24 special

திருப்பரங்குன்றம் தீப தூண் தீர்ப்பு விமர்சனம்...மதுரை எம்.பி வெங்கடேசன் பதவி பறிப்பா? முருக பக்த்ர்கள் எடுத்த முடிவு

THIRUPARANKUNDRAM, M.P VENKATESAN
THIRUPARANKUNDRAM, M.P VENKATESAN

திருப்பரங்குன்றம் மலை தமிழகத்தின் மிகப் பழமையான வரலாற்றுச் சின்னங்களில் ஒன்று.  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ‘குதிரை சுனை திட்டு’ எனும் பகுதியில் ஒரு பெரிய விளக்குத் தூண் இன்றும் உள்ளது. பல்லாண்டுகளாக அந்த விளக்குத் தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது, அன்றைய ஆங்கிலேய அரசு, மலை உச்சியில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்தது. அதனால், அந்த வருடம் அந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை அடுத்தடுத்த வந்த சிக்கல்களால் அங்கு தீபம் ஏற்ற முடியவில்லை. 


மேலும் அங்கு சிக்கந்தர் என்பவரின் உடலை புதைத்து அங்கு தர்கா உருவருவாக்கினார்கள் , திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என கூற ஆர்மபித்தார்கள், இதனை தொடர்ந்து சர்ச்சை எழுந்தது, தர்கா அமைந்துள்ள மலைப்பகுதிகள் முழுவதுமே தங்களுக்கு சொந்தம் என்று முஸ்லிம்கள் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கு லண்டன் ப்ரீவி (உயர்மட்ட) கவுன்சிலில் நடைபெற்றது. மலை முழுவதுமே, அங்கு கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானுக்கே சொந்தம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுமட்டுமல்லாமல் அங்குள்ள தர்காவை எந்தக் காரணம் கொண்டும் விஸ்தரிக்கக் கூடாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்குமாறு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கின் தீர்ப்பில் தர்காவின் காம்பவுண்டு சுவரிலிருந்து 15 மீட்டர் தூரம் தள்ளி மலை உச்சியில் எங்கு வேண்டுமானாலும் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றிக் கொள்ளலாம்” என்று தீர்ப்பு வந்தது.

மேலும் தமிழக அரசும் அறநிலையத் துறையும் நினைத்திருந்தால், பாரம்பரியமாக உள்ள விளக்குத் தூணிலேயே தீபத்தை ஏற்றியிருக்கலாம்; சிலரை ஓட்டுவங்கிக்காக திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக கோயில் நிர்வாகம் மலையில் 150 அடி உயரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபத்தை ஏற்றினார்கள். இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் தரப்பில் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த நிலையில், அது குறித்தான வழக்கில் 'மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்' என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மலையில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டிருக்கிறார். இது விவாதங்களை கிளப்பியிருக்கும் நிலையில், "கார்த்திகை தீபத்தை.. கலவர தீபமாக மாற்ற முயலுகிறார்கள்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்திருக்கிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MP இவ்வாறு கூறுவது நிச்சயம் தவறு ஆகும். இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய ஹிந்து அமைப்பினர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.. மேலும் மலையில் நீதிமன்றம் உத்தரவிட்டு தீபம் ஏற்றுகிறார்கள் அதனை இவர் கலவர தீபமாக மாற்ற முயல்கிறார்கள் கூறுவது நீதிபதியை விமர்சிப்பதுக்கு சமமாகும். அதன் அடிப்படையில் இவரை கைது செய்யவேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளது. அதே போல் இவர் பேசுவது தான் மத தூண்டலை தூண்டுவது போல் இருக்கிறது ஒரு சாரார்  மனதை மகிழ்விக்க மற்றொரு சமுதாய மக்களை தரக்குறைவாக பேசுவது போல் அமைந்துள்ளதால் இவரின் பதவியை பறிக்க வழக்கு பதிய உள்ளதாக முருக பக்த்ர்கள் முடிவெடுத்துளார்கள் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது