Cinema

நடிகர் அஜித்குமார் திடீர் மருத்துவமனையில் அனுமதி... இணையத்தில் தீயாக பரவும் செய்தி!

Ajithkumar
Ajithkumar

பிரபல தமிழ் திரையுலக நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் இதுவரை அஜித்குமார் அறுவை சிகிச்சை முறை செய்துகொண்டார் என்பது குறித்து லிஸ்ட்டை கண்டு ரசிகர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 


அஜீத்குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதற்க்கான ஷூட்டிங் வெளிநாடுகளில் நடந்து வருகிறது. இதில் திரிஷா நடிகையாக நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று திடீரென்று சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், உடனே இந்த செய்தி தீயாக பரவியது. இதற்கு நடிகர் அஜித்குமார் தரப்பில் சாதாரண பரிசோதனை என்று கூறப்பட்டது. ஆனால், நடிகர் அஜித் மூளை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

பரிசோதனைக்கு பின் நடிகர் அஜித்குமார் மூலையில் சிறிய கட்டி இருப்பதை கண்டறிந்து அதனை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  தற்போது அஜித் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூளையில் இருந்து காதுக்கு செல்லும் நரம்பில் வீக்கம் காரணமாக நேற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார் என்று தகவல் வெளியானது.

தமிழில் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானவர் அஜித்குமார். இவர் சினிமாவில் செல்லமாக தல என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். முன்னனி ரசிகர்கள் வரிசையில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் அஜித். சினிமா பின்புலம் இல்லாமல் ஒருவர் சினிமா துறையில் சாதித்து காட்டமுடியும் என்ற எடுத்துக்காட்டுக்கு உதாரணமானவர் அஜித். இவர் பைக், கார் என்று அணைத்து விளையாட்டிலும் சாதித்தவர் நடிகர் அஜித்குமார். சினிமாவில் கடின உழைப்பு மூலம் எட்டாத உயரத்தை எட்டியவர் அஜித்.

வருடத்திற்கு ஒருமுறை மட்டும் படத்தை வெளியிடும் அஜித்குமார். அந்த படமும் மிக பெரிய வெற்றியை அடையும். அதன் பிறகு தனது பைக்கை எடுத்துக்கொண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அடுத்த படத்தினை தேர்வு செய்வார். தான் நடிக்கும் படத்தில் சண்டை காட்சி என்றும் எதிலும் டூப் இல்லாமல் அவரே நடிப்பார் என்பது தெரிந்த ஒன்று. தன் படத்தில் அவரே நடிப்பது இயக்குனர்களுக்கும் வியப்பை ஏற்படுத்தும். திறமை கொண்ட அஜித் மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டது முதல் முறையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை அஜித் தனது உடலில் 14 முறை அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். முதுகுத்தண்டில் மட்டும் பல முறை, கல் மற்றும் மூளை என இதுவரை 14 முறை அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். நாள் ஒன்றுக்கு சுமார் 25 மாத்திரைகள் எடுத்துக்கொள்வாராம். தற்போது இந்த தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு செம்ம ஷாக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் தற்போது மூளை அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள அஜித் இன்று வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. அஜித் நலமுடன் இருக்க ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.