24 special

அண்ணாமலை பற்றிய கேள்வி! ஓட்டம் எடுத்த கனிமொழி! எங்க அண்ணன் ஆட்சியில் சமூகநீதியா?

ANNAMALAI,KANIMOZHI
ANNAMALAI,KANIMOZHI

தமிழகத்தில் சமூக நீதிக்கு மறுபெயர் என்றால் திமுகவும் அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் தான் என  தம்பட்டம் அடித்து வருகிறார்கள். அந்த பொய்யான பிம்பத்தை திமுகவினர் சுக்கு நூறாக உடைத்து வருகிறார்கள். பட்டியலினத்தவர்களுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். 


விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனம் நகராட்சி அலுவலகம்—பொதுமக்களின் கோரிக்கைகள், ஊழியர்களின் அலுவல் பணிகள், மக்களவைச் சந்திப்புகள் என தினசரி பரபரப்புடன் இயங்கும் அந்தச் சூழலில், அங்கு நடந்த சம்பவம் , திண்டிவனம் நகராட்சியை மட்டுமல்ல   தமிழக அரசியலையும் திமுகவின்  சமூக நீதியையும் ஆட்டம் காண வைத்துள்ளது.

திண்டிவனம் நகராட்சி இளநிலை உதவியாளராகப் பணிபுரியும் முனியப்பன், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். சுமார் ஒரு வருடமாகவே நகராட்சியின் பொறியியல் பிரிவில் பணியாற்றி வருகிறார். அவருக்கும் 20-வது வார்டின் திமுக பெண் கவுன்சிலர் ரம்யாவுடன் ஒரு பைல் விஷயத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறுகிறார்கள் . 

தனக்கு சம்பந்தேமே இல்லாத பைலை முனியப்பனிடம் கேட்டுள்ளார்  “திமுக கவுன்சிலர் ரம்யா இந்தக் கோப்புக்கு உங்களுக்கு சம்பந்தமே இல்லை. நான் அதைத் தேடி ஆணையரிடம் கொடுக்கிறேன்” என முனியப்பன் சொல்லியதும், “நான் யார் தெரியுமா? என்னிடம் திமிரா பேசுறியா?”என பிரச்சனை எழுந்துள்ளது. அதற்குள் ரம்யாவின் கணவர் உட்பட சிலர் வந்து, “அக்காவுக்கு எதிரா பேசுறியா?” என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் முனியப்பன் 

ஏற்கெனவே அச்சத்தில் இருந்த முனியப்பன், ஆணையர் அறையில் நடைபெற்ற விவாதத்தின் போதே மீண்டும் வந்துள்ளார். அப்போது, “வாயால் மட்டும் மன்னிப்பு கேட்டால் போதுமா?” என ரம்யா கேட்டதும், பயந்துபோன முனியப்பன், ரம்யாவின் காலில் விழுந்து கதறி அழுதுள்ளார். இந்த சிசிடிவி  காட்சி வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. 

சுமார் ஒரு நிமிடம் முப்பது வினாடிகள் ஓடும் அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதும், திண்டிவனம் நகரம் அதிர்ச்சியடைந்தது. "ஒரு பட்டியல் சமூக ஊழியரின் மரியாதை இவ்வாறு நிலைதாழ்த்தப்படுகிறதா?" என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது. சாதி, அதிகாரம், அரசியல் — மூன்றும் ஒன்று சேர்ந்த சம்பவமாகவே இது விவாதிக்கப்படுகிறது.

இது வெறும் அலுவலகத் தகராறு அல்ல. திமுகவின்  அரசியல் அதிகாரங்களின் தலையீடு, சாதி அடிப்படையிலான துஷ்பிரயோகம் என குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக 5 கவுன்சிலர்கள் நேரடியாக டி.எஸ்.பி.க்கும், நகராட்சி மேலாளருக்கும் புகார் அளித்துள்ளனர். 

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை, அதிகாரமும் அரசியலும் சேர்ந்து இத்தகைய நிலைக்கு தள்ளியது சமூக மரியாதைக்கே எதிரானது. "இது ஒரு மனித உரிமை மீறலா? சமூக அவமதிப்பா? அதிகார துஷ்பிரயோகமா?" என்று கேள்விகள் மழையேறி வருகின்றன.ரம்யா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது இது வழக்கமான அரசியல் சர்ச்சையாகவே முடிந்து விடுமா?  என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் கடும் கண்டங்களை தெரிவித்துள்ளார். 

அண்ணாமலை  கண்டனம் குறித்து செய்தியாளர்கள் திமுக எம்.பி கனிமொழியிடம்  கேட்டதற்கு பதில் சொல்லாமல் அப்படியே நழுவி காரில் ஏறிவிட்டார். இதுவே பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்திருந்தால் கையில் கேண்டிலை ஏற்றியும் வாயில் கருப்பு துணியை கட்டியும் சமூக நீதி எங்கே என சாலையில் நடக்க ஆரம்பித்திருப்பார். அவரின் அண்ணனின் ஆட்சியில் நடந்துள்ளதால் சமூக நீதிக்கு லீவு விட்டார் போல் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.