24 special

மலைக்கே சென்ற நீதிபதி...இதுதான் முழு தீர்ப்பு.... கொண்டாட்டத்தில் இறங்கிய முருக பக்தர்கள்

G.R.SWAMINATHAN
G.R.SWAMINATHAN

தமிழகத்தின் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் முதலாவதாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்தை எங்கு ஏற்ற வேண்டும் என்பது குறித்த விவகாரம் இந்த ஆண்டு பெரிய விவாதத்தை  ஏற்படுத்தியுள்ளது.இறுதியில் கந்தனே வென்றார். மதுரை மாவட்டம், எழுமலை ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவில், 'திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். அதற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டார்.


திருப்பரங்குன்றம் மலை என்பது ஆன்மிக வரலாற்றின் உயிர்மூச்சு. சங்க இலக்கியம் பிறந்த மண்.தமிழ் கலாச்சாரம் தன்னையே பேணி வளர்த்த தாய் மண்ணின் ஒரு பகுதி.நக்கீரர் இங்கிருந்தே சீறும் சொற்களால் முருகனைப் பாடினார்.சித்தர்கள் இந்த மலைச்சரிவில் தியானம் செய்தனர்.ஏராளமான தலைமுறைகள்இந்த மலையையே தங்கள் மரபின் அடையாளமாக பார்த்துத் தழைத்தனர்.அந்தந்த தலைமுறைகளுக்கு தீபம் என்பதே ஒளியோடு மட்டுமல்ல மரபின் தொடர்ச்சி மக்களின் சக்தி.மக்களின் நம்பிக்கையின் சின்னம். இத்தனை வரலாற்று அடையாளம் கொண்ட இடத்தில் கார்த்திகை தீபம் பற்றிய குழப்பம் அடிக்கடி எழுவது இந்து மக்களின் மனதில் பெரும் வருத்தத்த ஏற்படுத்தியிருந்தது.

இந்தநிலையில் மதுரை நீதிமன்றத்தில் வந்த புதிய உத்தரவு… ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் திருப்பிப் பார்த்திருக்கிறது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்என்பதை மீண்டும் மிகத் தெளிவாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.பல ஆண்டுகளாக இந்த விவகாரம் நீதிமன்ற கதவைத் தட்டிக் கொண்டு வந்திருக்கிறது.ஒவ்வொரு முறையும் “தடையில்லை” என்றே சொல்லப்பட்டாலும், அதை செயல்படுத்தாமல் இருந்தது அரசுகள். 

இம்முறை அதே நிலை மீண்டும் தோன்றும் என சில அரசியல்வாதிகள் நினைத்தார்கள் ஆனால் அவர்கள் கனவில் மண்ணை அல்லி போட்டுள்ளார் நீதிபதி .நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேராக மலைக்கே சென்று ஆய்வு செய்தது…இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டதை காட்டியது.கோப்புகளைக் கண்டு தீர்ப்பு சொல்லும் பாணி இல்லாமல்,அங்கிருந்த நிலைமையை நேரடியாக பார்த்து முடிவு எடுக்கப்பட்டது. மலைப்பாதை எப்படி? தீபத்தூண் நிலை என்ன? பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு சாத்தியமானது?எல்லாம் நேரில் பார்த்த பின் தான் “தீபம் ஏற்ற தடையில்லை” என்று உறுதி செய்யப்பட்ட உத்தரவு வெளியானது.

இந்த வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கோரவில்லை. மலையில் உள்ள தீபத் தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்கிறார்கள். மலையில் இரு உச்சிகள் உள்ளன.உயரமான உச்சியில் தர்காவும், உயரம் குறைந்த உச்சியில் தீபத்தூணும் உள்ளது.

தீபத்தூண் முஸ்லிம்களுக்கு உரிமைப்பட்ட பகுதியில் இல்லை. சிவில் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் தர்காவுக்கு உரிமைப்படாத பகுதியில் இருக்கும் தீபத்தூண் கோயிலுக்குச் சொந்த மானது என நீதிமன்றம் முடிவு செய்கிறது. அது தீபம் ஏற்றும் வடிவமைப்புடன் உள்ளது. அது கொடி மரம் அல்ல. தர்காவுக்கு தனி கொடி மரம் உள்ளது.

சமீபத்திய நிகழ்வுகள் தீபத்தூண் கோயில் சொத்து என நிரூபிக்கப்பட்டுள்ளது. அதில் இந்துக்கள் விளக்கு ஏற்ற முயற்சிக்கக் கூடும் என நினைத்து கோயில் நிர்வாகம் மூடி வைத்துள்ளது. தீபத்தூணும் அதை ஒட்டிய பகுதியும் தர்காவுக்கு சொந்தமானதாக இருந்தால் தீபத்தூண் மூடியதை பார்த்துக்கொண்டு தர்கா நிர்வாகம் அமைதியாக இருந்திருக்காது. தர்காவின் கோரிக்கை உண்மையல்ல என்பதற்கு இது ஒன்றே போதுமானது.

மனுதாரர்கள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதை நிறுத்தக் கோரவில்லை. தீபத்தூணிலும் விளக்கை ஏற்ற வேண்டும் என்கின்றனர். நூறு ஆண்டுகளாக தீபத்தூணில் விளக்கு ஏற்றப்படவில்லை. மலை உச்சியில் விளக்கு ஏற்றுவது தமிழ் மரபு.இந்த பாரம்பரியத்தை கோயில் நிர்வாகம் மீண்டும் தொடங்க வேண்டும் என மனுதாரர்கள் கோருவது நியாயமானது.

மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் விளக்கு ஏற்றுவதன் மூலம், தர்கா நிர்வாகம் எந்த வகையில் பாதிக்கப்படும என்பதை நிரூபிக்கவில்லை. அவர்களின் உரிமை எந்த வகையிலும் பாதிக்கப்படாது. எனவே, இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம், மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் ஏற்றப்பட வேண்டும். இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை உறுதி செய்வது காவல் துறையின் கடமை. இவ்வாறு நீதிபதி உத்தர விட்டுள்ளார்.