Tamilnadu

திமுக அண்ட் பேமிலி டோட்டல் க்ளோஸ்... "பாயிண்ட் பாயிண்டாக"..வெளுத்து எடுத்த பாஜக GK நாகராஜ்!!

GK nagarajan
GK nagarajan

திமுக தலைவர் ஸ்டாலின் மகன் மருமகனை வைத்து ஆட்சி நடத்துகிறார் எனவும், தற்போது பாலியல் குற்றசாட்டுகள் அதிகரித்துள்ள நிலையில் எங்கே சென்றார் கனிமொழி எனவும் ஜோதிமணி முதல் முதல்வர் வரை கடுமையாக விமர்சனம் வைத்துள்ளார் பாஜக விவசாய அணியின் மாநில தலைவர் GK நாகராஜ் இது குறித்து அவர் தெரிவித்தது பின்வருமாறு : 


மாட்டுவண்டி போராட்டம்-இந்த போராட்டம் பெட்ரோல்,டீசல் விலையை திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி குறைக்க வேண்டும் என்பதற்கான போராட்டம்-G.K.நாகராஜ் பாஜக. மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ.5-ம்,டீசலுக்கு ரூ.10-ம் குறைத்துள்ளது. ஆனால் திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி குறைக்கவில்லை என்பதற்கான போராட்டம். திமுக அரசு பெட்ரோலுக்கு ரூ.5,டீசலுக்கு ரூ.4,குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக கூறியிருந்தது. ஊழலற்ற,நேர்மையான, மதச்சார்பற்ற, வெளிப்படையான அரசு நிர்வாகத்தை வாங்குவேன் என்று உறுதியளித்துவிட்டு, ஊழலில் புரையோடிய அமைச்சர்களை வைத்துக்கொண்டு தன் மகன்,மருமகன் மூலமாக குடும்ப ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர்.  

கடன் சுமையில் தமிழகம் தவித்துக்கொண்டிருக்கிறது என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு கூறிவிட்டு,தான் ஆட்சி பொறுப்பேற்றதும் மீண்டும் கடன்சுமையை ஏற்றிக்கொண்டிருக்கிறது திமுக அரசு. தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுப்போம் என்று கூறிவிட்டு, அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக வாரிசுகளின் மகன்களுக்கும், பேரன்களுக்கும் தான்  முன்னுரிமை என்று பேசுகிறார்.

விவசாயிகளை காப்போம் என்று சொன்னவர்,இன்று பொதுமக்கள்  தக்காளியை  ரூ.140 கொடுத்து வாங்குகிறார்கள்.ஆனால் விவசாயிகளுக்கு வெறும் 30 கிடைக்கிறது. வழக்கம்போல இடைத்தரகர்கள் கொள்ளை இலாபம் அடிக்கின்றார்கள். விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட குறுவைசம்பா பயிர்க்காப்பீட்டை சத்தமில்லாமல் ரத்துசெய்துவிட்டது திமுக அரசு.கடந்த மாதம் வெங்காயம் பொதுமக்களுக்கு கோவையில் ரூ.90க்கு விற்றது.ஆனால் திருப்பூரிலோ விவசாயிகளிடம் ரூ.10-க்கு மேல் வாங்குவதற்கு வியாபாரிகள் தயாராக இல்லை.தக்காளியை லோடு லோடு ஆக வாங்கி திமுக இடைத்தரகர்கள் கொள்ளை இலாபம் அடிக்கின்றார்கள்.

100 நாள் ஊரக வேலைவாய்ப்பை 150 நாளாக உயர்த்திவிட்டு, தமிழக அரசு தரவேண்டிய ஊதியத்தை மத்திய அரசை நோக்கி கையை நீட்டுகிறார்கள். தேர்தல் அறிக்கைகள் 57 பக்கம் 12-ல் ஒரு தனி விவசாயி நிலத்தில் பாதிப்பு ஏற்படும்போது இழப்பீடு வழங்குவோம் என்று கூறிவிட்டு, நெல்லுக்கான பயிர்க்காப்பீட்டையே ரத்துசெய்த அரசு திமுக அரசு.எதிர்க்கட்சியாக இருந்தபொழுது ஏக்கருக்கு ரூ.30,000 வழங்கவேண்டும் என்று கூறிய திமுக அன்றைய எதிர்க்கட்சித்தலைவர் இன்று முதல்வர் ஆன பின்பு ஏக்கருக்கு ரூ.8000-ஐ வழங்குவதாக வயலில் இறங்கி பார்க்காமல் அறிவிக்கிறார்.

அவருக்கு தெரியுமா?ஒரு ஏக்கர் நெல் பயிரிட ஆகும் செலவு ரூ.30,000 என்று. சென்னையில் கழிவுநீர் கால்வாய்களை தூர்வாராமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மிகப்பெரிய துயரத்தை உருவாக்கிகொடுத்திருக்கிறது திமுக அரசு.  முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் ரூல் கர்வ் என்ற புதிய விதிமுறையை உருவாக்கி, கேரளா அமைச்சரை வைத்து தண்ணீரை திறந்துவிட்டு தமிழக உரிமையை விட்டுக்கொடுத்திருக்கிறது திமுக அரசு.   

