24 special

இந்தியர்கள் கொடுத்த தரமான பதிலடி! அந்தர் பல்டி அடித்த டிரம்ப்! ! வெள்ளைக்கொடி தூக்கிய அமெரிக்கா!

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

தற்போது இந்தியாவுக்கும் அமெரிக்காவும் இடையே நடைபெறும் வர்த்தக போர் தான் உலக தலைப்பு செய்தியாக இருக்கிறது  அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு டொனால்ட் டிரம்ப் விதித்த 50 சதவீத வரி தான் முக்கிய காரணம். அமெரிக்கா உடனான வர்த்தக சரிவை சரிசெய்ய நம் நாடு சீனாவுடன் கைகோர்த்துள்ளது. மேலும் சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் நெருக்கம் காண்பித்தார்


இது டிரம்பின் தூக்கத்தை கலைத்துத்து. இதற்கிடையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் சில நாட்களுக்கு முன்னர் இரவு  விருந்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவன சி.இ .ஓ க்களை சந்தித்தார்.

சிலிக்கான் வேலியின் 30-க்கும் மேற்பட்ட சி.இ .ஓக்கள் கலந்து கொண்ட அந்த விருந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த  மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரான் சிஇஓ சஞ்சய் மெஹ்ரோத்ரா, டிப் கோ நிறுவனத்தின் விவேக் , பலந்திர் டெக்னாலஜிஸ் சபாநாயகர் ஸ்யாம் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், பேஸ்புக் நிறுவனத்தின் மார்க் ஜூக்கர் பெர்க், ஓரக்கிளின் சப்ரா கேட்ஸ், பில் கேட்ஸ் உள்ளிட்ட அமெரிக்க தொழில்நுட்ப மாபெரும் தலைவர்களும் கலந்து கொண்டனர். 

விருந்தின் போது ட்ரம்ப், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் செய்யும் பணிகளை நிறுத்த வேண்டும், இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தினார்.ஆனால், இந்திய வம்சாவளி டெக் ஜெயன்ட்ஸ் மட்டுமல்லாமல், அமெரிக்க டெக் ஜெயன்ட்ஸும் ட்ரம்பின் கருத்தை முற்றிலும் நிராகரித்தனர். “இது முடியாத காரியம்” என்று அனைவரும் ஒரே குரலில் எதிர்த்து நின்றுள்ளார்கள் . 

இந்த விருந்துக்குப் பின், அடுத்த நாளே ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை தளர்த்தினார். “நான் மோடியின் நல்ல நண்பன், அவர் சிறந்த பிரதமர்” என்று பாராட்டினார். இந்தியா-அமெரிக்க உறவு சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.ஆனால் அதே சமயம், “மோடி ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதில் பிடிவாதமாக இருக்கிறார், அதுதான் எனக்கு பிடிக்கவில்லை” என்றுகூட குறிப்பிட்டார்.

ஏற்கனவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் சேர்ந்து இருக்கும் போட்டோவை டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அதில், ‛‛நாம் இந்தியாவையும், ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டது போல் தெரிகிறது. அவர்கள் ஒன்றாக நீண்டகால மற்றும் வளமான எதிர்காலத்தை கொண்டிருக்கட்டும்'' என புலம்பியிருந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது, 

ஒரு காலத்தில் அமெரிக்காவின் டெக்னாலஜி வளர்ச்சியை யூதர்கள் தாங்கிச் சென்றனர். ஆனால் இன்று அதையே இந்தியர்கள் கையாள்கிறார்கள். சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா போன்ற இந்திய வம்சாவளி டெக் ராட்சசர்கள் ,உலகத்தையே  தொழில்நுட்பத்தில் ஆட்டிப் படைக்கிறார்கள் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே 

இதை ட்ரம்புக்கு நேரடியாக உணர்த்தியதுதான் இந்த வெள்ளை மாளிகை விருந்து.வரும் ஐ.நா. மாநாட்டில் (செப்டம்பர் 23-29) டிரம்ப்பை சந்திக்க திட்டமிட்டிருந்த மோடி  வரிவிதிப்பின் காரணமாக  அதை ரத்து செய்தார்.  ஆனால் அக்டோபர் 26-ஆம் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சிமாநாட்டில் மோடி-ட்ரம்ப் நேருக்கு நேர் சந்திப்பது உறுதி.