Tamilnadu

எப்படி நீ அப்படி பேசலாம் பேசுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும் கிறிஸ்தவ மத போதகருக்கு நடிகர் சரத்குமார் பதிலடி!

sarathkumar
sarathkumar

சென்னை  குன்றத்தூரில் உள்ள CSI உயிர்ந்தெழுந்த மீட்பர் தேவாலயத்தில் பிரார்த்தனையின் போது மத போதகர் பியூலா செல்வராணி என்பவர் தேவ செய்தி கொடுப்பதாக பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசினார். பெண்களுக்கு குடும்பத்தில் பாதுகாப்பில்லை என்று பேச்சை தொடங்கிய அவர், பள்ளிக்கூடங்களில் சுத்தமாக பாதுகாப்பில்லை என்றார்.


தனது கணவர் பள்ளியில் ஆசிரியராக இருப்பதாகவும் , இருந்தாலும் பள்ளிகளிலும் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை என்றும், ஆண் ஆசிரியர்களிடம் மட்டுமல்ல பெண் ஆசிரியைகளிடம் இருந்தும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை என்று தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக குறிப்பிட்ட சாதியின் பெயரை சொல்லி அவர்களது கடைகளுக்கு பொருள் வாங்கச்செல்லும் சிறுமிகளிடம் பொருட்கள் கொடுக்கும் போது அந்த கடைக்காரர் சிறுமிகளிடம் அத்துமீறுவதாக பேசியதால் சர்ச்சை உண்டானது.


பியூலாவின் இந்த வீடியோ வைரலான நிலையில், மத போதகர் பியூலா செல்வராணி மீது நடவடிக்கை எடுக்க கோரி, நாடார் மகாஜன சபை மற்றும் பல்வேறு வியாபார அமைப்புகள் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகார் குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில்,வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பியூலாவை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்தனர்.

வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவும் , போதகர் பியூலா மீது தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து  சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய போதகர் பியூலா மீது ஜாமீனில் வெளியே வர இயலாத 5 சட்டபிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து பியூலாவை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சூழலில் இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இந்த சம்பவம் குறித்து கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் அதில்,மத போதகரின் சர்ச்சை பேச்சுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் கண்டனம் என்றும் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ

கிறிஸ்தவ ஆலயத்தில், கடந்த 21.11.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்ற போதனை கூட்டத்தின் போது, திருமதி.பியூலா செல்வராணி என்பவர் நாடார் சமூகத்தை இழிவுபடுத்தி பேசியிருப்பது தவறு, எந்தவொரு சமூகத்தையும்,சமுதாயத்தையும் இழிவுபடுத்தி பேசுவது கண்டனத்திற்குரியது.மதவழிபாட்டு தலத்தில் இறைவனை வழிபடும்போது, பிற மதத்தையோ, இனத்தையோ, மொழிகளையோ சாடுவது ஏற்புடையதல்ல. நவீன காலத்தில், பேசுவதற்கு முன்பாக,ஆழமாக சிந்தித்து கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்.

எந்தவொரு விதத்திலும், உதாரணத்திற்காக கூட, மதம், இனம், மொழி சார்ந்து கருத்தை பதிவு செய்து, பிறர் மனதை புண்படுத்துவது தவறு என்றும் பேசுவதற்கு முன்பாக சிந்தித்தால், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும், மோதல்களையும், சிக்கல்களையும் தவிர்க்கலாம் என்பதை தெரிவித்துக் கொண்டு,பிரிவினைவாதத்துக்கு வழிவகுக்கும் இது போன்ற சர்ச்சைக்குரிய பேச்சுகளை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.

More news from tnnews24