
சமூகத்திற்கு குரல் கொடுக்கும் முதல் நடிகர்கள் குடும்பமாக இருக்கும் சிவகுமார் குடும்பம் தான். இவர்கள் குடும்பம் தான் ஆட்சி மாற்றத்திற்கு ஏற்றாற்போல் மாறி மாறி பேசுவதாக குற்றசாட்டு வந்து கொண்டு இருக்கிறது. சினிமாவில் எப்படி சூர்யா,கார்த்திக் போன்றவர்கள் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நிலையில், முன்னதாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா. சிம்ரன், ஜோதிகா போன்றவர்கள் முன்னணி நடிகையாக இருந்து வந்தனர்.
தற்போது சினிமாவில் இருப்பது போல் புது முகங்கள் நடிகையாக இருப்பது அந்த கால கட்டத்தில் இல்லை, அப்போது முதல் மூன்று இடத்தில் சிம்ரன், ஜோதிகா, திரிஷா போன்றவர்கள் சினிமா துறையை ஆக்ரமித்து வைத்தனர். ஜோதிகா கடந்த ஆட்சியில் கோவில் கட்டுவதற்கு பதிலாக பள்ளிக்குடம், மருத்துவமனை கட்டினால் மக்களுக்கு உதவவும் என கூறினார். ஆனால், இந்த ஆதிசியில் சமூக ஊடகத்திற்கு தலை காட்டாமல் பதுங்கி வருகிறார் என்று தான் சொல்லணும். குறிப்பாக இந்த ஆட்சி மக்களுக்கு எந்த வித நன்மையும் செய்யவில்லை என மக்கள் குற்றம் சுமத்தும் நிலையில் சிவகுமாரின் குடும்பங்கள் வெளியில் வராமல் இருக்கின்றனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர் சூர்யா ஜோதிகா திருமணத்திற்கு பிறகு ஜோதிகா நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதா என்று முடிவு செய்த பிறகே அந்தப் படத்திற்குள் வருகிறார். திருமணத்திற்கு பிறகு வெளியான ஜோதிகாவின் படங்கள் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தியே அமைந்திருந்தன. குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் வைத்த கதை களத்தை தேர்ந்தெடுக்க முக்கியத்துவம் காட்டி வரும் ஜோதிகா கடைசியாக மலையாளத்தில் நடித்த தி கோர் திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. சமீபத்தில் ஊடகத்திற்கு பதிலாக தனியா யூடுயூப் சேனலில் பேசி வரும் ஜோதிகா சினிமா வாழ்க்கையில் நடந்ததை தெரிவித்துள்ளார்.
ஜோதிகா பேசுகையில். நடிப்பு என பார்க்கும் போது சூர்யாவுடன் நான் நடித்த ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படம் தான் எனக்கு முதல் படம். ஆனால் ரிலீஸ் என்று பார்க்கும் போது அஜித்துடன் நடித்த ‘வாலி’ திரைப்படம்தான் என முதல் ரிலீஸ் படம். வாலி படத்தின் போது எனக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. ஆனால் அஜித்துக்கு ஹிந்தி நன்றாக பேச தெரியுமாம். அதனால் செட்டில் ஜோதிகாவுடன் அஜித் ஹிந்தியில்தான் உரையாடிக் கொண்டிருந்தாராம். அதனால்தான் கருத்து பரிமாறுதலில் ஏற்படும் பிரச்சினை எனக்கு அந்தப் படத்தில் இல்லாமல் இருந்தது என ஜோதிகா கூறினார். ஜோதிகாவை பொறுத்தவரைக்கும் தமிழ் மொழி போல ஹிந்திக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர் என அவருடைய பல பேட்டிகளில் புரிந்து கொள்ள முடிகிறது.