்களுக்கு தான் முதல் மரியாதை கொடுக்க வேண்டும் என பேசி கொண்டே அந்த அம்மாவின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார். அந்த அம்மா சார் சார் என கூறிய நிகழ்வு அங்கு சுற்றி இருந்தவர்களை நெகிழ செய்தது. இந்த சம்பவம் வேளச்சேரியை தாண்டி தமிழகம் முழுவதும் வைரலாகி வருகிறது இதுதான் ஆர்.எஸ்.எஸ் வளர்ப்பு.......
