
தமிழகத்தில் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பெருக்கின் போது மக்களின் இயல்பு வாழ்கை பாதித்து அன்றாட வாழ்கை முடங்கியது இதில் இருந்து மக்கள் வெளியில் வர மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் தமிழகத்தில் உள்ள அரசு எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அரசை மக்கள் கடுமையாக சாடினார். காஸ்ரோ சிறப்பாக முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்து முழுமையாக பணியாற்றி மக்களை காப்பாற்றியது என அரசியல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய பீடங்களில் ஏற்பட்ட அதிசயம் மூலம் அரசியல் வாழ்க்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் மக்களுக்கு பல வாக்குறுதிகளை கொடுத்தது அது ஏதும் நிறைவேற்றாமல் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளில் 90 சதவீதம் வாக்குறுதி நிறைவேற்றிவிட்டோம் என கூறி வந்த நிலையில், தமிழ்நாட்டில் மழை, வெள்ளம் ஏற்பட்டு அரசின் செயல்படுகளை மக்களிடத்தில் காட்டியது. இதனால் தமிழக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதை தநாடி அமைச்சர்கள் ஊழலில் சிக்கி சிறைக்கு செல்லும் அவலம் நிலவுவதால் மக்கள் மேலும் அரசு மீது வெறுப்பை உண்டாக்கியது. இப்படி மக்களுக்கு நனமை செய்யாமல் தன் குடும்ப வளர்ச்சிக்காக ஊழல் சசெய்வதால் சிறைக்கு செல்வது வரவேற்கத்தத்தக்கது என மக்கள் கூறுகின்றனர்.
இப்படி அரசு தள்ளாடி வரும் நேரத்தில் நேற்று தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம் தோன்றி உள்ளது. பொதுவாக இதை பார்ப்பது பலரும் அபசகுனம் என்று நினைப்பார்கள். அதே சமயம் சில கலாச்சாரங்களில் இதை பார்த்தால் நியாபக மறதி ஏற்படும் என்று கூறுவார்கள். இன்னும் சில ஐதீகங்களில்.. இதை பார்த்தால்.. நாம் விரும்பியதை வேண்டிக்கொள்ளலாம். அது பெரிய அளவில் பலன் அளிக்கும். நாம் வேண்டுவது எல்லாம் கிடைக்கும் என்று கூறுவார்கள். இப்படி பல கலாச்சாரங்களில் பல விதமாக இதை பற்றி பேசுவார்கள். தஞ்சை பெரிய கோவில் ஆட்சியாளர்களுக்கு அவ்வளவு ராசி இல்லாத கோவில் என்பார்கள். அங்கே சென்றால் ஆட்சியாளர்கள் பதவி இழப்பார்கள் என்ற நம்பிக்கை கூட உள்ளது. இப்படிப்பட்ட நிலையத்தில்தான் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மக்கள் பல விதமாக பேசி வருகின்றனர்.
ஏற்கனவே தர்மபுரி மாவட்டம் பொன்னாகரம் அடுத்த அறியாபுரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாடுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் ஸ்ரீ லட்சுமி நாராயணசாமி கோவிலில் வைகுண்ட தினத்தை முன்னிட்டு அன்றைய நாளில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி, சமேத பெருமாள் உற்சவர் சிலை சொர்க்கவாசல் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் பொழுது பல்லக்கில் இருந்த பெருமாள் சிலை கவிழ்ந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவிலில் இது போன்ற சம்பவம் நடக்க கூடாது ஆனால் நடந்து விட்டது! இதனால் ஆட்சியாளர்களுக்கு ஆபத்து எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே திமுக அரசு தள்ளாடும் வேலையில் இது போன்ற நிகழ்வு நடந்திருப்பது அபசகுனமாக இருக்குமோ என அறிவாலய வட்டாரம் அதிர்ச்சியில் பதைபதைப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.