24 special

திமுக மகளிர் அணி அறிவாலயத்திற்கு கொடுக்கப்போகும் ஷாக்...

udhayanithi, womens
udhayanithi, womens

நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது, மத்தியில் ஆட்சி அமைத்தவரும் பாஜக மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதோடு தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு, தொகுதி பங்கீடு கூட்டணி கருத்துக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனை பாஜக மட்டும் இன்றி தேசிய அளவில் உள்ள எதிர்க்கட்சிகளும் தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சிகளும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் தற்போது பாஜகவின் வளர்ச்சி என்பது அபரிமிதமாக இருப்பதாகவும் அதற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்கப்பட்டதும் அவர் தலைமையில் தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் நடைபயணம் நல்ல வரவேற்ப்பை பெற்றதும் காரணமாக கூறப்படுகிறது. 


இதனால் திமுக கடும் அதிருத்தியையும் எரிச்சலையும் கண்டுள்ளது. அதனால் பாஜகவை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு திமுகவிற்கு ஆதரவாக செயல்படும் பத்திரிகை நிறுவனங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் பேச்சாளர்கள் மூலம் பாஜக தலைவர்களையும் நிர்வாகிகளையும் விமர்சித்து தேவையில்லாத காரணங்களை முன்வைத்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.  ஆனால் அவற்றிற்கெல்லாம் அஞ்சாத பாஜக தொடர்ந்து திமுக செய்து வருகின்ற ஊழல் விவரங்களையும் போலி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த நிலையில் பாஜக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் திமுக பற்றிய உண்மை விவரங்கள் மக்களுக்கு தெரிய வைக்க வேண்டிய நிலைமையை தற்போது தேவை இல்லை! திமுக மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் திமுகவின் எம்எல்ஏ எம்பிகள் அவர்களின் தொகுதிகளுக்கு எந்த நற்பணிகளையும் செய்யாமல் கிடப்பில் போட்டிருப்பதும் மக்களுக்கே தெரிகிறதாக அரசியல் விமர்சிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி கடந்த மூன்று ஆண்டுகளில் திமுகவின் ஆட்சியாளர் மக்கள் கடும் அதிருப்தியை சந்தித்து வருகின்றனர் என்பதால் இந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகம் இதுவரை காணாத ஒரு மாற்றத்தை காணும் என்று கூறி வருகிறார்கள். சரி கட்சிக்கு வெளியில்தான் பொதுமக்களிடம் திமுக கடும் அதிருப்தியை சந்தித்து வருகிறது என்றால் கட்சிக்குள் பல நடவடிக்கைகள் முறையற்றதாக நடைபெறவில்லை என்று கட்சியின் மூத்த நிர்வாகிகளே குற்றம் சாடி வருகின்றனர் அதேபோன்று திமுகவில் மகளிருக்கு எந்த ஒரு உரிமையும் வழங்கப்படுவதில்லை மரியாதையும் வழங்கப்படுவதில்லை என்று மகளிர் அணி நிர்வாகிகள் குற்றம் சாடி உள்ளனர். அதாவது மகளிர் அணியினர், மகளிர் தினத்தை ஒட்டி திமுகவின் துணை பொது செயலாளர் கனிமொழி பங்கேற்கும் மாநாட்டை மதுரையில் நடத்த விரும்பியதாகவும் அதற்காக மதுரை மாவட்டத்தில் மாநாட்டு பணிகளை மேற்கொள்ள அந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவரிடம் திமுக மகளிர் அணியை சேர்ந்த தமிழரசி, ஹெலன் டேவிட்சன் மற்றும் நாமக்கல் ராணி ஆகியோர் சந்தித்து பேசி உள்ளனர். 

அந்த சந்திப்பில் அமைச்சர் உதயநிதி படம் இடம் பெறுவதற்கு தொடர்பாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சருக்கும் மகளிர் அணி நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் மகளிர் அணி நிர்வாகிகளை அந்த அமைச்சர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதாகவும் கூறப்படுகிறது இதனால் மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் இது குறித்த புகாரை முதல்வர் ஸ்டாலினிடம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த மாநாட்டில் எந்தவித மாற்றமும் இன்றி மதுரையில் நடைபெறுவதற்கு பதில் திண்டுக்கல்லில் நடந்து முடிந்துள்ளது. அதோடு மகளிர்க்கு சம உரிமை, சமத்துவம், சமூக நீதி என்று பொதுவெளியில் திமுக பேசுகிறதே தவிர மகளிருக்கான உரிய மரியாதை இங்கு இல்லை என்று புலம்பி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பல கட்சியை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்து வருகிறார்கள் குறிப்பாக காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த  விஜயதாரணியும் காங்கிரசில் மகளிருக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார் தற்போது திமுகவிலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்று வருகிறது இதனால் திமுகவை சேர்ந்த மகளிர் சிலரும் பாஜகவில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.