
திருச்சியில்  ஆதிக்கம் செலுத்துவது யார் என்பதில் திமுக அமைச்சர்களான கே.என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதன் தொடர்ச்சியாகவே, மாநகராட்சி கவுன்சில் கூட்டத்திலும் அமைச்சர்களின் ஆதரவு கவுன்சிலர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  திருச்சி மட்டுமின்றி பல மாவட்டங்களிலும், திமுகவின் மூத்த மற்றும் இளம் தலைவர்கள் இடையே உட்கட்சி மோதல் நிலவுவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், திமுகவில் நிலவும் உட்கட்சி மோதல் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. அதில் முக்கியமானது கே.என் நேரு  தற்போது சிக்கியுள்ளது. 
திமுக வலிமையாக இருக்கும் மாவட்டங்களில் ஒன்று திருச்சி. திமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே வலிமையாக இருக்கும் மாவட்டங்களில் ஒன்றாகத் திருச்சி இருக்கிறது. திமுகவுக்கு திருச்சியில் இருந்து பல தலைவர்களும் கிடைத்துள்ளனர்.கடந்த சட்டசபைத் தேர்தலிலும் கூட அங்குள்ள அத்தனை சட்டசபை தொகுதிகளிலும் திமுகவே வென்றது. அந்தளவுக்குத் திருச்சியில் வலிமையாக திமுக இருந்து வருகிறது 
திருச்சியில் பல காலமாகவே திமுக மூத்த தலைவர் கே.என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோருக்கு இடையே மறைமுகமாக மோதல் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. அன்பில் மகேஷுக்கும் திமுக தலைமைக்கும் இருக்கும் தொடர்பு அனைவருக்கும் தெரியும். அதேநேரம் கே.என். நேரு திமுகவின் மூத்த மற்றும் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். இதன் காரணமாகவே திருச்சியில் எந்தவொரு முக்கிய முடிவாக இருந்தாலும் இரு தரப்பிற்கும்  எப்போதும் பிரச்சனை தொடர்ந்து வருகிறது.  
இந்த நிலையில்  ஒரு பக்கம், கரூர் வழக்கில் பல முக்கியமான ஆதாரங்களை சி.பி.ஐ. கையில் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, குடிநீர் வழங்கல் மற்றும் நகராட்சி நிர்வாக துறையில்,800  கோடிக்கும் அதிகமாக பணம் பெற்று வேலை வழங்கியுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. அந்த அறிக்கையில், சில துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் திமுக அமைச்சரின் மகன்  பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த அறிக்கை முதலில் ஒரு ஆங்கில நாளிதழில் வெளியானதும், தமிழக அரசியல் மையங்கள் பரபரப்பாகின.. அதிலும் முக்கியமாக, இந்த ரிப்போர்ட் எப்படி ஊடகங்களிடம் கசிந்தது என்ற கேள்வி டில்லியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக டி.ஜி.பி. அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட பிறகு, சில போலீஸ் அதிகாரிகள் மூலமாக லீக் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது தான் இது குறித்து முக்கிய விஷயம் வெளியாகி உள்ளது. அன்பில் மகேஷ்  இருப்பதாக நேரு ஆதரவாளர்கள் கூறியுள்ளார்கள். 
இது வெளிவந்த பிறகு, தி.மு.க., தலைமைக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கை வெளியான நாளிலிருந்தே உதயநிதி மற்றும் அன்பில் மகேஷை அழைத்து அறிவாலயம் கண்டித்துளள்ளதாம். தேர்தல் நேரத்திலா இப்படி செய்வது அரசியல் தெரிந்தால் செய்யுங்கள் இல்லை என்றால் அமைதியாக ஓரமாக உட்காருங்கள். கரூர் விஷயத்திலும் ஓவர் ஆக்டிங் செய்து திமுகவுக்கு கேட்ட பெயர் உருவாக்கியது.
இதில் இது வேறயா என தலையில் அடித்து கொண்டார்களாம் மேலும் கே.என்.நேரு கைது குறித்து சென்னை முதல் டில்லி வரை தீவிர ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.அதே சமயம், அரசின் பல துறைகளில் ஊழல் குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து எழுந்து கொண்டிருப்பது, தி.மு.க.வுக்கு இடியாப்ப சிக்கலாக மாறியள்ளது. கே.என். நேரு மகன் அப்ரூவராக மாறலாம் என்றும் அப்படி மாறினால் கோபாலபுரத்தில் பல தலைகள் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
