
அமெரிக்கா விதித்த 50% வரி அழுத்தத்துக்கு இந்தியா அடிபணியவில்லை , மேலும் வர்த்தக பேச்சுவார்த்தையில் பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறியுள்ளது. இது உலக அரங்கில் இந்தியாவின் பலத்தை காட்டிய மிகப் பெரிய தருணமாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் அட்டகாசத்தை எதிர்த்து, நிற்கும் இந்தியாவுக்கு ஆதரவாக சீனாவும் ரஷ்யாவும் களமிறங்கியுள்ளன. இது இந்தியா இன்று உலக அரசியலில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்ற நாடாக மாறி விட்டது என்பதை தெளிவாக காட்டியுள்ளது.
இந்தியா அமெரிக்கா மோதலுக்கு பிறகு இந்தியா சீனாவின் நட்பை நோக்கி செல்கிறது என்று உலகம் நினைத்துக் கொண்டு இருக்கிறது ஆனால் உண்மையில் சீனா தான் இந்தியாவின் நட்பை விரும்புகிறது என்பதுதான் உண்மை. சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிற்கு ஒரு ரகசிய கடிதத்தை அனுப்பி இருந்தார்.
அதில் சீனா இந்தியா இடையே மீண்டும் நட்பு உறவு மேற்கொள்ளப்பட வேண்டும். அமெரிக்காவிற்கு எதிராக இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் இதனை பிரதமர் மோடிக்கு தெரிவிக்கும் படியும் அந்த கடிதத்தில் கூறி இருக்கிறார். இது, உலகின் இரண்டாவது வல்லரசான சீனாவே இந்தியாவின் நட்பை நாடுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
இந்தநிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார். இந்தச் சந்திப்பிற்கான தேதிகள் இன்னும் குறிப்பிடப்படவில்லை. எனினும், இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் இந்த சந்திப்பு இந்த ஆண்டின் இறுதியில் நிகழக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
ரஷ்ய உக்ரைன் கடந்த நான்கு வருட போரின் தொடக்கத்திலிருந்து, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. 2023 மே மாதத்தில், இந்தியா ஒரு நாளைக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய் கச்சா எண்ணெயை வாங்கியது, இது அதன் மொத்த இறக்குமதியில் சுமார் 45% ஆகும்.
இதற்கிடையில் உலகில் நிலவும்,போர் சூழ்நிலைகள்,வர்த்தகப்போர்கள், வல்லரசு நாடான அமெரிக்காவின் தவறான நடவடிக்கைகள், என உலகம் தற்போது நிலையற்ற தன்மையில் உள்ளது. இதற்கிடையில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகை, உலக அரசியலில் அரசியல் ஒரு முக்கிய தருணமாக அமையலாம். டிரம்ப்பின் வர்த்தக வரி மிரட்டல்களுடன் இந்த வருகை சரியாகப் பொருந்துகிறது.
சீனா இறங்கி வந்த நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றார். அவருக்கு அளிக்கப்பட்ட உற்சாகமான வரவேற்பு, கொடுக்கப்ட்டது இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை உலக கவனம் பெறுகின்றது
"இந்தியாவும் சீனாவும் இனி வர்த்தக பங்காளிகளாக பணியாற்றும், இருவருக்குமான நல்லுறவில் இடைஞ்சலாக இருக்கும் எல்லை பிரச்சினைகள் இனி எழாது, புதிய உலகை உருவாக்குவதில் இருநாடுகளும் தீவிரமாக செயலாற்ற தொடங்கும்" என சொல்லியிருக்கின்றார்கள். இது இந்திய சீன பதற்றத்தை குறைத்து ட்ரம்பின் அட்டகாசத்தை கூட்டாக எதிர்கொள்ள இரு தேசங்களும் முடிவு செய்துவிட்டதை சொல்கின்றது, உலக மக்கள் தொகையில் ஏறகுறைய சரிபாதியினை கொண்டிருக்கும் இரு தேசங்களின் இந்த இணைவு இனி பெரும் மாற்றத்தை உலகிற்கு கொடுக்கும்
இன்றைய நிலைமையைப் பார்த்தால், இந்தியா உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் சக்தி மிக்க நாடாக உருவெடுத்து விட்டது. அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு தலையசைக்காமல், வல்லரசுகளை தனது பக்கம் இழுத்து வந்திருக்கும் இந்தியா, இன்று சர்வதேச அரங்கில் மரியாதையும் வலிமையும் பெற்ற ஒரு நாடாக உயர்ந்துள்ளது