இதேபோல திருவண்ணாமலை கோவிலுக்கு 20000 பேர் என்று எண்ணி எண்ணி அனுமதித்துவிட்டு கோவையில் ஸ்டாலின் அவர்களை வரவேற்க 2,00,000 பேரை திரட்டுவேன் என்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. கரூரை போலவே கோவையிலும் பொய் வாக்குறுதியை கொடுத்து வாக்குகளைப் பெற திட்டமிட்டு சுற்றிவருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்.   பாரதப்பிரதமர் மோடி ஜி முதலமைச்சராக இருந்தபோது 2001-ல் குஜராத்தில் பதவியேற்றபிறகு காங்கிரசின் சூழ்ச்சியால் 2002,பிப்ரவரியில் கோத்ராவில் கலவரம் வெடித்தது.அதை சரியான முறையில் பிரதமர் மோடி கையாண்டார்.

ஏறக்குறைய இருபது ஆண்டுகள் குஜராத்தில் சாதி,மதக்கலவரம் இல்லை.இன்றுவரை குஜாரத்தில் தாமரை மலர்ந்துகொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்டது. 05.11.2021 அன்று போபாலில் இஸ்லாமிய சகோதரிகள் பாரதப்பிரதமருக்கு மிகச்சிறப்பான வரவேற்பைகொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் நேற்று நாகர்கோவில் மதநல்லிணக்க கூட்டத்தில் பங்கேற்ற ஜமாத்தலைவர் திரு.பாவலர் சித்திக் இஸ்லாமியத்தை விட்டு வெளியேறியதாக சில அமைப்புகள் அறிவித்து மதநல்லிணக்கத்தை கெடுத்துக்கொண்டிருக்கிறது. இஸ்லாமியர்களை  பீதியில் ஆழ்த்துகிறது சில பிரித்தாளும் கூட்டம். உணவுத்துறை அமைச்சர் திரு.சக்கரபாணி நேற்று சொல்லியிருக்கிறார்  500 சமுதாய உணவகங்கள் கலைஞர் பெயரிலேயே அமைக்கப்படுவதாகவும், அதற்கு மத்திய அரசு 100% நிதி வழங்கவேண்டுமென்று கேட்டிருக்கிறார்.


ஆனால் பிரதமர் படத்தை தமிழக மண்ணில் மக்கள் கண்ணில் கூட காட்டுவதில்லை திமுக.”GO BACK MODI” என்று சொன்னவர் திரு.ஸ்டாலின். கரூர் பாராளுமன்ற உறுப்பினர் சகோதரி திருமதி.ஜோதிமணி நேற்று கரூரில் தரையிலேயே அமர்ந்து போராட்டம் நடத்தியிருக்கிறார்.            மாற்றுத்திறனாளிகளுக்கு  மருத்துவமுகாம் நடத்த வேண்டும். அதற்கு மத்திய அரசின் நிதியை கரூர் மாவட்ட ஆட்சியர் தரமறுக்கிறார் என்று ஜோதிமணி சொல்லுகிறார்.ஊழல் கறைபடிந்த கரூர் மாவட்ட ஆட்சியர் மத்திய அரசு திட்டத்தை புறக்கணிக்கிறார் என்று.ஜோதிமணி நீங்கள்தானே விமர்சித்தீர்கள் மோடி மோசம் என்று. நேற்று உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார். உத்தரபிரதேசத்தில் இருண்ட காலம் மறைந்துவிட்டது.

வளர்ச்சி காலம் துவங்கிவிட்டது.ஜின்னாவின் சீடர்கள் இனி இங்கு பொய் அரசியல் செய்ய இயலாது. அவர் சொன்னது சரியான வார்த்தை.தமிழகத்தில் கடந்த ஆறு மாதகால ஆட்சியில் சட்டம்,ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது.பாலியல் வன்கொடுமை, கொலை,கொள்ளை, போதைப்பொருளின் பங்கு அதிகரித்துவிட்டது.பிரியாணி திருடுகின்ற கூட்டம் இப்போது ஆடுகளை திருடுவதற்கு துவங்கிவிட்டது.சமீபகாலத்தில் பள்ளிகளில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டது. எங்கே போனார் கனிமொழி?

காவல்துறை,வருவாய்த்துறை,மின்சாரத்துறையில் ஆட்கள் பற்றாக்குறை. ரூ.20-க்கு சாராயத்தை உற்பத்தி செய்யும் திமுக குடும்பம், ரூ.140-க்கு விற்பனை செய்கிறது. இவர்கள் நோக்கம் இவர்கள் குடும்பம் தமிழர்களை ஆள்வது மட்டுமே, அவர்கள் நல்வாழ்வு வாழ்வதற்கு அல்ல என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.

More news from tnnews24