Cinema

ஆதங்கத்தை கொட்டிய நடிகை வினோதினி! சிக்கினார் கமல்...

vinothini, kamalhassan
vinothini, kamalhassan

கடந்த 2018 ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தென்னிந்திய திரை உலக முழுவதும் புகழ் பெற்று ஹிந்தியிலும் அசத்தி வந்த உலகநாயகன் கமலஹாசன் தமிழக மக்களின் நலனுக்காக மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பிப்பதாக தெரிவித்தார். இந்த கட்சி ஆரம்பிக்க கமலஹாசன் முடிவெடுத்தபொழுது அதிமுக, பாஜக மற்றும் திமுகவுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்றும் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிட்டு மக்களுக்கான சேவைகளை புரிய உள்ளது என்றும் கூறியிருந்தார். இதனை அடுத்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் இக்கட்சி தனித்துப் போட்டியிட்டது. அதோடு அதிமுக பாஜக மற்றும் திமுக என அனைத்து கட்சிகளையும் சரமாரியாக விமர்சித்து வந்தார்,  கட்சி தொடங்கப்பட்ட மூன்று வருடங்களில் அவர் சமூக வலைதளங்களில் முன்வைத்த பதிவுகள் ஒவ்வொன்றுமே இந்த மூன்று கட்சிகளையும் தெறிக்கவிடும் வகையில் இருந்தது.


இருப்பினும் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி நான்கு சதவீத வாக்குகளையும் சட்டமன்ற தேர்தலில் 2.5 சதவீத வாக்குகளையும் பெற்றது. அதோடு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமலஹாசன் அவர் எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் சுமார் 1600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அதற்குப் பிறகு மீண்டும் சினிமாவில் தனது நேரத்தை அதிக அளவில் செலுத்தி விக்ரம் படத்தில் இரண்டாவது பாகத்திலும் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். மேலும் தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சி ஒன்றுக்கு தொகுப்பாளராகவும் பணியாற்றினார். இதனை அடுத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்துமே திமுகவிற்கு ஆதரவாகவும் திமுகவுடன் கூட்டணி அமைப்பது போன்ற வகையிலும் இருந்தது.

ஏனென்றால் 2015 ஆம் ஆண்டு சென்னையில் பெய்த கனமழைக்கும் 2023 சென்னையில் பெய்த கன மழைக்கும் அதிக வித்யாசம் உள்ளது 2023 பெய்த மழையின் சதவிகிதமே அதிகம் என்று கூறிய திமுகவிற்கு ஆதரவாக கமலஹாசனும் இது இயற்கை பேரிடர் நம் கையில் ஒன்றுமில்லை என்ற வகையிலான பதிவுகளை இட்டார்!ஆனால் பிறகு தான் தெரியும் என்பது 2015 பெய்த மழையின் அளவை அதிகம் என்று மேலும் இந்த மழையில் தமிழக அரசு தரப்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நிவாரண பொருட்கள் எதுவும் உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை என்பது மக்களின் முக்கிய குற்றச்சாட்டாகவும் இருந்தது. ஆனால் அவற்றை கண்டு கொள்ளாத வகையில் கமலஹாசன் இட்ட பதிவு சமூக வலைதளத்தில் விமர்சனத்திற்கு உள்ளானது. அதுமட்டுமின்றி காங்கிரசுக்கு நெருக்கமாகவும் இருந்து ராகுல் காந்தியின் பாரத் ஜாடோ பயணத்திலும் அவர் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இரண்டு சீட்டுகளைப் பெறும் என்ற வகையிலான வதந்திகளும் அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்தது.

இதற்கு சமூக வலைதளங்களில் இவை அனைத்தும் வதந்தியாகவே இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய விமர்சனங்கள் பதியப்பட்டது, ஆனால் அவர்கள் அனைவருக்கும் ஏமாற்றத்தை கொடுக்கும் வகையில் கமலஹாசன் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போன்ற போவதில்லை திமுகவுடன் இணைந்து அக்கட்சிக்கு ஆதரவாக செயல்பட போகிறது என தெரிவித்தார் மேலும் திமுகவும் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு சீட்டை வழங்கி கூட்டணி அமைத்துக் கொண்டதாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தி பலருக்கும் அதிருத்தியையும் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது. அதாவது நாட்டு நலனுக்காக எடுத்த முடிவாக இருக்கட்டும் அப்போ வீட்டு நலன் உதயசூரியன் நல்ல குத்துங்கன்னு என்னை சொல்ல வைங்க பாப்போம் என்று பதிவிட்டு கமலஹாசனின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இப்படி நட்சத்திரங்கள் தரப்பிலும் கமலஹாசனின் ரசிகர்கள் தரப்பிலும் கமலஹாசன் திமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது குறித்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.